06-05-2019, 11:16 AM
கொல்கத்தா வெளியேறியதால் ஐதராபாத்துக்கு அடித்தது அதிர்ஷ்டம்!
ஐபிஎல் தொடரின் கடைசி லீக் சுற்றுப் போட்டியில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்து வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.
12 வது ஐபிஎல் தொடர் மார்ச் 23 ஆம் தேதி தொடங்கி, பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் 56 லீக் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன. கடைசி லீக் போட்டியில் மும்பை -கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்று போட்டிக்கு முன்னேறியுள்ளன.
கடைசி லீக் போட்டியில், கொல்கத்தா அணி வெற்றி பெற்றிருந்தால், பிளே ஆப் சுற்றில் அந்த அணியும் இடம் பிடித்திருக்கும். ஆனால், தோல்வி அடைந்ததை அடுத்து பிளே ஆப் ஆட்டத்தில் இருந்து வெளியேறியது. இதனால் ஐதராபாத் அணிக்கு அடுத்த சுற்று அதிர்ஷ்டம் கிடைத்தது.
லீக் சுற்று முடிவில் ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தன. ஆனால், ரன் ரேட்டில் முன்னிலை பெற்றதால் 4-வது அணியாக பிளே-ஆப் சுற்றில் இடம்பெற்றது ஐதராபாத் . ஐ.பி.எல். வரலாற்றில் 12 புள்ளியுடன் ஒரு அணி, அடுத்த சுற்றை எட்டுவது இதுதான் முதல் முறை