என் வாழ்வே உன்னோடுதான் -சசிரேகா
#23
தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 03 - சசிரேகா
[Image: evut.jpg]
யாமினியும் பஸ் மூலம் கொடைக்கானல் விட்டு இறங்கி மதுரை வந்தவள் அங்கிருந்து பிளைட் மூலம் சென்னைக்கு திரும்பி தன் வீட்டிற்குச் சென்றாள்.
பயத்துடனும் குழப்பத்துடனும் வீட்டிற்குள் சென்றவள் ஹாலில் அவளுடைய தந்தை சோமசுந்தரம் இருக்கவே அவரிடம்”அப்பா” என மெதுவாக அழைத்தாள்.

அவளைப்பார்த்த அவரும் சிரித்துக்கொண்டே
”என்னம்மா டூர் நல்லபடியா முடிஞ்சிடுச்சா” என கேட்க அவளும் ஆம் என மெதுவாக தலையாட்டினாள்.
”சரி சரி போம்மா போய் ரெஸ்ட் எடு அம்மா வீட்ல இல்லை அவளோட அம்மா வீட்டுக்கு போயிருக்கா”
”அப்பா நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும்” என அவள் தயங்கி தயங்கி சொல்ல
”ம் தெரியும்மா உன் ப்ரெண்ட் காவேரி சொன்னா உன்கூட வேலை செய்றவனே உன்னை தொல்லை செஞ்சான்னு அதான் நானும் உன் கம்பெனிக்கு ஃபோன் செஞ்சி இனிமே நீ வரமாட்டேன்னு சொல்லிட்டேன். வேணாம்மா நீ ஏன் இப்படி வேலைக்கு போய் கஷ்டப்படனும் நம்ம கம்பெனியிருக்கு அங்க போ வேலைக்கு”
”இல்லப்பா நம்ம கம்பெனியில பெரிசா எந்த பிரச்சனையும் வரலை பொழுதுக்கும் போர் அடிக்குது அதான் நான் அப்படியே வேற இடத்தில வேலை செஞ்சா புதுசு புதுசா அனுபவம் கிடைக்கும் போர் அடிக்காதுன்னு நினைச்சேன்”
”சரி விடும்மா இனிமே நீ அங்க வேலைக்கு போக வேணாம்”
”அப்பா”
”என்னம்மா வேற எங்கயாவது வேலைக்கு போகனும்னு ஆசைப்படறியா”
“இல்லைப்பா”
”அப்ப கல்யாணம் செஞ்சிக்கிறியா”
அப்பா அதைப்பத்திதான் உங்க கிட்ட பேசனும்”

”சரி ஏன் இப்படி நின்னுக்கிட்டு இருக்க உட்காரு நான் உன் அப்பாதானே என்கிட்ட ஃப்ரீயா பேசு உன் மனசுல கல்யாணத்தை பத்தி என்னென்ன எதிர்பார்ப்புகள் வெச்சிருக்கன்னு சொல்லு நீ ஆசைப்படற மாதிரியே ஒரு பையனை நான் தேடிப்பிடிக்கிறேன் சீக்கிரமா உனக்கு கல்யாணம் செஞ்சி வைக்கிறேன்”

”அப்பா அது வந்து எப்படி சொல்றதுன்னு தான் தெரியலை நடந்த விசயத்தை சொன்னா நீங்க எப்படி எடுத்துக்குவீங்கன்னு எனக்குப் புரியலை”

”என்ன நடந்திச்சி என்ன விசயம் சொல்லும்மா தயங்காம சொல்லு இப்ப சொல்லாம பின்னாடி ஒரு நாள் சொல்லலாம்னு நினைச்சி விட்டேன்னா அதுவே இன்னொரு பெரிய பிரச்சனையில வந்து முடியும் அதனால எதுவாயிருந்தாலும் இப்பவே தயங்காம சொல்லிடு” என அவர் கண்டிப்பாகவும் அதே நேரம் கோபமாகவும் கேட்கவும் அவர் அவளிடம் ஆதியை பார்த்தது முதல் கடைசி வரை எதையும் விடாமல் ஒரு விசயத்தையும் மறக்காமல் சொன்னாள்.

முழுவதும் கேட்டுக் கொண்டிருந்தவர் அவளிடம்

”எங்க உன் மானம் போயிடுமோன்னு அந்த ஆதி உனக்கு தாலி கட்டி காப்பாத்தியிருக்கான் சரி அப்புறம் அவனே அதை கழட்டவும் நினைச்சிருக்கான் ஏன்”

”ஏன்னா அவனை மாதிரி நான் எங்க அந்த வீட்ல வேலைக்காரியா ஆயிடுவேனோன்னு நினைச்சிருக்கலாம் இல்லை யாருக்கும் தெரியாம கட்டின தாலிதானே அதுக்கு மதிப்பு இல்லைன்னு நினைச்சிருக்கலாம் இல்லை என்னை பிடிக்காம கூட இருக்கலாம் அவன் பேசாம இருக்க இருக்க எனக்கு இப்படிதான் தோணுதுப்பா”

“ம் ஆதி செஞ்சது சரிதான் உன் மானத்துக்காக கட்டின தாலியை உன் எதிர்காலத்தை கவனத்தில வெச்சி கழட்ட நினைச்சான் ஆனா நீ அதை தடுத்திட்ட ஏன் என்ன காரணம்”

”அம்மா சொல்வாங்கப்பா தாலி புனிதமானதுன்னு அதான் அதை நான் கழட்ட நினைக்கலை”

”ஒருவேளை அவன் தாலி கட்டாம போயிருந்தா என்னாயிருக்கும்”

”போலீஸ் கேஸ் ஆயிருக்கும் என்னை தேடி நீங்க அங்க வந்திருக்க வேண்டிய நிலைமை வந்திருக்கும்”

”நீ போலீஸ்கிட்ட மாட்டினப்ப எனக்கு ஃபோன் பண்ணியிருந்தா கூட நான் உன்னை காப்பாத்தியிருப்பேனே”

”அந்நேரம் எனக்கு எதுவுமே தோணலைப்பா ஒரே டென்ஷன்”

”சரி விடு ஆனது ஆச்சி ஆதி தெளிவாயிருக்கான் அவன் செஞ்சத பார்த்தா எனக்கு தப்பா தெரியலை நீ சொல்றதும் சரியாதான் இருக்கு ஆனா உனக்கு தாலி கட்டினதுக்கு சாட்சி அந்த போலீஸ்காரங்கதான் அவங்ககிட்ட பணத்தை கொடுத்து வாயை மூட வைச்சிடலாம். இப்ப உன் முடிவுதான்மா ஒண்ணு இந்த தாலியை கழட்டிட்டு நான் பார்க்கற மாப்பிள்ளையை நீ கல்யாணம் செஞ்சிக்கனும்” என அவர் சொல்லி முடிப்பதற்குள் அவசரமாக யாமினியோ

”அது முடியாதுப்பா”



”அப்ப நீ ஆதிகிட்டதான் போகனும்”
”அங்கயா அப்பா நான் போனா என்னையும் அவங்க வீட்ல அடிமையாக்கிடுவாங்களே” என கவலையாக சொல்ல
”அப்ப நீ போய் அவனை கூட்டிட்டு இங்க வந்துடு இந்த கம்பெனி பொறுப்புகளை பார்த்துக்க ஆள் வேணும் எனக்கும் பீபி சுகர் வந்திடுச்சி டாக்டர் என்னை ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டாரு”

”அதான் நான் இருக்கேனேப்பா”
”உன்னால முடியாதும்மா பிரச்சனை வந்த சமயத்தில உன்னால உன்னையே காப்பாத்த முடியாதப்ப கம்பெனியை உன் பொறுப்புல விட முடியாது. அப்படியே நான் உன்கிட்ட ஒப்படைச்சாலும் நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சி யார் உன் புருஷன்னு எல்லோரும் கேள்வி கேட்டா நான் என்ன பதில் சொல்வேன் சொல்லு உன்னை யார் கேட்டாலும் நீ என்ன பதில் சொல்வ அதைச் சொல்லு”
தெரியலப்பா அதான் குழப்பமா இருக்கு வீட்லயே இருந்திட்டா யாரும் கேள்வி கேட்கமாட்டாங்க”

”அது உனக்குதான் நான் வெளிய இருக்கேன் நாலு இடங்களுக்கு போறேன் இந்த சொசைட்டி என்கிட்ட கேள்வி கேட்கும் எப்ப உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணப் போறீங்கன்னு நான் என்ன பதில் சொல்லட்டும்”

”தெரியலைப்பா என்னால இப்ப எதுவுமே யோசிக்க முடியலை. எல்லாமே அந்த நேத்ரனால வந்தது. அவன் வராம இருந்திருந்தா நான் இப்படி கஷ்டப்பட்டிருக்க மாட்டேன்”

”நடந்தது நடந்து போச்சி இனி நடக்க வேண்டியதை யோசிப்போம். கடைசியா கேட்கறேன் இந்த தாலியை நீ வெச்சிக்கப்போறியா கழட்டபோறியா”

”என்னால கழட்ட முடியாதுப்பா ஆதிக்காக இப்படி சொல்லலை ஏனோ தெரியலை நான் இதை புனிதமா பார்க்கறேன்”

”சரி அப்ப நீ ஆதிகிட்ட போ. அவனை கூட்டிட்டு இங்க வா நான் பார்க்கனும்”

”அவன் வரமாட்டானே அந்த நகைகள் எப்ப கிடைக்கறது அவன் எப்ப இங்க வர்றது”

”அது உன் பிரச்சனை அவனுக்கு போய் உதவி பண்ணு அவனை நல்லவனா காட்டிட்டு கையோட கூட்டிட்டு இங்க வந்துடு இங்கயே இருக்கட்டும் என் பொறுப்புகளை அவன் பார்த்துக்கட்டும்”

”இங்கயா அப்பா இங்கயே ஏற்கனவே நிறைய பிரச்சனைகள் இருக்கு உங்களுக்கே தெரியும்ல”

”தெரியும்மா அதை சரிபண்ணனும்னா ஆதி வரனும் அவன் வந்தா சரியாயிடும்”

”எனக்கு அப்படி தோணலைப்பா”
”இப்ப நடக்கறத பார்த்தா நான் சொல்றதுதான் சரி நல்லா யோசி தெளிவா முடிவெடு அவசரம் இல்ல போ உன் ரூமுக்கு போய் ரெஸ்ட் எடு அப்புறம் ஒரு விசயம் உங்கம்மாகிட்ட இதை சொல்லாத அப்புறம் வீட்ல இருக்கறவங்க கிட்டயும் இதை சொல்லிடாத”
ஏன்பா”

”உன் அம்மா தன் தம்பியை உனக்கு கட்டிவைக்கிறதா பேசதான் இப்ப அவள் அம்மா வீட்டுக்கு போயிருக்கா நீ இப்படி செஞ்சிட்டு வந்திருக்கறது தெரிஞ்சா பெரிசா பிரச்சனையாகும்”

”சரிப்பா நான் யார்கிட்டயும் எதையும் சொல்லலை நான் போய் ரெஸ்ட் எடுக்கறேன்” என சொல்லிவிட்டு அவள் அறைக்கு சென்று தன் லக்கேஜ்களை வைத்தவள் கட்டிலில் படுத்துக் கொண்டு கண்கள் மூடி இந்த 2 நாள் நடந்ததை நினைத்துப் பார்த்தாள்.

யாமினியால் எதையுமே சட்டென முடிவெடுக்க முடியவில்லை ஒரே குழப்பம் பயம் என அவள் மனதை அலைக்கழிக்க ஆரம்பித்தது. நல்ல வேளையாக அவளுடைய அம்மா 3 நாட்கள் கழித்து வருவதாக சொல்லியிருந்ததால் அவள் 3 நாட்களும் தன் வாழ்க்கையை பற்றி யோசிக்கலானாள்.

சோமசுந்தரமோ தன் மகளின் எதிர்காலத்தை அவள் கையிலே கொடுத்திருந்தாலும் உள்ளுக்குள் ஒருவித அச்சத்துடனே அலைந்தார். அவரின் முகத்தை பார்த்த யாமினியும் அவரின் அச்சத்தை அறிந்துக் கொண்டு கவலைப்பட்டாள். 3 நாட்களாக யோசித்து யோசித்து 4வது நாள் தன் அப்பாவிடம் சென்று பேசினாள்



”அப்பா நான் முடிவு செஞ்சிட்டேன் இப்ப நான் ஆதிகிட்ட போறேன் அவரோட மனைவியா இல்லை அவர் பாட்டியோட சொந்தக்கார பொண்ணா போறேன். எப்படியாவது என்னால அந்த நகைகளை கண்டுபிடிக்க முடியுதான்னு பார்க்கறேன். அப்படி நான் கண்டுப்பிடிச்சி அதை கொடுத்துட்டா ஆதியை விட்டுடுவாங்க அவர் மேல இருக்கற திருட்டுப்பழி போயிடும் நான் அவரை கையோட இங்க கூட்டிட்டு வந்துடறேன். ஒரு வேளை என்னால ஆதியை காப்பாத்த முடியலைன்னா திரும்பி ஊருக்கு வந்துடறேன். நீங்க சொல்ற பையனை நான் கல்யாணம் செஞ்சிக்கிறேன் ஆனா இதெல்லாம் நடக்கனும்னா கொஞ்சம் மாசங்களாவது ஆகும்னு தோணுது ஏன்னா 5 வருஷமா தேடின ஆதிக்கே நகைகள் கிடைக்காதப்ப எனக்கு கிடைச்சிடும்னு உறுதியா சொல்ல முடியாது அதான் நீங்க என்ன சொல்றீங்கப்பா” என தயக்கமாக அதே சமயம் உறுதியான பார்வையுடன் கேட்ட மகளைப்பார்த்தவர்
“சரிம்மா தாராளமா போ நீ இந்தளவுக்கு தெளிவானதே பெரிசு உனக்கு ஏதாவது உதவி தேவைன்னா இப்பவாவது உங்கப்பாவை கேளு மறந்துடாத நான் இன்னும் உன் பக்கம்தான் இருக்கேன் அந்த ஊருக்கு போயி யாருமில்லாம தனியாளாயிட்டோம்னு நினைச்சிடாத. ஊருக்கு போனா நாள் முழுக்க என்ன நடந்திச்சின்னு தினமும் எனக்கு நைட்ல ஃபோன் பண்ணி சொல்லு அப்பதான் என்னாலயும் இங்கிருந்துகிட்டே உனக்கு உதவி செய்ய முடியும் நீயா பெரிய ஜான்சி ராணி மாதிரி எதையாவது செஞ்சி மாட்டிக்காத. எதையுமே யோசிச்சி செய் நிதானமா செய்
Like Reply


Messages In This Thread
RE: என் வாழ்வே உன்னோடுதான் -சசிரேகா - by johnypowas - 06-05-2019, 11:55 AM



Users browsing this thread: 2 Guest(s)