06-05-2019, 11:12 AM
இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்
காஸா:மேற்கு ஆசிய நாடான, பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர், 24 மணி நேரத்தில், இஸ்ரேல் மீது, 450 ராக்கெட்டுகளை ஏவி, தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, அங்கு பதற்றம் நிலவி வருகிறது.மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கம் இடையே, பயங்கர சண்டை நடந்து வருகிறது. கடந்த ஆண்டு நடந்த சண்டையில், 270க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே உள்ள காஸா முனையில் இருந்து, பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது நேற்று தாக்குதல் நடத்தினர்.அப்போது, 24 மணி நேரத்தில், 450 ராக்கெட்களை ஏவி, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேல் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது.
பயங்கரவாதிகளின், 200 இருப்பிடங்கள் கண்டறியப்பட்டு, தாக்குதல் நடத்தப்பட்டதாக, இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.இதில், பாலஸ்தீனத்தை சேர்ந்த கர்ப்பிணி, ஒன்றரை வயது குழந்தை உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாக, காஸா அதிகாரிகள் தெரிவித்தனர். எல்லை பகுதியில், இஸ்ரேல், படைகளை குவித்துள்ளதால், பதற்றம் நிலவுகிறது.