22-12-2018, 09:33 AM
இந்த நிலையில், பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவை சேர்ந்த பாத்திமா பாபு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், `பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு வெளிவருவதற்கு முன்பாகவே தீர்ப்பு நகல் வேதாந்தா நிறுவனத்துக்குக் கிடைத்துவிட்டது. கடந்த 15-ம் தேதி மதியம் 2 மணிக்கு தீர்ப்பாய உத்தரவு நகல் வெளிவந்த நிலையில், அதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பாகவே அந்த நிறுவனத்துக்குக் கிடைத்துவிட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார். தீர்ப்பாயம் அறிவிக்கும் முன்னரே வெளியாகும் உத்தரவு செல்லாது என வழிகாட்டுதல் இருப்பதாகவும் பாத்திமா பாபு, தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை இன்று மதியம் விசாரித்த நீதிபதிகள், ``ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கும் நடவடிக்கைகளில் வேதாந்தாந்தா நிறுவனம் ஈடுபடக்கூடாது. நீதிமன்றம் உத்தரவிடும் வரை தற்போதைய நிலைதான் தொடர வேண்டும். இந்த வழக்கில் தமிழக தலைமைச் செயலாளர், ஸ்டெர்லைட் நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். இவ்வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம். பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து தமிழக அரசு அன்றைய தினம் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.