Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
ஐபிஎல் போட்டி: பஞ்சாப் கனவை நொறுக்கியது கொல்கத்தா!

[Image: 63082.jpg]
ஐபிஎல் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தியது. இதையடுத்து அடுத்த சுற்று வாய்ப்பில் இருந்து பஞ்சாப் அணி ஏறக்குறைய வெளியேறிவிட்டது
ஐபிஎல் தொடரில் 52 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் நேற்று மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, தொடக்கத்திலேயே தடுமாறியது. கே.எல்.ராகுல் 7 பந்துகளுக்கு 2 ரன் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து கெய்லும் 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.[Image: 070033_punjab.jpg]

அடுத்து ஜோடி சேர்ந்த மயங்க் அகர்வாலும் நிக்கோலஸ் பூரனும் சற்று நிதானமாக ஆடி, ஆட்டத்தை தங்கள் பக்கம் கொண்டு வந்தனர். பூரன் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 27 பந்துகளில் 48 ரன்னும் அகர்வால் 38 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய மந்தீப் சிங்கும், சாம் குர்ரனும் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர். சாம் குர்ரன் 24 பந்துகளில் 55 ரன் விளாசினார். மந்தீப் சிங் 17 பந்துகளில் 25 ரன் எடுத்தார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுகளையும் கர்னே, ரஸல், ராணா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
[Image: 073133_Punjab1.jpg]
184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்கள் சுப்மான் கில், கிறிஸ் லின் சிறப்பானத் தொடக்கம் கொடுத்தனர். லின் 22 பந்தில் 46 ரன் எடுத்து ஆண்ட்ரு டை பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராபின் உத்தப்பா 14 பந்தில் 22 ரன்னுடனும் ஆண்ட்ரு ரஸல் 14 பந்தில் 24 ரன்னுடனும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக், அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தார். 18 ஓவரிலேயே கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
[Image: 075733_subman.jpg]
சுப்மான் கில் 49 பந்தில் 65 ரன்னுடனும் தினேஷ் கார்த்திக் 9 பந்தில் ஒரு சிக்சர் 2 பவுண்டரிகளுடன் 21 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந் தனர். ஆட்ட நாயகன் விருது சுப்மான் கில்-லுக்கு வழங்கப்பட்டது.
இந்த வெற்றியால், பிளே ஆப் சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது கொல்கத்தா அணி. பஞ்சாப் அணி, அடுத்த சுற்று வாய்ப்பில் இருந்து ஏறக்குறைய வெளியேறிவிட்டது
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 04-05-2019, 09:58 AM



Users browsing this thread: 84 Guest(s)