Thread Rating:
  • 4 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குலோப் ஜாமுன் [discontinued]
#14
சஞ்சய் பேசி முடித்த அடுத்த நிமிடமே விக்கி கால் செய்தார். ஜாமு ஆபிஸ்ல் இருக்கிறியா உன் எம்டி என்னை வர சொல்லி இருக்கிறார் என்று சொல்ல நான் தெரியும் என்று சொல்லாமல் சரி நீங்க பாருங்க நான் கிளம்பிட்டேன் என்றேன். வீட்டிற்குள் நுழையும் போதே ஒரு வெறுப்பு தான் வந்தது முன்பெல்லாம் எப்போ வீட்டிற்கு போவோம் விக்கி முகத்தை பார்ப்போம் அவரோடு சந்தோஷமா இருப்போம் என்பது மாறி விட்டது. குளித்து விட்டு நைட்டிக்கு மாறி சமையல் செய்ய ஆரம்பித்தேன். ஹாலில் ஜமுனா என்ற குரல் கேட்க நான் யார் என்று பார்க்க சென்றேன். எம்டி நின்று கொண்டிருந்தார். சார் வாங்க உட்கார்ங்க என்று சொல்லி அவருக்கு தண்ணீர் எடுத்து வர உள்ளே சென்றேன். ஆனால் எதற்கும் இருக்கட்டும் ஒரு வேளை விக்கி அவனது விட்டால் எம்டி இங்கே என்ன செய்கிறார் என்று கேள்வி வர கூடும் என்று வாசல் கதவை பூட்டி விட்டு வந்தேன்.

ஜமுனா நானா தான் விக்கியை ஆபிசுக்கு வர சொன்னேன் உன் கிட்டே சில விஷயங்கள் பேச வேண்டி இருந்தது விக்கி இருந்தால் பேச முடியாதுன்னு அப்படி செய்தேன் என்று முதலிலேயே சொல்ல நான் சார் நீங்க எங்க நல்லதுக்கு தான் செய்யறீங்கன்னு நேற்றே தெரிந்து கொண்டேன் நீங்க சொல்ல வேண்டியதே இல்லை என்று சொன்னேன். அவர் ஆபிசுக்கு கால் செய்து விக்கி வந்து இருக்கிறாரா என்று உறுதி செய்ய அவர்கள் வெய்ட் செய்யறார் என்று சொல்லி இருக்கணும் எம்டி சரி அவர் வெய்ட் பண்ண சொல்லுங்க நான் வேறு வேலையை இருக்கிறேன் வந்து விடுகிறேன் என்று கட் செய்தார்.

நான் இன்னும் நின்று கொண்டிருக்க எம்டி ஜமுனா இது ஆபிஸ் இல்லை உன் வீடு பார்மாலிட்டி எல்லாம் வேண்டாம் உட்காரு என்று சொல்ல நான் உட்கார்ந்தேன். அவர் மேலே எனக்கு அப்படி ஒரு நம்பிக்கை சொல்ல போனால் பொதுவா வீட்டில் இருக்கும் போது நைட்டி போட்டு இருக்கும் போது யாரவது வந்தால் மேலே ஒரு துப்பட்டா போர்த்தி கொண்டு தான் பேசுவேன் ஆனால் இன்று அது கூட யோசிக்காமல் அவர் எதிரே உட்கார்ந்தேன். எம்டி நேராக விஷயத்திற்கு வந்தார் ஜமுனா உன் கணவர் பொய் சொல்லுகிறார் அவருக்கு சில கேட்ட பழக்கங்கள் இருக்கு அதில் முக்கியமானது சூதாட்டம் தினமும் காலையில் ஒரு கிளுபுக்கு செல்கிறார் என்று தகவல் என்று சொன்னதும் என் சந்தேகங்கள் உறுதியானது போல தோன்றியது. ஆனால் காட்டி கொள்ளமால் சார் நீங்க சொல்லறதை நான் நம்பறேன் ஆனால் என்ன செய்வதுன்னு புரியலை என்றேன். எனக்கு என் வாழ்க்கையில் இப்படி திடீரென்று புயல் வீச துவங்கி இருந்ததால் அதுவும் என் எம்டியே அதை சொல்லும் போது கண்ணீர் தானாக வந்தது. நான் அழுவதை பார்த்த சார் எழுந்து வந்து எனக்கு ஆதரவாக என் தலையில் கை வைத்து ஜமுனா மனசு உடையாதே என்று சொல்ல நான் ஆதரவாக அவர் இருப்பதை நினைத்து அவர் மேல் சாய்ந்தேன்.


ஆனால் எம்டி அந்த தருணத்தை தவறாக பயன் படுத்த வில்லை. ஆதரவா என் தலையை தடவி விட்டு ஜமுனா உன் பிரெச்சனை இனி என் பிரெச்சனை என்று சொல்லி விட்டு மீண்டும் அவர் உட்கார நான் எழுந்து நின்று கையை சேர்த்து கும்பிட்டு சார் ரொம்ப தேங்க்ஸ் என்றேன். அவர் மறுபடியும் எ ழுந்து அருகே வந்து ஜமுனா என்ன இது என்று என் கையை விலக்க நான் என்ன செய்வது என்று தெரியாமல் சார் நீங்க தான் இனி எனக்கு எல்லா விதத்திலும் சொல்லி குடுக்கணும் என்றேன். அவர் ஜமுனா நீ என்னை நம்பி தானே உதவி கேட்டே அப்புறம் உதவாம இருப்பேனா என்று நம்பிக்கை குடுக்க நான் சார் எனக்கு தெரியலை ஆனால் தழுவனும் போல இருக்கு என்று உளற அவர் கம் ஆன் ஜமுனா என்று கையை விரிக்க நான் அவரை நட்புடன் அணைத்து தேங்க்ஸ் என்றேன்.

எம்டி அணைப்பு ஆதரவான ஒருவர் உடுக்கும் அணைப்பு போன்ற உணர்வை கொடுத்தது. அணைப்பை விலக்கிக்கொண்டு ஜமுனா உனக்கு எவ்வளவு சம்பளம் என்று கேட்க நான் சொன்னதும் எம்டி ஏன் நீ ஓவர்டைம் செய்யறது இல்லையா என்று கேட்க நான் இல்லை சார் வீட்டில் இவர் இருப்பார் என்று வந்து விடுவேன் என்றேன். எம்டி ஒரு மாதிரியாக சிரித்து பொய் தானே சொல்லற சஞ்சய் நீ ஆபிஸ் முடிந்ததும் அவன் வீட்டிற்கு போவது வழக்கம்ன்னு என்று கேட்க நான் சார் அப்படியெல்லாம் இல்லை ஒரே ஒரு நாள் அது கூட இப்போ இந்த பண விஷயமா தான் போனேன் என்று சமாளித்தேன். எம்டி உடனே அது எனக்கு அவசியம் இல்லாத ஒன்று ஆபிஸ் நேரம் முடிந்த பிறகு எல்லோரும் தனிப்பட்ட வாழ்க்கை வாழ எனக்கு என்ன ஆட்சேபம்.


அவர் அத்துடன் அந்த விஷயத்தை விட்டுவிட்டாலும் எனக்கு உள்ளுக்குள் மனசாட்சி குத்தியது. படுபாவி சஞ்சய் அன்னைக்கு நடந்ததை சொல்லி இருப்பானோ எம்டி என்னை பற்றி தவறாக புரிந்து கொண்டிருப்பாரோ ஆனால் அப்படி இருக்காது என்பது அவர் அணைப்பில் விளங்கியது ரொம்ப நாகரீகமாக தானே அணைத்து கொண்டார். நாம செஞ்ச தப்பு அது தான் நமக்கு குத்துது என்று விட்டு விட்டேன். மீண்டும் விக்கி கால் செய்து இந்த முறை கொஞ்சம் கோபமாகவே என்ன ஜாமு உன் எம்டிக்கு நேரம் கணக்கு தெரியாதா என்னை வர சொல்லிட்டு எங்கே போனார்ன்னு தெரியலை என்று சொல்ல எனக்கு உள்ளுக்குள் ஒரு சந்தோஷம் மசுஷன் என்னை ஏமாற்ற பார்க்கிறார் அவஸ்தை படட்டும் என்று. அதன் விளைவு வேண்டுமென்றே ஐயோ எம்டி இங்கே என் கூட தான் இருக்கார் வேலை முடிஞ்சதும் வந்துடுவார் என்று சொல்ல விக்கி என்ன சொல்லற ஜாமு நீ வீட்டிலே தானே இருக்கே அங்கே எம்டிக்கு என்ன வேலை என்றார். நானும் இப்போதாங்க வேலையையே ஆரம்பித்து இருக்கோம் முக்கியமான வேலை உங்களுக்கு உதவி செய்ய போறவர் அவர் வேலை சொன்னா செய்யாம இருக்க முடியுமா என்று கட் செய்தேன். எம்டி எல்லாவற்றையும் கேட்டு கொண்டிருந்தார் என்று தெரிய நான் சாரி சார் அந்த அளவு கோபம் அது தான் என்றேன். எம்டி ஜமுனா அவர் தப்பு செய்யறார் என்பதற்காக நீயும் அதே போல செய்ய கூடாது ஒரு வேளை நம்ம ரெண்டு பேரையும் உன் வீட்டுகாரர் தப்பா நினைத்தா உனக்கு தான் கஷ்டம் என்று சொல்ல நான் அப்படி தப்பா நினைச்சா நினைச்சுக்கட்டும் சார் என்றேன்.

எம்டிக்கு நான் தைரியம் கொடுத்தது போல ஆகிவிட்டது அபப்டி சொன்னது. அவர் அடுத்து விக்கியை பற்றி பேசாமல் ஜமுனா நீ சஞ்சய் வீட்டிற்கு போனது கூட விக்கிக்கு தெரியுமா என்று அந்த விஷயத்திற்கு வர நான் வாயை மூடி கொண்டிருந்து இருக்கணும் ஆனால் சார் சஞ்சய் அவர் மனைவி நான் விக்கி எல்லோரும் ஒண்ணா வெளியே சுற்றி இருக்கிறோம் சொல்ல போனா எனக்கு நீச்சல் கற்று குடுத்ததே சஞ்சய் தான் அதுவும் என் வீட்டுகாரர் சொல்லி என்றேன். எம்டி அட உனக்கு நீச்சல் கூட தெரியுமா ரொம்ப நல்லது பெண்கள் எல்லாமும் தெரிந்து வைத்து இருக்கணும் அப்போ ஒரு நாள் எனக்கு துணை கிடைக்கலேனா நீ எனக்கு நீச்சல் பார்ட்னரா இருக்க கூப்பிடுவேன் என்றதும் தான் ஏன் வாயை விடுகிறேன் என்று நொந்து கொண்டேன். எம்டி ஜமுனா எவ்வளவு ஆழம் போவே என்று கேட்க நான் சார் அதெல்லாம் இல்லை நான் கத்துக்குட்டி அன்னைக்கு தான் முதல் நாளே நீச்சல் குளத்திற்குள் இறங்கினேன். மறுபடியும் தேவையில்லாத வகையில் அன்னைக்கு ஒரு வேடிக்கையும் நடந்தது என்று சொல்ல எம்டி என்ன அதிகமா தண்ணீ குடிச்சுட்டியா என்று கேட்க அது மட்டும் இல்லை சார் உள்ளே முழுகும் போது பிடிப்புக்காக எதையோ பிடிக்க அது சஞ்சய் ஜாக்கஸ் அதுவும் என் கையோட வந்து விட்டது என்றதும் எம்டி அப்போ சஞ்சய் அதிர்ஷ்டக்காரன் தான் என்று சொல்ல நான் தலையை குனிந்து அமைதியாய் நின்றேன். எம்டிக்கு நானே பிடிமானம் குடுத்து கொண்டிருந்தேன் மூன்றாம் முறை விக்கி கால் செய்ய எம்டி சரி ஜமுனா நான் கிளம்பறேன் நாளைக்கு பேசலாம் என்று கிளம்பினார். விக்கி வருவதற்கு இரவு வெகு நேரம் ஆனது. அவரே எம்டி பற்றி பேசுவார் என்று அது பற்றி எதுவும் கேட்கவில்லை அவரும் பேசவில்லை. விக்கி அருகே இருந்தாலே எப்படிப்பட்ட குழப்பங்கள் மனசில் இருந்தாலும் அவையெல்லாம் மறந்து விக்கி கூட கொஞ்சுவது உறவாடுவது மட்டுமே செய்து கொண்டிருந்த நான் இன்று அவர் பக்கத்தில் படுத்திருந்தாலும் அதை பொருட்டாகவே எடுத்து கொள்ளாமல் மறுப்பக்கம் திரும்பி படுத்தேன்.


அடுத்த நாள் வேலைக்கு கிளம்பும் போது விக்கி ஜாமு நிஜமாவே உன் எம்டி செய்வாரா என்று கேட்க நான் முதலில் கொஞ்சம் திணறி பிறகு ஏன் சந்தேகம் என்றேன். அவர் சந்தேகம் இல்லை ஜாமு நேற்று அவ்வளவு தூரம் என்னை காக்க வச்சுட்டார் என்றார். நான் ஏன் உங்களுக்கு ரொம்ப முக்கியமான வேலை இருந்ததா உங்களுக்கு நம்பிக்கை இல்லைனா நான் இன்னைக்கே வேண்டாம் சாருன்னு சொல்லிடறேன் என்றதும் விக்கி சரி சரி நீ கிளம்பு நாளைக்கு தான் பார்க்க சொல்லி இருக்கிறார் என்றார். எனக்கு எம்டி ப்ளான் பற்றி நன்கு தெரிந்து இருந்ததால் நான் ஒன்றும் சொல்லாமல் கிளம்பினேன்.


அன்று எம்டி ஆபிஸுக்கே வரவில்லை. விக்கி மட்டும் ரெண்டு முறை கால் செய்து எம்டி ஏதாவது சொன்னாரா என்று கேட்க நான் இல்லை என்று சொல்ல வேண்டி இருந்தது. பேசாம எம்டி கிட்டே பண உதவி வேண்டாம் என்று சொல்லிடலாமா என்று கூட யோசித்தேன். அன்று இரவும் விக்கி என்னை பற்றி கவலையே படாமல் படுத்து உறங்கினார். எனக்கு இருந்த மனஉளைச்சலில் அது பெரியதாக தெரியவில்லை.


அடுத்த நாள் ஆபிஸில் எம்டி என்னை அறைக்கு அழைத்து விக்கியை என்னை பார்க்க வர சொல்லி இருக்கிறேன் நீ சீக்கிரம் கிளம்பி விடு என்றார். நான் அவர் என்ன சொன்னாலும் செய்வது என்ற முடிவை எப்போதோ எடுத்து விட்டேன். அதனால் சரி சார் என்று மட்டும் சொல்லி விட்டு இடத்திற்கு வந்தேன். வந்த கொஞ்ச நேரத்தில் அஜித் கால் செய்ய நான் செய்த பெரிய தவறு எனக்கு புரிந்தது. அவனை ஒரு மரியாதைக்கு கூட அழைத்து பணம் திருப்பி குடுக்க நேரம் கேட்கவில்லை நான் சொல்லு அஜித் ரொம்ப சாரி நெறைய பிரெச்சனை என்று மட்டும் சொல்ல அவன் இப்போ எதுக்கு சாரி எல்லாம் சொல்லிக்கிட்டு நான் எப்படி இருக்கேன்னு கேட்க தான் கால் செய்தேன் சரி மீட் பண்ண முடியுமா என்று கேட்க நான் முடியாது என்று சொல்லும் இடத்தில இல்லை. அவனிடம் கை நீட்டி கடன் வாங்கி இருக்கிறேன் ஆனால் இன்னைக்கு எம்டி என்ன ப்ளான் என்று தெரியாமல் அஜித்துக்கு பதில் சொல்ல முடியவில்லை.எப்படியும் எம்டி மாலை தான் விக்கியை சந்திப்பார் அதனால் இரவு டின்னர் நேரத்தில் சந்திக்கலாம் இப்போதைக்கு விக்கி சம்மதம் எல்லாம் தேவை இல்லை அவரால் தான் இப்படி சிக்கலில் இருக்கிறேன் என்று மறுபடியும் அஜித்துக்கு கால் செய்து டின்னர் ஓகேவா என்றேன். அவனும் சரி என்று சொல்ல இடம் நேரம் முடிவு செய்து கட் செய்தேன்.

எதற்கும் எம்டி கிட்டே அவர் ப்ளான் தெரிந்து கொள்ளலாம்ன்னு அவருக்கு கால் செய்து ரெண்டு நிமிஷம் பேச வரலாமா என்று கேட்டேன். அவர் நானே கூப்பிடறேன் ஜமுனா என்று கட் செய்ய ஒரு வேளை நான் அவரிடம் அதிக உரிமை எடுத்து கொள்கிறேனோ என்று யோசித்தேன். ஆனால் சில நிமிடங்களிலேயே எம்டி கால் செய்து ஜமுனா வா என்று அழைத்தார். நான் சென்று சார் விக்கி வரும் போது நான் வீட்டிலே இருக்கனுமா என்று கேட்க அவர் வேண்டாம் ஆனால் ஒரு விஷயம் விக்கியை பண விஷயமா வெளியூர் அனுப்புவதில் உனக்கு தடை இல்லையே என்று கேட்க நான் இல்லை என்று தலை அசைத்தேன். அவர் சரி அப்போ நீ உன் வேலையை பாரு சொன்னா மாதிரி சீக்கிரம் கிளம்பி விடு என்றார்.

நான் மறுபடியும் அஜித்துக்கு கால் செய்து எனக்கு பெர்மிஷன் கிடிச்சு இருக்கு சீக்கிரமே மீட் பண்ண முடியுமா என்று கேட்க அவனும் மணியை கேட்டு அப்போ உங்க வீட்டிற்கு தான் வரணும் என் வீட்டிலே என் மனைவி இருப்பா என்றான். நான் என்ன ப்ளான் செய்யறான் எதுக்கு வீட்டிலே மீட் பண்ணனும் என்று யோசிக்க தலையை குடுத்தாச்சு அது மொட்டையா கட்டிங்கா யோசிக்க முடியாது என்று அவனிடம் சரி என்றேன்.

நான் சீக்கிரமே வீட்டிற்கு கிளம்ப வீட்டில் விக்கி இருந்தார். நான் எம்டி வர சொன்ன விஷயம் பற்றி எதுவும் தெரியாதவள் போல இருக்க அவரே ஜாமு இன்னைக்கு நான் ஊரில் இல்லை உங்க எம்டி என்னை பெங்களூர் வரைக்கும் போக சொல்லி இருக்கார் என்றார். நான் எப்போ கிளம்ப போறீங்க என்று கேட்க அவர் இப்போவே என்று சொல்ல நான் பேச்சுக்கு ஏன் இவ்வளவு சீக்கிரம் ட்ரெயின் பஸ் எல்லாம் இரவு தானே என்றேன். விக்கி அப்படி இல்லை நான் இப்போ உங்க எம்டி சந்திச்சு அவர் கூட வேறு ஒருவரை சந்திக்கணும் அவரோடு பெங்களூர் போகணும் என்று சொல்ல எனக்கு நிம்மதி எங்கே இவர் அஜித் வரும் போது வீட்டில் இருப்பாரோ என்று. எப்போதும் போல அவருக்கு பெட்டியில் துணியை அடுக்கி குடுத்து முதலில் அவரை அனுப்பி வைத்தேன். அதே சமயம் அவரிடம் நான் நந்திதா வீட்டிற்கு போனாலும் போவேன் அதனால் வீட்டிற்கு வருவதானால் எனக்கு கால் செய்து விட்டு வாங்க என்று சொல்லி வைத்தேன்.


விக்கி கிளம்பி சென்றதும் தான் அஜித் வந்தால் பணத்திற்கு என்ன சொல்லுவது என்று யோசிக்க ஆரம்பித்தேன். எனக்கு ஒரு நம்பிக்கை அஜித் கண்டிப்பா என்னை பணத்த்திர்க்கா நேருக்க மாட்டான் என்று. நெருக்கம் என்ற நினைப்பு வந்ததும் ஏனோ என்னை நானே ரெண்டு வாரத்திற்கு பிறகு அன்று தான் கண்ணாடியில் கவனமாக பார்த்து கொண்டேன். முகம் மிகவும் பொலிவு இழந்து இருப்பது நன்றாக தெரிந்தது. எனக்கே என் மேல் கோபம் வந்தது ஏன் என்னை நானே அசிங்கப்படுத்தி கொள்கிறேன். பணம் எப்போ வேணும்னாலும் வரும் அழகு இளமை இருக்கும் போது தான் நம்மிடம் இருக்கும் அதற்கு பிறகு என்னை முயற்சி செய்தாலும் கிடைக்காது என்று நினைத்து. உடனே குளிக்க சென்றேன். குளித்து விட்டு என் அழகு சாதன பெட்டியை எடுத்து கண்ணாடி முன் உட்கார்ந்தேன். அதே நேரம் மொபைல் அடிக்க எம்டி கால் நான் சார் சொல்லுங்க என்றதும் அவர் வீட்டிலே தானே இருக்கே ஜமுனா விக்கி வந்து இருக்கிறார் நான் அவரை பெங்களூர் அனுப்பி விட்டு உன் கூட பேசறேன் என்ன செய்து கொண்டிருக்கிறாய் தனியா கவலை பட வேண்டாம் எல்லாம் நல்ல படியா நடக்கும் என்று சொல்ல நான் சார் ரொம்ப தேங்க்ஸ் நீங்க இருக்கும் போது நான் ஏன் கவலை பட போறேன் சொல்ல போனா இன்னைக்கு தான் ரொம்ப நாளைக்கு பிறகு பேஷியல் செய்ய ஆரம்பித்தேன் என்று தேவையில்லாமல் அவரிடம் சொல்ல அவர் எதுக்கு ஜமுனா போலியான அழகு உனக்கு தான் கடவுள் இயற்கையிலேயே அழகை அள்ளி குடுத்து இருக்காரே என்று சொல்ல நான் கண்ணாடியில் என் முகம் மலர்வதை பார்க்க முடிந்தது.

சார் நீங்க இதை சொல்லுவீங்கன்னு எதிர்ப்பார்க்கவேயில்லை தேங்க்ஸ் என்றேன். எம்டி உண்மையை சொல்லும் போது தேங்க்ஸ் எதுக்கு ஜமுனா சொல்லனும்னா என்னுடைய நிறுவனத்தில் இயற்க்கை அழகு என்றால் நீ தான் முதல் என்று சொல்லி விட்டு சரி விக்கி அனுப்பி விட்டு பேசறேன் என்று கட் செய்தார். எம்டி பேசிய பிறகு எனக்கு ஒரு உத்வேகம் வந்தது. அதே உற்சாகத்தில் அழகு சாதன பெட்டியை திறந்தேன். ஒரு மணி நேரம் அழகு கூட்டுவதில் செலவு செய்தேன். அதன் பிறகு எனக்கே எம்டி சொன்னதும் உண்மை தானோ இதற்கு முன் இதை விட அழகாக இருந்தேனோ என்று தோன்றியது. இருந்தாலும் பெண்ணுக்கே அழகுக்கு அழகு சேர்ப்பதில் ஆர்வம் இருக்கத்தானே செய்யும் அதனால் அடுத்து என் பீரோவை திறந்து எனக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும் என்று நினைத்த புடவையை எடுத்து கட்டி கொண்டேன். எப்போவோ வாங்கின புது பிரா கண்ணில் பட அதை எடுத்து அணிந்து இருந்த பிராவை மாற்றினேன்.

அஜித் வருவதை மனதில் கொண்டு தான் செய்கிறேன் என்று தெரிந்தாலும் தவறாக எண்ணவில்லை. சொல்ல போனால் சின்னபொண்ணு போல அவன் என் புடவைக்கு மாட்சாக உடை அணிந்து இருப்பானா என்று கூட யோசித்தேன். அஜித் தான் என் நினைவில் ஓடி கொண்டிருக்க எம்டி கால் வந்தது. நான் முட்டாள்தனமாக சொல்லுடா என்று சொல்லிவிட எம்டி ஹே ஜமுனா என்ன டா எல்லாம் போட்டு பேசற என்று கேட்ட பிறகு தான் தவறை உணர்ந்து சாரி சார் என் கசின் கால் செய்து இருந்தான் கால் கட் ஆயிடுச்சு அவன் தான் மறுபடியும் கால் செய்யறான்னு நினைச்சேன். உங்களை நான் டா சொல்லுவேனா என்று சமாளித்தேன். அவர் எனக்கு ஆறுதலாக சொன்னார் இதுலே என்ன இருக்கு ஜமுனா ஒரு வேளை நீ என்னை உன் நண்பனா நினைத்து சொல்லி இருக்கலாமே என்று சொல்ல நான் சார் நீங்க வேறே அப்படியெல்லாம் இல்லை என்றேன். அவர் ஏன் நான் உனக்கு எதிரியா என்று கேட்க நான் சார் ரொம்ப குழப்ப வேண்டாம் நீங்க என் பாஸ் பாஸ் எப்படி எதிரியா நினைப்பேன் என்றேன். அவர் விடாமல் அப்போ என்னை நாபன் என்று முடிவு செய்து விட்டாயா என்று கேட்க நான் சரி அப்படியே வச்சுக்கோங்க போதுமா என்றேன். அவர் உடனே இன்னைக்கு எனக்கு ரொம்ப அதிர்ஷ்டமான நாள் எனக்கு ஒரு அழகான நண்பன் கிடைத்து இருக்கா என்று சொல்ல நான் சார் என்ன இன்னைக்கு ரொம்பவே அழகு பற்றி பேசறீங்க வீட்டிலே மேடம் எதாவது ஸ்பஷலா கவனிச்சாங்களா என்று குறும்பாக கேட்க அவர் சரியா கவனிக்கலை அது தான் எ ன்று சொல்லி விட்டு சரி ஜமுனா விக்கி ஊருக்கு கிளம்பிட்டார் இப்போ தான் என் டிரைவர் விமான நிலையத்தில் இறக்கி விட்டு வந்தான் என்று சொல்ல நான் சார் எதுக்கு இந்த செலவு அவர் பஸ்ஸில் அனுப்பி இருக்கலாமே என்றேன்.

சரி நான் என்ன செய்தாலும் தப்பு சொல்ல முடிவு செய்து இருக்கே போல நான் வைக்கறேன் இன்னைக்கு முழுக்க உன் நினைப்பு தான் என்று சொல்ல நான் சார் என்ன சொல்லறீங்க என்றதும் அவர் ஐயோ ஜமுனா இதுவும் தப்பா நான் உன் பிரெச்சனை பற்றி நினைத்து கொண்டிருந்ததை சொன்னேன் சரி முடிந்தா பிறகு பேசறேன் எப்படியும் தனியா தானே இரவு முழுக்க இருக்க போறே என்று கேட்க ஆமாம் சார் கல்யாணம் பிறகு விக்கி என்னை தனியா விட்டு விட்டு போனது ரெண்டு வாட்டி தான் என்று சொல்லி விட்டு கட் செய்தேன் அந்த கடைசி வார்த்தைகள் எம்டிக்கு நான் ஏதோ உணர்த்தி இருப்பதை உணராமல்.

அஜித் கால் செய்யவே இல்லை என்ற நினைவு வர நானே அவனுக்கு கால் செய்தேன் அவன் சாரி ஜமுனா ஒரு முக்கிய வேலையை இருந்தேன் முடிந்தால் இன்னைக்கு சந்திக்கலாம் இல்லை என்றால் வேறு ஒரு நாள் பார்ப்போம் என்று சொல்லி கட் செய்ய என் ஆர்வம் எல்லாம் ஒரே நொடியில் கலைத்து விட்டான் என்று கோபம் அடைந்தேன். வெறுப்பாக படுக்கையில் சாய சாய்ந்த பிறகு தான் என் அலங்காரம் பற்றி நினைவு வர உடனே எழுந்து கொண்டேன். அதே வெறுப்பில் போன் எடுத்து விளையாடலாம் என்று யோசிக்க லாஸ்ட் இன்கமிங் கால் எம்டி என்று கண்ணில் பட விளையாட்டாக அவர் நம்பரை கால் செய்தேன். அவர் எடுத்து சொல்லு ஜமுனா இப்போ தான் கிளம்பி கொண்டிருக்கிறேன் காரில் ஏறியதும் பேசட்டுமா என்று கேட்க நான் ஏன் நேரில் பேசலாமே என்று உளறினேன்.

எம்டி நான் சொன்னதை கேட்டு என்ன ஜமுனா வீட்டிற்கு வரட்டுமா என்று கேட்க நான் சார் உங்களை வாங்க வேண்டாம்னு சொல்ல எனக்கு உரிமை இல்லை நீங்க எனக்காக உதவி செய்யறீங்க என்று சமாளித்தேன். எம்டி சரி ஜமுனா இப்போ ஒரு மீட்டிங் போயிட்டு இருக்கேன் முடிந்ததும் வரேன் ஆனால் எட்டு மணி ஆகும் தூங்கிட மாதே என்று கேட்க நான் சார் நான் என்ன கிழமா எட்டு மணிக்கு எல்லாம் தூங்க கல்யாணம் முடிந்து இன்னும் ரெண்டு வருஷம் கூட ஆகல என்றேன். ஏன் சொன்னேன் என்று எனக்கே தெரியவில்லை. எம்டி சிரித்தது எனக்கு கேட்டது அதில் ஒரு புரிதல் இருந்தது போல தோன்றியது.


கண்டிப்பா எம்டி வர போகிறார் என்று தெரிந்த பிறகு அஜித் வருவதை தவிர்ப்பது நல்லது என்ற முடிவில் அவனுக்கு கால் செய்து இன்னைக்கு சந்திக்க வேண்டாம் பிறகு வேறு ஒரு நாள் சந்திப்போம் என்று சொன்னேன். அவனும் சரி என்று கூற உண்மையிலேயே அஜித் நல்லவன் என்ற எண்ணம் வந்தது. பிரிட்ஜ் திறந்து பார்த்தேன் கூல் ட்ரிங்க்ஸ் மட்டுமே இருந்தது. சரி கடைக்கு போய் பழங்கள் வாங்கி வரலாம் எம்டிக்கு ப்ரெஷ் ஜூஸ் குடுப்பது நல்லது என்று கிளம்பினேன். கடையில் கொஞ்சம் பிரெஷா இருந்தது ஆரஞ்ச் திராட்சை மட்டுமே. கடைகாரரிடம் ரெண்டிலும் எடை போட்டு வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தேன். நான் நினைத்தது எம்டி வந்து கொஞ்ச நேரம் பேசி விட்டு கிளம்பி விடுவார் என்று தான்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: குலோப் ஜாமுன் [discontinued] - by M.Gopal - 04-05-2019, 07:46 PM



Users browsing this thread: 2 Guest(s)