06-05-2019, 11:13 AM
வேலூரில் 110 டிகிரி வெயில்: 10 நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் பதிவு
தமிழகத்தில் நேற்று 10 நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவானது. அதிகபட்சமாக வேலூரில் 110 டிகிரி வெயில் பதிவானது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவின்படி அதிகபட்சமாக வேலூரில் 110 டிகிரி, திருச்சி, திருத்தணி ஆகிய இடங்களில் தலா 108 டிகிரி, கரூர் பரமத்தியில் 106 டிகிரி, மதுரை, பாளையங்கோட்டையில் தலா 105 டிகிரி, தருமபுரியில் 104 டிகிரி, சேலத்தில் 103 டிகிரி, சென்னை விமான நிலையத்தில் 102 டிகிரி, பரங்கிப்பேட்டையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 14 செமீ, திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் 7 செமீ, திருத்தணியில் 2 செமீ மழை பதிவாகியுள்ளது.
ஆந்திரா, தெலங்கானா போன்ற பகுதிகளில் வலுவான வெப்ப அலை வீசி வருகிறது. தமிழகத்திலும் சில இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. அதனால் அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்ப அலை நீடிக்கும். ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
இவ்வாறு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.