Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
#37
[Image: Master.jpg]
சிலுக்குவார்பட்டி சிங்கம் மினி விமர்சனம்
நடிகர்கள்விஷ்ணு விஷால்,ரெஜினா,கருணாகரன்,யோகி பாபு,ஆனந்த ராஜ்,மன்சூர் அலிகான்,ஓவியா
இயக்கம்செல்லா

தனது வேலையே மிக முக்கியம் என்று செயல்படும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் (விஷ்ணு விஷால்), எதிர்பாராத விதமாக முக்கிய ரவுடியை கைது செய்கிறார். அந்த ரவுடி, போலீஸ் கான்ஸ்டபிளை கொன்ற பிறகே ஊர் திரும்புவதாக உறுதியேற்கிறார். இவரிடம் இருந்து விஷ்ணு விஷால்தப்பிக்க என்னவெல்லாம் செய்கிறார்? இறுதியில் விஷ்ணு விஷால் சிக்கினாரா? ரவுடி பிடிபட்டாரா? என்பது தான் இப்படத்தின் காமெடி கலந்த கதை.

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் விஷ்ணு விஷால், ரெஜினா, கருணாகரன், யோகி பாபு, ஆனந்த ராஜ், மன்சூர் அலிகான் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் சிலுக்குவார்பட்டி சிங்கம்.

படத்தின் கதாபாத்திரங்கள்

ரெஜினா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். விஷ்ணு விஷாலுக்கும் ரெஜினாவுக்கும் இடையேயான ரொமான்ஸ் ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது. ஜோடிப்பொருத்தம் செமையாக பொருந்தியுள்ளது. ஓவியா இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் இரண்டு பாடலுக்கு நடனமாடியுள்ளார். மற்றபடி படத்தில் பெரிய அளவிலான கதாபாத்திரம் இல்லை.

யோகி பாபுதான் படத்தை முன்னெடுத்து செல்கிறார். அவர், ரவுடியுடன் சேர்ந்து செய்யும் காமெடி காட்சிகள் அனைவரையும் வயிறு குலங்க சிரிக்க வைக்கிறது. ஆனால் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான ஜோக்குகளை மட்டும் பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம்.

லியோன் ஜேம்ஸ் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. படத்தின் பின்னணி இசை அனைவரையும் ஈர்த்துள்ளது.

வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் எழுத்தாளர் செல்லா அய்யாவு இந்த படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். காமெடி படம் என்பதால் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் படம் பார்ப்போரை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

படத்தின் கதை

சக்தி என்ற போலிஸ் கான்ஸ்டபிள் (விஷ்ணு விஷால்) பயந்த சுபாவம் கொண்டவர் . தனது வேலைதான் முக்கியம் என்று இருப்பார். யாரு வம்புக்கும் செல்லாத கதாப்பத்திரம். இப்படி இருக்கும் பட்சத்தில், காவல்துறையினரால் தேடப்படும் முக்கிய ரவுடி சைகிள் சங்கர் (சாய் ரவி ) சிலுக்குவார்பட்டிக்கு வருகிறார். அவர் வருவதே முன்னாள் அமைச்சரான மன்சூர் அலிகானை கொலை செய்யத்தான்.

ஆனால் அவரை கான்ஸ்டபிள் சக்தி கைது செய்துவிடுகிறார். எப்படியோ சைகிள் சங்கர் சிறையில் இருந்து தப்பித்து தன்னை கைது செய்த சக்தியை கொலை செய்ய வேண்டும் என்று துடிக்கிறார்.

இவரிடம் இருந்து தன்னை காப்பற்ற சக்தி செய்யும் யோசனை காமெடியின் உச்சம். அவ்வப்போது வரும் காதல் காட்சியில் ரெஜினா மற்றும் விஷ்ணு விஷால் செமையாக நடித்துள்ளனர். விஷ்ணு விஷாலின் நடிப்பு ’அவசரப் போலீஸ் 100’ படத்தில் பாக்கியராஜின் நடிப்பை நினைவுப்படுத்துவதுபோல் இருக்கிறது. மேலும் விஷ்ணு விஷாலின் கெட்டப் ’உழைப்பாளி’ படத்தில் ரஜினியின் கெட்டப்பை நினைவுப்படுத்துகிறது.

ஆனால் படம் முழுக்க காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிற கதைக்கு இல்லை. மேலும் அதிக கதாபாத்திரம் இருப்பதால் எந்த கதாபாத்திரமும் மனதில் நிற்கவில்லை. மேலும் ஓவியாவை படக்குழுவினர் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.

நீங்க நன்றாக சிரித்து, ஜாலியாக படம் பார்க்க நினைத்தால் சிலுக்குவார்பட்டி சிங்கம் நல்ல சாய்ஸ் .
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் ட்ரெய்லர்ஸ் - by johnypowas - 21-12-2018, 06:12 PM



Users browsing this thread: 5 Guest(s)