Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
யோகி பாபுவின் மதிப்பு ரியல் எஸ்டேட் மாதிரி: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா

[Image: gnanavel-raja-yogi-babujpg]

இன்னிக்கு யோகி பாபுவின் மதிப்பு ரியல் எஸ்டேட் மாதிரி எனத் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.
முத்துக்குமரன் இயக்கத்தில் யோகி பாபு, கருணாகரன், ஜனினி ஐயர், ரமேஷ் திலக், ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தர்மபிரபு'. யோகி பாபு பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகும் முதல் படம் இதுவாகும். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது இவ்விழாவில் யோகி பாபு நடித்த படங்களின் இயக்குநர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, “இன்னிக்கு யோகி பாபுவின் மதிப்பு ரியல் எஸ்டேட் மாதிரி. நீங்க ஒரு நாளைக்கு 5 லட்சம்தான் சம்பளம் வாங்குறீங்கனு சொல்லிடணும். 10 லட்சம், 15 லட்சம் வாங்குறீங்கனு அவனவன் பயத்துல இருக்கான்.
யோகி பாபு, ரஜினி சார் கூட படம் நடிக்கிறார் என செய்திகள் வந்தன. அப்படின்னா கண்டிப்பா ரஜினி சார் யோகி பாபுவைப் புகழ்ந்து தள்ளிடுவார். அடுத்து படம் தயாரிக்கிறவர்கள் எல்லாம் செத்தான் அப்படினு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனால், ‘தர்மபிரபு’ ட்ரெய்லரில் ரஜினி சாருக்கே ஒரு டயலாக் வச்சுருக்காங்க. அடுத்த ஷெட்யூல்ல ரஜினி சாரை சந்திக்கும்போது யோகி பாபுவுக்கு இருக்கு” என்று நகைச்சுவையாகப் பேசினார்.
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 05-05-2019, 10:43 AM



Users browsing this thread: 2 Guest(s)