Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
போனி புயல் : ஆந்திராவில் ஏற்பட்ட பாதிப்பு

[Image: Tamil_News_large_2268646.jpg]

அமராவதி : போனி புயல் ஒடிசாவை கரையை கடந்த நிலையில், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், மனித உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. 9 கால்நடைகள், 12 ஆடுகள் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்துள்ளன. சூறாவளி காற்றால், 2,129 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. 218 மொபைல் போன் கோபுரங்கள் சேதமடைந்துள்ளன. அங்கு போர்க்கால அடிப்படையில் மின்கம்பங்களை நட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

[Image: gallerye_203455250_2268646.jpg]


போனி புயல், ஒடிசாவின் புரி நகரை காலை 8 மணியளவில் கரையை கடக்க துவங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவின் 11 கடலோர மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்த 11 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதனால், பாதிப்பு ஏற்படவில்லை. புயல் நகர்வை, ஆந்திர அரசின் ரியல் டைம் கவர்னன்ஸ் சென்டர்(ஆர்டிஜிசி) 24 மணி நேரமும் கண்காணித்து ஒடிசா அரசிற்கு தகவல்களை அளித்து வந்தது. இதற்காக, ஒடிசா அதிகாரிகள் அந்த அமைப்பிற்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.






நடத்தை விதிகள் தளர்வு

போனி புயல் காரணமாக ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜியநகரம், விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி மாவட்டங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் தளர்த்தியது. ஒடிசாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பகுடா, வம்சதாரா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதால், அதனை ஒட்டிய ஆந்திர பகுதிகளில் அதிகாரிகள் உஷாராக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது.




பாதிப்பு

புயலின் பாதிப்பு ஆந்திராவில் 145 கிராமங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 406 ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள், 187 ஹெக்டேர் அளவு நெல், 555 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட சூரியகாந்தி, பருத்தி, கடலை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. 3,334 குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


[Image: gallerye_203449622_2268646.jpg]







மழை

ஒடிசாவை ஒட்டியுள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் இச்சாபுரம்,கவிதி மண்டலங்களில், காலை 8.30 மணி முதல் 4.30 மணி வரையில் 23.25 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மற்ற பகுதிகளில் ஒரு செ.மீ., முதல் 8 செ.மீ., வரை மழை பதிவாகியுள்ளது.




ரயில்கள் ரத்து

புயல் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு கிழக்கு கடற்கரை பகுதிகளில் 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், விசாகப்பட்டினத்திலிருந்து மும்பைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.


[Image: gallerye_203501302_2268646.jpg]
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 04-05-2019, 09:54 AM



Users browsing this thread: 95 Guest(s)