Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
ஆன் லைனில் அறிமுகம்; வீடியோ எடுத்த இளம் பெண்'- சிக்கலில் சென்னை டாக்டர் 

[Image: arrest_logo_17365.jpg]

சென்னை திருவான்மியூரில் குடியிருக்கும் டாக்டர், வீட்டில் யாரும் இல்லாததால் ஆன் லைன் மூலம் வீட்டு வேலைக்கு இளம்பெண்ணை அமர்த்தியுள்ளார். அந்தப் பெண் மீது டாக்டர் கொடுத்த புகாரால் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை திருவான்மியூரில் டாக்டர் ஒருவர் குடியிருந்து வருகிறார். கோடை விடுமுறையொட்டி டாக்டரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் வெளியூர் சென்றனர். இதனால், வீட்டு வேலைக்காக டாக்டர், ஆன் லைனில் பெண் தேடியுள்ளார். அப்போது, தேவி என்ற பெயரில் ஒருவர் டாக்டரை தொடர்பு கொண்டுள்ளார். 


இதையடுத்து டாக்டர் வீட்டில் தேவி வேலை பார்த்துள்ளார். அதன்பிறகு நடந்த சம்பவங்கள்தான் டாக்டருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. வேலைக்கார பெண் மீது திருவான்மியூர் காவல்  நிலையத்தில் டாக்டர் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 
இதுகுறித்து போலீஸ் உயராதிகாரி ஒருவர் கூறுகையில், ``திருவான்மியூரைச் சேர்ந்த டாக்டரின் வீட்டில் வேலை பார்த்த தேவி, பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பெண்ணின் மிரட்டலுக்கு பயந்து டாக்டரும் குறிப்பிட்ட தொகையைக் கொடுத்துள்ளார். அதன்பிறகு, மீண்டும் டாக்டரிடம் பேசிய அந்தப் பெண், நான் உங்கள் வீட்டில் வேலை பார்த்த நாள்களில் நீங்களும் நானும் சேர்ந்திருக்கும் வீடியோ என்னிடம் உள்ளது. நீங்கள் பணம் கொடுக்கவில்லை என்றால் அந்த வீடியோவை வெளியிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன டாக்டர், அந்தப் பெண் கேட்ட பணத்தைக் கொடுத்துள்ளார். ஆனால் தொடர்ந்து அவர் பணம் கேட்டு நச்சரித்ததால் எங்களிடம் டாக்டர் புகார் கொடுத்தார். அதன்பேரில் தேவியைப் பிடித்துள்ளோம். அவரிடம் விசாரணை நடத்திவருகிறோம். 
அவரிடமிருந்து வீடியோ ஒன்றை பறிமுதல் செய்துள்ளோம். அந்த வீடியோ தொடர்பாக டாக்டரிடமும் விசாரணை நடத்திவருகிறோம். மேலும் எங்களிடம் சிக்கிய தேவி, பணக்காரர்கள் வீட்டுக்கு வேலைக்குச் செல்லும் போது வீட்டில் உள்ளவர்களிடம் நெருங்கிப் பழகுவார். அதை யாருக்கும் தெரியாமல் வீடியோ எடுத்து பணத்தை மிரட்டி வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். அவரால் பாதிக்கப்பட்டவர்கள் சில காரணங்களுக்காக புகார் கொடுப்பதில்லை. ஆனால், திருவான்மியூர் டாக்டர் கொடுத்த புகாரால் தேவி சிக்கிக் கொண்டார். அதே நேரத்தில் டாக்டர் மீது தேவியும் பகிரங்க புகார் கூறியுள்ளார். இதுகுறித்து டாக்டரிடமும் விசாரணை நடந்துவருகிறது" என்றார். 
தேவியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வீடியோ, பரம ரகசியமாக காவல்துறை உயரதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவைப் பார்த்த காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதுதொடர்பாக டாக்டரிடம் கேட்டதற்கு அவர் அமைதியாக இருந்துள்ளார். இதையடுத்து டி.ஜி.பி. அலுவலகத்திலிருந்து அடையாறு சரக காவல்துறை உயரதிகாரிகள் ஒரு போன் அழைப்பு வந்துள்ளது. அதன்பிறகு டாக்டருக்கு சாதகமான நிலையை அடையாறு சரக காவல்துறை அதிகாரிகள் எடுத்துள்ளனர். மேலும் இந்தச் சம்பவத்தை மூடிமறைக்க முயன்ற காவல்துறையினர், செக் மோசடி என வழக்கை முடிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


காவல் நிலையத்தில் டாக்டர் புகார் கொடுத்ததும் விசாரிக்க போலீஸ் உயரதிகாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. வழக்கமாக பெண்களைத்தான் வீடியோ எடுத்து மிரட்டும் சம்பவங்கள் நடப்பதுண்டு. ஆனால் இந்தச் சம்பவத்தில் டாக்டரை வீடியோ எடுத்து மிரட்டியதால்தான் உயரதிகாரி ஒருவர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன் லைன் மூலம் வேலைக்குச் சேர்ந்த பெண்ணின் பின்னணியில் யார், யார் இருக்கிறார்கள் என்ற தகவல்களை போலீஸார் சேகரித்துவைத்துள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். 
ஆன் லைன் மூலம் வேலைக்கு வந்த இளம்பெண், டாக்டருக்கு வலை விரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 05-05-2019, 10:38 AM



Users browsing this thread: 86 Guest(s)