22-12-2018, 09:46 AM
திருட்டு பூட்டுக்கு காவல் எதற்கு? விஷால் ஆவேசம்!
''திருட்டுப் பூட்டுக்கு காவல் காக்கிறார்கள். அதிகாரம் இல்லாதவர்கள் எங்கள் அலுவலகத்திற்கு பூட்டு போட்டுள்ளனர். அதற்கு காவல் காக்கின்றனர்'' என்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க வந்த அச்சங்கத்தின் தலைவர் விஷால் ஆவேசமாகக் கூறினார்.
''என்னுடைய அலுவலகம், என்னுடைய பூட்டு ஏன் பூட்டு போடுகின்றனர். அதிகாரம் இல்லாதவர்கள் போட்ட பூட்டுக்கு பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். இதை எங்களால் நம்ப முடியவில்லை. பூட்டை உடைக்க என்னை அனுமதிக்கவில்லை. நாளை 7 படங்கள் திரைக்கு வர உள்ள நிலையில், அதுகுறித்த வேலையை செய்யத் தடுக்கின்றனர். உள்ளே ஆவணங்கள் உள்ளன. அவற்றுக்கு என்ன நடந்தது என்று தெரிய வேண்டும். சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது'' என்று போலீசாரால் கைது செய்யப்பட்ட பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் விஷால் தெரிவித்தார்.