06-05-2019, 12:02 PM
நீ செய்ற காரியங்களால அங்க ஆதிக்கும் இங்க எனக்கும் எந்த பிரச்சனையும் ஆபத்தும் வரக்கூடாது. உன்னைபத்தியும் நீ யோசிக்கனும் ஒண்ணும் அவரசமில்லை எவ்ளோ நாள் வேணும்னாலும் எடுத்துக்க உன் ஏடிஎம்ல பணத்தை நான் போட்டுடறேன் பணத்தை பத்தி நீ யோசிக்க வேணாம்.
திரும்பி ஊருக்கு வரும் போது எந்த வித குழப்பமோ பயமோ இல்லாம நீ வரனும் தெளிவா யோசிச்சி ஒவ்வொரு அடியா எடுத்துவை புது ஊரு புது மனுஷங்க அங்க உனக்கு துணையா யார் இருப்பா”
”பாட்டி, அத்தை, ஆதி
”ஆதியை நம்பாத அவனால உன்கூட நிறைய நேரம் இருக்க முடியாது. ஆதியோட பாட்டி ஆதியை காப்பாத்த நினைக்கறாங்க அவங்க உனக்கு உதவி செய்வாங்க ஆதியோட அம்மாகிட்ட நீ பத்திரமா இருந்துக்க அந்த வீட்ல இன்னும் எத்தனை பேர் இருக்காங்கன்னு தெரியலை எத்தனை பேர் இருந்தாலும் சரி நீ எதிலேயும் மாட்டிக்காத”
”ஏன்ப்பா அப்படி சொல்றீங்க“
“நகைகள் வீட்டை விட்டு வெளியே போகலைன்னு ஆதி நம்பறான். அப்ப வீட்டுக்குள்ளதான் திருடன் இருக்கான் அவன் நல்லவனா சுத்தறான் அதான் ஆதியோட கண்ணுக்கு தெரியலை. ஆதி எல்லாரையும் தன் சொந்தமா பார்க்கறான் அதனால அவன் யாரையும் சந்தேகப்படலை ஆனா நீ எல்லார் மேலயும் சந்தேகப்படு
நீ அங்க ஆதியை மட்டும் நம்பி போற புரியுதா அதை மனசுல வைச்சிக்க அவனை கஷ்டப்படுத்திடாத ஏற்கனவே அவன் நொந்து போயிருக்கான் அவனை வேற ஏதாவது பிரச்சனையில மாட்டிவிட்டுடாத நீயும் மாட்டிக்காத அப்படி உன்னால தீர்க்க முடியாத பிரச்சனை வந்தா அங்கிருந்து கிளம்பி வந்துடு புரியுதா. லைப்ல நீ ஏற்கனவே ஒரு ரிஸ்க் எடுத்திருக்க இன்னொரு ரிஸ்க் எடுக்கறப்ப நாலாவிதமா இல்லைம்மா 400 விதமா யோசிக்கனும். சரி ஒரு விசயம் சொல்லு நீ அந்த ஆதியை புருஷனா பார்க்கறியா”
”அது தெரியலைப்பா சொல்ல தெரியலை எனக்கு இப்போதைக்கு எதுவும் தோணலைப்பா”
”சரிம்மா அதை விடு கடைசியா பார்த்துக்கலாம். எப்ப நீ கிளம்பற”
“அம்மா ஊருக்கு நாளைக்கு வராங்க சோ நான் இன்னிக்கே கிளம்பனும்”
”எப்படி போற”
”பஸ் இல்லைன்னா ட்ரெயின்”
”வேணாம் உனக்குன்னு வண்டியிருக்குல்ல அதுல போ”
”ஆனா அப்பா அந்த வீட்ல என்ன நினைப்பாங்க”
”நீ கார்ல போனாதான் அவங்க மதிப்பாங்க உன்கிட்ட வம்புக்கு வரமாட்டாங்க என் விசிடிங் கார்டு எடுத்துட்டு போ நம்ம கம்பெனி பத்தியும் சொல்லிவை. அப்பதான் உன்னை யாரும் தொந்தரவு செய்யமாட்டாங்க உன் பின்னாடி ஒரு அப்பன் இருக்கான் அவனுக்கு பெரிய கம்பெனியிருக்கு நீ பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவள்னு புரிஞ்சிக்குவாங்க சரியா”
சரிப்பா அப்படியே செய்றேன்”
“ஆமா நீ ஆதிக்கு ஃபோன் பண்ணியா இல்லையா”
”இல்லைப்பா முதல்ல உங்ககிட்ட சொல்லிட்டு அப்புறம்தான் ஃபோன் பண்ணலாம்னு இருக்கேன்”
”சரி நம்ம வீட்லயே லேண்ட் லைன் ஃபோன் இருக்கு இப்பவே ஃபோன் பண்ணு முதல்ல யார் எடுக்கறாங்கன்னு பார்க்கலாம்” என சொல்லவும் அவளும் தன் அறைக்கு சென்று ஆதி தந்த பேப்பர் கொண்டு வந்து தன் தந்தையிடம் நீட்ட அதிலிருந்த அட்ரசை அவர் தன்னுடைய பர்சனல் டைரியில் எழுதிக்கொண்டு அந்த ஃபோன் நெம்பரையும் தன் ஃபோனில் பதிவு செய்தவர். அந்த ஃபோன் நெம்பரை லேண்ட் லைனில் தட்டிவிட்டு ஸ்பீக்கர் ஆன் செய்தார்.
ரிங் போனது. 4 ரிங் அடித்த பின்னாடி போன் எடுக்கப்பட்டது. அந்த பக்கம் யாரும் பேசாமல் போக யாமினிக்கு குழப்பமாக இருந்தது. பேச்சுக்குரல் இல்லை யாரும் ஹலோ சொல்லவும் இல்லை என்ன செய்வது என குழப்பத்துடன் தன் தந்தையை பார்க்க அவரோ நிதானமாக சிரித்த முகத்துடன் இருந்தார். அவரின் சிரிப்பைக் கண்டவளுக்கு வியப்பு வந்தது. அவள் அவரிடம் சைகையில் என்ன என கேட்க அவர் உடனே ஆதி என மெதுவாக சொல்லவும் யாமினி கண்கள் விரிய ஆச்சர்யத்துடன் மெதுவாக
”ஹலோ ஆதி நான் யாமினி பேசறேன்” என்றாள் துணிந்து
அந்தப்பக்கம் பதில் இல்லாமல் போக அவளுக்கு எரிச்சல் வந்தது
”ஓய் பேசக்கூடாதுன்னுதானே சொன்னாங்க ம் கொட்டலாம்ல” என அவள் கத்தவும் சில நொடிகள் கழித்து
”ம்” என பதில் வரவும் நிம்மதி பெருமூச்சு விட்டாள். அவளின் செயலைக் கண்ட சோமசுந்தரத்திற்கு சிரிப்பு வர அவர் நிதானமாக அவளிடம் பேசு என சைகை செய்ய
”உங்கம்மா பக்கத்தில இருக்காங்களா” என்றாள்
”ம்”
”அவங்க கிட்ட கொடு நான் பேசனும்” என சொல்லவும் அதோடு அந்தப்பக்கம் அமைதி சில நிமிடங்கள் வரை எந்த பதிலும் இல்லாமல் போனது. சட்டென ஒரு பெண்குரல் மறுமுனையில் கேட்டது
”ஹலோ” என்றது
”ஹலோ நான் யாமினி பேசறேன் அத்தை”
“யாமினியா”
“நீங்க சுமித்ராதானே”
“ஆமாம்மா”
”நான் ஆதித்யவர்மனோட பொண்டாட்டி யாமினி பேசறேன் அத்தை” என அவள் சொல்லி முடிக்கவும் சோமசுந்தரத்திற்கு சிரிப்பை அடக்க முடியாமல் எழுந்து அந்த பக்கமாக சென்று நின்றுக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார். அவரின் சிரிப்பை கண்டு எரிச்சலானவள்
”என்னை மறந்துட்டீங்களா அத்தை”
”இல்லைம்மா நான் வர்ற அவசரத்தில உன் பேரைக் கேட்கலை அதான் சொல்லும்மா நீ எப்படியிருக்க”
”நான் நல்லாயிருக்கேன் இங்க என் வீ்ட்ல ஒரு பிரச்சனை”
”என்னம்மா பிரச்சனை உங்கப்பா ஒத்துக்கலையா”
”ஆமாம் நான் ஆதியை கூட்டிட்டு வந்து அவர் முன்னாடி நிப்பாட்டனும்னு சொல்றாரு அத்தை”
”அது எப்படி முடியும் ஆதி வரமாட்டானே”
”அதையும் சொன்னேன் ஆனா அப்பா ஒத்துக்கலை நான் நாளைக்கு ஊருக்கு வரேன் அத்தை”
“சரி வாம்மா நான் என் மாமியார் கிட்ட எல்லாத்தையும் சொல்லிடறேன் அப்புறம் உங்கப்பா பேரு என்னம்மா”
”சோமசுந்தரம்”
”சரிம்மா நான் எல்லாத்தையும் சொல்லிடறேன் ஆனா நீ எப்படி வர்ற பஸ்லயா”
”இல்லை நான் என் கார்ல வந்துடறேன் நோ ப்ராப்ளம் அங்க வந்து நான் யாரை பார்க்கனும்”
“நீ வந்ததும் யார் கேட்டாலும் என்னுடைய மாமியார் குணவதியோட சொந்தம்னு சொல்லு போதும் வேற எதையும் சொல்ல வேணாம் புரிஞ்சிதா”
”ம் புரியுது அத்தை இந்த ஃபோன் நெம்பரை சேவ் பண்ணி வைச்சிக்குங்க இது என் வீட்டு லேண்ட் லைன் நெம்பர்”
”சரிம்மா உன்னோட நெம்பர் இல்லையா”
”இருக்கு அத்தை அதையும் தரேன் ஆதிகிட்ட ஃபோன் கொடுங்க” என சொல்லவும் அவரும்
”இதோ தரேன்மா” என சொல்லிவிட்டு சில நிமிடங்களில்
”ம்” என்றான் ஆதி
”எங்கப்பா உன்னை கூட்டிட்டு வர சொன்னாரு அதனால நான் உன்னை தேடி அங்க வரேன்”
”ம்”
”நீ வருவல்ல”
”ம்ஹூம்”
”மாட்டியா ஏன் ஓ புரியுது உன் பிராப்ளம்தானே அதை நான் சரிபண்ணிட்டு உன் தண்டனையிலிருந்து உன்னை விடுதலை பண்ணிட்டா அப்ப என் கூட எங்கப்பாவை பார்க்க நீ வருவல்ல”
”ம்” என்றான்
”தாங்கஸ் நாளைக்கு நான் அங்க வரேன் நீ என்னை ரிசீவ் பண்ணுவியா” என ஆசையாக கேட்க
“ம்ஹூம்”
”சரி நானே வந்து தொலைக்கிறேன் போதுமா” என கோபமாக கத்த
”ம்” என்றான்
”நான் போன் வெச்சிடறேன்”
”ம்” என சொல்லிவிட்டு ஃபோன் கட் செய்துவிட்டான் ஆதி. ஆதியிடம் பேசி நொந்து போன யாமினி தன் தந்தையைப் பார்க்க அவரோ சிரித்துக் கொண்டு இருந்தார்
”அப்பா போதும் சிரிக்காதீங்க ப்ளீஸ்” என அவள் வெறுப்பாக சொல்லவும் சிரிப்பை அடக்கிக் கொண்டே ப்ரிட்ஜில் இருந்த தண்ணீரை குடித்துக் கொண்டே வந்து சோபாவில் அமர்ந்தார்.
”நல்ல ஜோடி பொருத்தம் நீங்க. நீ வாய் திறந்தா மூட மாட்ட அவன் பேசவே மாட்டேங்கறான். எப்படித்தான் இரண்டு பேரும் குடும்பம் நடத்தப்போறீங்களோ”
”இதுக்கெல்லாம் அந்த நேத்ரன்தான் காரணம்”
”நேத்ரன் இல்லை இது கடவுளோட விளையாட்டு.”
”இது என்ன விளையாட்டு சே” என அலுத்துக்கொள்ள
”அலுத்துக்காத யாமினி கடவுள் படைக்கறப்பவே இன்னார்க்கு இன்னார்ன்னு எழுதி வைச்சிருப்பார். அது உன் விசயத்தில உண்மையாயிடுச்சி. கவனிச்சியா நீ சென்னையில இருக்க அந்த பையன் கடலூர்ல இருக்கான் நீங்க இரண்டு பேரும் மீட் பண்ணது கொடைக்கானல்ல இது ஒரு முக்கோணம் போல இல்லை”
”அப்பா ப்ளீஸ்” என வெறுப்பாக சொல்ல
இல்லை யாமினி யோசிச்சி பாரு சென்னையில இருக்கற நீ டூருக்காக கொடைக்கானல் போன அங்க ஆதியை ஏன் பார்த்த சரி அவனை பார்த்த அவனா உன்கிட்ட வந்தான் நீதானே அவனுக்கு உதவி செய்றேன்னு 3 தடவை போய் நின்ன அப்பகூட அவன் உன் பக்கம் வரலை நீயாதான் பாதுகாப்பு வேணும்னு அவன் ரூமுக்கு போன அப்புறம் எதிர்பாராத விதமா உன் வாயாலயே நீ மாட்டிக்கிட்ட”
”நானா என் வாயாலயா என்ன சொல்றீங்க”
”ஆமாம் உன்னை யாரு அவனை ஹஸ்பென்ட்ன்னு சொல்லச் சொன்னது அதனாலதானே அந்த போலீஸ் நம்பாம உன்னை இழுக்கவும் வேற வழியில்லாம ஆதியும் உனக்கு தாலி கட்டினான் நீ அவனை அண்ணான்னு ஏன் சொல்லலை”
அண்ணன்னா அப்பா நீங்க வேற அன்னிக்கு நீங்க அவனை பார்த்திருக்கனுமே துணி ஈரமாயிடுச்சின்னு வேட்டி சட்டையை காய வைச்சிட்டு ஜட்டியோட இருந்தான். அவனை அப்படிப் பார்த்தா அண்ணான்னு நான் சொன்னாலும் யாரும் அதை நம்ப மாட்டாங்கப்பா”
”சரிம்மா எனக்கென்னவோ இது கடவுள் போட்ட முடிச்சுன்னு தோணுது. அவனை அந்த அடிமைதளையிலிருந்து காப்பாத்த வந்த தேவதை நீதான்னு தோணுது”
”எனக்கு தெரியலைப்பா அவனாலயே அந்த நகைகளை கண்டுபிடிக்க முடியாதப்ப என்னால எப்படி முடியும்”
”வெளியாளுங்களுக்குதான் வித்தியாசம் தெரியும்”
”ம் பார்க்கலாம் ஆனா இந்த ஆதியோட எப்படிதான் நான் இருக்கப்போறேன்னு தெரியலை”
”நீ எதுக்கு அவன் கூட இருக்க தனியா அந்த வீட்ல இரு” என சிரித்துக்கொண்டே சொல்ல
”தனியாதான் இருக்கேன் ஆனா அந்த நகைகளை கண்டுபிடிக்க அவன் உதவி வேணுமே”
”அந்த தப்பை மட்டும் செய்யாத அவன் உதவி உனக்கு வேணாம்”
”ஏன் அப்படி சொல்றீங்க”
”அவன் மேல பழியை போட்டிருக்காங்க அவனை நீ உதவிக்கு கூப்பிட்டா திருடினவன் அலார்ட்டாகி உன்னை விரட்ட உன் மேலயே வேற பழியை போட்டுட்டா என்ன செய்வ”
”வாவ் அப்பா பேசாம நீங்க டிடெக்டிவ்வா ஆயிடலாம் என்னமா யோசிக்கிறீங்க”
என அவள் மெச்சிக் கொள்ளவும் அவருக்கு சிரிப்பு வந்தது
”அடப்போம்மா நீ வேற ஏதோ எனக்கு தோணினதை நான் சொன்னேன் சரி வேற டாபிக் பேசலாம் ஆமா ஆதி எப்படியிருப்பான்”
”எப்படியிருப்பான் காட்டன் மாதிரியிருக்கான்”
”காட்டானா” என வியந்தவரிடம்
”ஆமாப்பா நல்ல உயரம் கட்டுமஸ்தான உடம்பு தினமும் உடற்பயிற்சி செய்வான் போல அவனோட மசில்ஸ் பார்க்கனுமே அவன் போடற சட்டை கையை கிழிச்சிடும் அப்படி இறுக்கமா ட்ரெஸ் போட்டிருப்பான். முறுக்கு மீசை எதுக்குதான் வெச்சிருக்கானோ மாநிறமா இருக்கான்.”
”அவ்ளோதானா”
“ஆமாம் வேற என்ன சொல்றது இதுவே ஜாஸ்திப்பா”
”அவன் குணத்தை பத்தி சொல்லுமா”
”நல்லவன் அவ்ளோதான்”
”உன்னை கல்யாணம் பண்ணி காப்பாத்தினதால அப்படி சொல்றியா ஒருவேளை அவன் திருட்டுப்பழியால நல்லவனா இருந்து நகைகள் கிடைச்சதும் கெட்டவனா மாறிட்டா அப்ப உன் நிலைமை”
”அப்பா அப்படியெல்லாம் இல்லை எனக்கு தெரியும் அவன் நல்லவன்தான்” என அவள் கத்தவும் அவர் சிரித்துக்கொண்டே
”சரி சரி விளையாட்டுக்கு ஜோக் பண்ணேன் விடு நல்லா கவனி அவனை இங்க கூட்டிட்டு வர்ற வரைக்கும் அவனோட நீ ஒண்ணாயிடாத”
”அப்படின்னா” என்றாள் புரியாமல்
”அதான்மா எப்படி சொல்றது உன்கிட்ட எப்படி சொல்றது”
”அட சொல்லுங்கப்பா நான் உங்க பொண்ணுதானே”
”ஆமாம் நீ என் பொண்ணாச்சே சரி அதான் முதலிரவு” என தயக்கத்துடன் சொல்ல
”அப்பா” என அவள் மறுபடியும் கத்தவும் அவர் சரண்டர் ஆனார்
”சரிம்மா கத்தாத ஏதோ தோணிச்சி சொன்னேன் போதுமா”
”நானே குழம்பி போய் இருக்கேன் எந்த ஐடியாவும் இல்லாம அவனை நம்பி நான் அந்த வீட்டுக்கு போகப்போறேன் கடவுள்தான் என்னை காப்பாத்தனும் இதுல முதலிரவு ஒண்ணுதான் குறைச்சல் போங்கப்பா நான் போய் என் டிரஸ்ஸை பேக் செய்றேன் நேரத்தோட கிளம்பனும் உங்க கூட பேச நேரமில்லை” என அவசரமாக சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்து தன் அறைக்கு சென்றுவிட்டாள். அவள் சென்றதும் சிரித்த சோமசுந்தரம் தன் மனதில்
”அவனை பிடிக்கலைன்னாலும் அவனை நல்லா பார்த்து வைச்சிருக்காளே முதலிரவுன்னு சொன்னா கோபப்படற புது ஊரு தனியா அங்க அவனோட வாழப்போறாளே என்ன செய்வாளோ தெரியலை நடக்கறது எதுவும் சரியில்லையே தாலி கழட்டமாட்டேங்கறா தாலியோட அந்த வீட்ல போய் வாழப்போறா பொண்டாட்டிங்கற உரிமையில ஆதி ஏதாவது செஞ்சிட்டா எதுக்கும் நான் ஆதிகிட்ட முதலிரவை பத்தி சொல்லி வைக்கனும் ஊரறிய தாலி கட்டின விசயம் தெரியவரைக்கும் எதுவும் செய்யக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்லனும் அவன் நல்லவன்னு இவள் சொல்றாளே அப்படின்னா நான் சொன்னா அவன் புரிஞ்சிக்குவான் இவள்ட்ட இப்ப சொல்றதால சண்டைதான் வரும் முதல்ல அவள் ஊருக்கு போகட்டும் அப்புறமா நான் ஆதிகிட்ட இதப்பத்தி பேசறேன்” என தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டார் சோமசுந்தரம்