Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
பந்துவீச்சாளர்களும், ஃபீல்டர்களும் செய்தது சரியில்லை': திட்டித் தீர்த்த தினேஷ் கார்த்திக்

[Image: dineshjpg]வீரர்களிடம் கோபத்துடன் பேசிய தினேஷ் கார்த்திக் : படம் உதவி ஐபிஎல்

பந்துவீச்சாளர்களும், ஃபீல்டர்களும் செய்தது சரியில்லை, திட்டினால்தான் விளையாடுவார்கள் என்றால், அதையும் செய்யலாம் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
மொஹாலியில் நேற்று ஐபிஎல் டி20 போட்டியின் 52-வது லீக் ஆட்டம் நடந்தது. அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இந்த ஆட்டம் முக்கியமானதாக இருந்தது. 184 ரன்கள் சேர்த்த கிங்ஸ் லெவன் பஞ்சாபின் இலக்கைத் துரத்திய கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தபோது, முதலாவது டைம்-அவுட் வழங்கப்பட்டது. அப்போது, அனைத்து வீரர்களையும் அழைத்து  கேப்டன் தினேஷ் கார்த்திக் காட்டமாகப் பேசினார்.
இதில் குறிப்பாக சுனில் நரேன், உத்தப்பா ஆகியோரிடம் கடுமையாகப் பேசிவிட்டு இருவரையும் ஃபீல்டிங்கக்கு அனுப்பினார். பந்துவீச்சை மாற்றியது குறித்து நரேனும், உத்தப்பாவும் கேள்வி எழுப்பியதால், அவர்களை தினேஷ் கார்த்திக் திட்டியதாகக் கூறப்படுகிறது. அதன்பின இருவரும் இறுகிய முகத்துடன் சென்றனர்.
[Image: karthjpg]தினேஷ் கார்த்திக் : படம் உதவி ஐபிஎல்
போட்டிமுடிந்த பின் கேகேஆர் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் நிருபர்களிடம் கூறுகையில், ''சுப்மான் கில்லை நாங்கள் தொடக்க  வீரராக களமிறங்கியதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அவருக்கு கிடைத்த வாய்ப்பை இருகரம் கொண்டு பிடித்துள்ளார். பெரிய மைதானம், பெரிய இலக்கு. விக்கெட்டுகளுக்கு இடையே ரன்கள் அதிகமான எடுத்ததால், விரைவாக இலக்கை எட்ட முடிந்தது'' என்றார்.
களத்தில் வீரர்களைத் திட்டியதாகக் கூறப்படுகிறதே எனக் கேட்டபோது, "ஆம், நான் வீரர்களிடம் கடுமையாகத்தான் பேசினேன். கடந்த சில நாட்களாக கடுமையாகத்தான் நடக்கிறார்கள்.  பந்துவீச்சாளர்களும், ஃபீல்டர்களும் நடந்து கொண்ட முறை சரியில்லை, எனக்கு பிடிக்கவும் இல்லை. அந்த நேரத்தில் வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிய நான் நினைத்து அவ்வாறு பேசினேன். நான் கோபப்பட்டு பேசியதை யாரும் அரிதாகவே பார்த்திருப்பார்கள். எங்கள் வீரர்களிடம் இருந்து நல்லவிதமான உழைப்பு கிடைக்க, முடிவு கிடைக்க கோபம் அவசியம் என்றால், அதையும் செய்ய வேண்டியதுதான்.
கடைசி ஓவர்களில் 10 ரன்களுக்கும் அதிகமாக சாம் கரனை விட்டுக்கொடுத்தோம். ஐபிஎல் போட்டி என்பது வித்தியாசமானது. எங்கிருந்தோ யாரோ வந்து அணிக்கு தேவையான ரன்களை அடித்துக் கொடுப்பார்கள். அதைத்தான் சாம் கரன் செய்தார். பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங்கில் சமநிலையுடன் நாங்கள்  செயல்படுவது அவசியம்'' என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 05-05-2019, 10:36 AM



Users browsing this thread: 100 Guest(s)