Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நள்ளிரவில் 4 ரயில்களில் பெண்களிடம் 24 பவுன் கொள்ளை 
[Image: trainsjpg]

பாலம் மராமத்து பணிக்காக ரயிலின் இயக்க வேகம் குறைப்பதைப் பயன் படுத்தி சேலம் அருகே அடுத்தடுத்து 4 ரயில்களில் பெண்களிடம் 24 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் நேற்று அதிகாலை 12.30 மணிக்கு மயிலாடுதுறை - மைசூர் விரைவு ரயில் மாவேலிபாளையம் அருகே வந்தது.
அப்போது, அந்த ரயிலில் முன்பதிவு செய்த பெட்டியில் பயணம் செய்த தஞ்சையைச் சேர்ந்த விநோதினி என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் சங்கிலியும், அம்பிகா என்பவர் அணிந்திருந்த 3 பவுன் செயினையும் வட மாநில மர்ம கும்பல் பறித்துகொண்டு, ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பிச் சென்றனர்.
ஒரே இடத்தில் நடந்த சம்பவம்
அதே வழித்தடத்தில் அதிகாலை 1.05 மணிக்கு சென்ற கோவை-சென்னை செல்லும் சேரன் விரைவு ரயிலில் கோவையைச் சேர்ந்த விமலா என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன்நகையை மர்ம கும்பல் பறித்துக் கொண்டு, ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பியது. மீண்டும் அதே வழித்தடத்தில் சென்ற கொச்சுவேலி - பெங்களூரு விரைவு ரயிலில், சென்னையைச் சேர்ந்த அருண்கிருஷ்ணன் என்பவரது மனைவியிடம் இருந்து 3 பவுன் நகையும், ஆழப்புழா - சென்னை விரைவு ரயிலில் ஒரு பெண்ணிடம் 3 பவுன் நகையையும் மர்ம கும்பல் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றது.
ஒரே நாளில் அடுத்தடுத்து நான்கு விரைவு ரயில்களில் பயணம் செய்த பெண் களிடம் மொத்தம் 24 பவுன் நகையை மர்ம கும்பல் பறித்துச் சென்றது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சில வெளிமாநில பெண்கள், பயணம் தாமதப்படும் என்பதால் புகார் கொடுக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து சேலம் மற்றும் ஈரோடு ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை பறிப்பு சம்பவம் நடந்த பகுதியில் ரயில்வே பாலம் மராமத்து பணி நடந்து வருகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் ரயில்கள் 20 கிமீ வேகத்தில் சென்று வருவதால், இதை பயன்படுத்தி மர்ம கும்பல் நகையை பறித்துக்கொண்டு ஓடும் ரயிலில் இருந்து குதித்துஎளிதாக தப்பிச் சென்றுள்ளனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. 4 அல்லது 5 பேர் வரை இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என பயணிகள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
மர்ம கும்பல் சாலை மார்க்கமாக தப்பிக்க வாய்ப்பு இருப்பதால், மாநிலம் முழுவதும் உள்ள சோதனைச்சாவடி, எல்லைப் பகுதிகள் மற்றும் ரயில் நிலையங்களில் ரயில்வே போலீஸார் மற்றும் உள்ளூர் போலீஸார் உஷார் படுத்தப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கதவை மூடாததால் ஆபத்து
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி முத்துக்குமார் கூறும்போது, “சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பணிபுரியும் பயணச்சீட்டு பரிசோதகர்கள் ரயில் பெட்டியில் கதவுகளை தாழிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், பயணிகள் காற்றுக்காக கதவுகளை திறந்து வைத்துக் கொள்கின்றனர். மேலும், விலை உயர்ந்த ஆபரணங்கள், அணிகலன்களை அணிந்து ரயிலில் பயணம் செய்ய வேண்டாம் என பல முறை விழிப்புணர்வு செய்தும், பயணிகள் நகைகள் அணிந்தபடியே பயணம் மேற்கொள்கின்றனர். பாலப் பராமரிப்பு பணி ஆங்காங்கே நடந்து வருகிறது. அதனால், அப்பகுதியில் ரயில்கள் மிக மெதுவாகவே கடந்து செல்ல வேண்டிய கட்டாயம். அதுபோன்ற பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பை பலப்படுத்திட வேண்டும்” என்றார்.
100 பவுன் கொள்ளையா? - காவல்துறை மறுப்பு
கொள்ளை சம்பவம் நடந்த பகுதியான சேலம் மாவட்டம் சங்ககிரியில் இருந்து ஈரோடு செல்லும் வழித்தடத்தில் உள்ள மாவேலிபாளையம் பகுதி இரு மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளது. மாவட்ட எல்லை பகுதியில் அதிகம் கண்காணிப்பு பணி மற்றும் பாது காப்பு பணியில் போலீஸார் ஈடுபடுவ தில்லை. இது மர்ம கும்பலுக்கு சாதகமாக இருந்ததால் அடுத்தடுத்த ரயில்களில் கொள்ளை நடந்துள்ளது.
ரயில் கொள்ளையரிடம் நகையை பறி கொடுத்த 5 பேரும் சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் நேற்று காலை புகார் அளிக்க வந்தனர். ஆனால், சம்பவம் நடந்த இடம் ஈரோடு மாவட்டம் மாவேலிபாளையம் பகுதியில் வருவதால், ஈரோடு ரயில்வே காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பல பயணிகளிடம் இருந்தும் நூறு பவுனுக்கு மேல் நகையை மர்ம கும்பல் பறித்திருக்க வாய்ப்புள்ளது. தூக் கத்தில் இருந்த பயணிகள் நகை பறிபோனது தெரியாமல் தொடர்ந்து பயணம் செய்திருக் கலாம். அதேபோல, நகை பறிகொடுத்த பயணிகள் முக்கிய வேலை, அவசர, அவசிய பயணத்தை கருத்தில் கொண்டு, காவல் நிலையத்துக்கு புகார் அளிக்காமல் சென்றிருக்க வாய்ப்புள்ளதாக பயணிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சேலம் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் இளவரசி கூறும்போது, “ நகை கொள்ளை சம்பவத்தில் நூறு பவுன் நகை பறிபோனதாக புகார் வரவில்லை. நகை திருடுபோனதாக பாதிக்கப்பட்ட சில பெண்கள் மட்டுமே புகார் தந்துள்ளனர். கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 06-05-2019, 11:10 AM



Users browsing this thread: 93 Guest(s)