Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீல நிற நிமிடங்கள் [discontinued]
#14
" நீ ரொம்ப lucky டா... இந்த மாதிரி ஒரு MD கிடைக்க . ம்ம்... முதலாளி ஆய்ட்ட ... இனி உங்கள பார்க்கவே முடியாது, ரொம்ப பிசி ஆயடுவிங்க .!! "

" ஏய்.... ச்சீ... ! நான் எந்த நிலைமைக்கு போனாலும் ... நான் உனக்கு நந்து தான் .. நீ .. நீ... எனக்கு ...... என்... யாமினி தான் "

" அவ்ளோ தானா...! நான் கூட என்னவோ சொல்ல போறான்னு பயந்துட்டேன் ...."

" கண்டிப்பா சொல்லத்தான் போறேன் .... இப்பயே சொல்லிடட்டா..........? "

" யே..... ஏய்.... ஏண்டா...................."
அவசர பட்டு என்னை தடுத்து நிறுத்தி . வார்த்தைகள் தடு மாறினால்..

" நாம ரெண்டு பேருக்கும் தெரிஞ்ச விஷயம் தான் , ஆனா அத சொல்றதுக்கு இது சரியான இடம் இல்ல . அதுக்கு நான் வேற இடமும் , நேரமும் தேர்வு செஞ்சிருக்கேன் ..."

" நந்தா .. என்னடா ரொம்ப ரொமாண்டிக்கா பேசி... என்ன வளைச்சு போடறியா.... ? "

" இல்லனா மட்டும் உனக்கு ஒண்ணுமே தெரியாது. நடிக்காதிங்கடீ.... "

" ' நடிக்காதிங்கடீ ' அப்டீன்னா என்ன அர்த்தம் ... அப்பா ஏற்கனவே இந்த மாதிரி பேசி உனக்கு அனுபவம் இருக்கா நந்தா ....? "

" தாயே... நீ எதுவும் கற்பனை பண்ண வேண்டாம் , நான் பொதுவா பொண்ணுகள பத்தி சொன்னேன் . தயவு செஞ்சு சண்ட கீது போற்றாத , மன்னிசுக்கம்மா தப்பா இருந்தா "

" சரி... விடு .... நீ எப்படி வர்ற பஸ் சா இல்லா ஆடோவா...? "

" ஹேய்... நான் கார்ல தான் வர்றேன் , உன்ன அப்படியே வந்து ஹோச்டல் பிக்கப் பண்ணிக்கட்டுமா "

" ஒன்னும் தேவை இல்ல , அன்னைக்கு friend கிட்ட கேட்டு பைக் எடுத்திட்டு வர்றேன்னு சொன்ன ... இப்ப சார் , மேடம் கூட வர்றதுனால காரா...? "

" அப்படி இல்ல யாமினி பைக் ள்ள எப்படி ற்றிப்ல்ஸ் போறது ... அதான் ...."

" ஒஹ்ஹ... சாருக்கு அந்த ஆசைல்லாம் இருக்கா ....? கொன்னுருவேன் "

" பேசாம அத செய்டீ மொதல்ல , போய்தொலைறேன் "
என்றேன் நிஜமான சலிப்புடன்

" டேய்... சும்மா விளையாட்டுக்கு தாண்டா சொன்னேன் .. please sorry டா ..."
விலகி போனா... நெருங்கி வரும். நெருங்கி வந்தா... விலகி போகும் . அது தான் காதலும், காதலியும் .

" இப்ப நான் ஹோச்டல் வரட்டுமா வேண்டாமா ....? "

" வா... நான் வெயிட் பண்றேன் "

போனை துண்டித்து விட்டு கீழே இறங்கி . ஷிவானியை பார்க்க சென்றேன் . மண்டைக்குள் எதோ குடைவது போலவே இருந்தது . இது எதுக்கான ஆரம்பமோ என்று நினைத்துகொண்டேன் . ஷிவானி ஹாலிலேயே காத்திருந்தால் .

" ஷிவி.. கிளம்பலாமா .... டைம் ஆய்டுச்சு "

" டிரஸ் நல்லா இருக்கா நந்தா ....? "

" ம்.. நல்ல தான் இருக்கு , ஆனா..................

என்று சொல்ல வந்த போதே . என் மொபைல் பாடியது . யாமினி calling .

" சொல்லு "
என்றேன் மெதுவாக

" என்னடா ரொம்ப மெதுவா பேசுற .. உங்க மேடம் பக்கத்துள் இருக்காங்களா...."

" இல்ல சொல்லு ....."

" சரி... உங்க மேடம் என்ன டிரஸ் போட்டு இருக்காங்க ...?"

" jeens and tops . எதுக்கு கேட்கற ...? "

" சும்மா தான், என்ன சாரி கட்டிட்டு வர சொன்ன மாதிரி , அவ கிட்டயும் சொல்லிடியோன்னு நினைச்சேன் . சரி வச்சிடறேன் "

அவள் போனை கட் செய்த பிறகு , திரும்பி பார்த்தல் இவளை காணவில்லை . கிச்சனுக்குள் எட்டி பார்த்தேன் . அங்கும் இல்லை . சில நிமிடங்கள் கழித்து. கரு நீல நிறத்தில் எம்ரயிடரி செய்யப்பட்ட designer saree இல் தேவதையாய் இறங்கி வந்து கொண்டிருந்தாள் . ஷிவானியின் கலருக்கும் டார்க் நிற புடவைக்கும் அமர்களமாக இருந்தால் . அழகில் சில கணம் சொக்கித்தான் போனேன் . அப்போது தான் எனக்கு, யாமிநியிடம் இவள் ஜீன்ஸ் ,டாப்ஸ் போட்டிருப்பதாக சொன்னது ஞாபகத்துக்கு வந்தது .

" நீ தான நந்தா .. அன்னைக்கு சொன்ன ... எனக்கு saree சூப்பரா இருக்குன்னு . அதான் நீ பேசிட்டு இருந்த நேரத்தில சாரிக்கு மாறிட்டேன் ... போகலாமா ...."

" போ.... போகலாமே..............."
இன்னைக்கு செத்தண்டா .....


நானும், ஷிவானியும் , யாமினியின் ஹாஸ்டலை அடைந்தபோது மணி மணி 3 :52 ஆகி இருந்தது . யாமினியின் போனுக்கு தொடர்பு கொண்டு கீழே வர சொன்னேன். என் இதயத் துடிப்பின் வேகம் தாறு மாறாக எகிறியது. ஷிவானி காரை விட்டு இறங்கி நின்றதால் நானும் இறங்கி பின் கதவின் அருகில் நின்று கொண்டேன். யாமினி ரிசப்சன் அருகே வேக மாக நடந்து வந்து கொண்டு இருந்தால். எங்கள அருகில் வர..வர.. ஷிவானியை பார்த்து கொண்டே .. வேகத்தை குறைத்து கொண்டு வர ஆரம்பித்தால் . அங்கிருந்து சிரித்தது கொண்டே வந்தவள் , ஷிவானியின் சாரியை பார்த்தவுடன் முகம் அஷ்ட கோணலாய் போனது.

" வா.. யாமினி.. இவங்க ஷிவானி... நான் சொல்லி இருக்கேன்ல ...! "

" ஹாய்.. யாமினி... ..."
என்று ஷிவானி கைநீட்டினால் .

" ஹலோ ஷிவானி........"
கை குழுகல்களை முடித்து கொண்டு , ஓர கண்ணால் என்னை முறைத்து பார்த்தல் . நான் கண்களால் கெஞ்சினேன். ' நான் ஒத்துக்க மாட்டேன் ' என்பது போல தலையை இட..வலமாக ஆட்டினால். பிறகு நான் முன் சீட்டில் அமர்ந்து கொள்ள யாமினி பின் சீட்டில் அமர்ந்து கொண்டால். கார் தியேட்டரை நோக்கி பயணித்தது. கடவுளே டிக்கெட் கிடைக்க கூடாது என்று வேண்டினேன். ரியர் வியு மிரரில் பார்த்தேன் பின் சீட்டில் யாமினி சாரியின் முந்தானையோடு என் மீது இருந்த கோபத்தை காண்பித்து கொண்டு இருந்தால். ஐந்து நிமிடங்கள் வரை யாரும் பேசாமல் அமைதியாக போய் கொண்டிருந்தோம். ஷிவானியே அந்த தேவை இல்லாத அமைதியை கலைத்தால்.

" என்னங்க யாமினி எதுவும் பேசாம வர்ரிங்க ....? நீங்க நல்ல வாயடிப்பிங்கன்னு நந்தா சொன்னான்..."
யாமினி அப்படியா சொன்ன என்பது போல புருவத்தை உயர்த்தி ஜாடை செய்தால். நான் இல்லை என்பதை கண்களால் கெஞ்சினேன்.

" அப்படியெல்லாம் ஒன்னும் இல்லங்க... பழக ஆரம்பிச்டா நல்ல பேசுவேன்..."
என்று ஆரம்பித்து .. இரண்டு பெண்கள் சேர்ந்தால் என்ன... பேசுவார்களோ... அதையே தியேட்டர் வரை மொக்கை போட்டு கொண்டே வந்தனர். ஒரே நல்ல விஷயம் என்னவென்றால் ...!? யாமினியின் கோபம் கொஞ்சம் தணிந்து... ஷிவானியுடன் கொஞ்சம் நட்பாகி இருந்தால். கார் தியேட்டரை நெருங்கியவுடன் ,ஷிவானி காரை பார்க் செய்து விட்டு தானே டிக்கெட் எடுத்து வருவதாக கூறி எங்களை ஒரு இடத்தில இறக்கி விட்டு சென்றால். இப்பொழுது நான் தனியாக மாட்டி கொண்டேன். கொஞ்ச நேரம் ஆகியும் யாமினி என்னிடம் எதுவுமே பேச வில்லை .

" யாமினி உன் கோபம் ஏன்னு தெரியுது... நிஜம்மா ஷிவானிய நான் சாரி கட்டிட்டு வர சொல்லல . நான் போன பேசி முடிச்சுட்டு வந்து பார்கிறேன் . அவ சாரியில வந்து நிக்கறா ... நான் ' வேற டிரஸ் போட்டுட்டு வான்னா ' சொல்ல முடியும்... "
என்றேன்

" அது சரி... நீ என்ன ஷிவானிய , ' அவ ' ங்குற, ' நிக்கரா 'ங்குற . அந்த அளவுக்கு நெருங்கியாச்சா...? "

" ஐயோ.. யாமினி ஒவ்வொரு வார்த்தைக்கும் குத்தம் கண்டு பிடிக்காத.. ப்ளீஸ்.. "

" சரி அத விடு , அதான் அவ சாரி கட்டிட்டா , அதுவும் அதே கலர்ல ன்னு தெரிஞ்சுடுச்சு ள்ள . கார்ல வந்துட்டு இருக்கும் போது எனக்கு மெச்செஜ் ஆவது அனுப்பி இருக்கலாம் . ஏன் செய்யல... ?"

" நான் உன் கோவத்த எப்படி சமாளிக்கலாம்ன்னு தான் யோசனை செஞ்சேனே தவிர , இந்த யோசனை எனக்கு தோணவே இல்லை . ப்ளீஸ் இந்த மேட்டர இப்படியே விட்று. உன் கோவம் இப்ப குறையனும்ன்னா நான் என்ன செய்யணும் . வேண்ணா இங்கயே தோப்புகரணம் போடவா...? "
என்று காதுகளை X குறி போட்டு பிடித்தேன்.

" ஹ.. ஹ.. அதெல்லாம் வேண்டாம் (என்று சுற்றி.. முற்றி பார்த்தவள் ) அங்க ஒரு பூக்கடை இருக்கு , அங்க போய் எனக்கு ஒரு முழ ஜாதி மல்லி வாங்கிட்டு வா ...."

" இதோ உடனே ......."
என்று பூக்கடையை நோக்கி பறந்தேன். ஜாதி மல்லியை வாங்கி கொண்டு அதே வேகத்தில் அவளிடம் வந்தேன்.

" நானே வச்சி விடவா யாமினி....."
என்று வழிந்தேன்

" கொஞ்சம் அடங்கு ... நானே வசிக்கிறேன் "
என்று பூவை வைப்பதும் , ஷிவானி எங்கள் அருகில் வருவது ஒரே நொடியில் நடந்தது .

" என்னங்க யாமினி பூவா... நான் வேண்ணா வச்சி விடவா ....? "

" ப்ளீஸ் ....."
என்று யாமினி பூவை அவள் கையில் கொடுத்தால் .


" ஒரு நிமிஷம் ... இருங்க ஷிவானி .. நீங்களும் தான் பூ வைக்கல ..."
என்று கூறி பாதி பூவை பியித்து வைத்து கொண்டு தலை காட்ட. மாறி மாறி வைத்து கொண்டார்கள். அந்த காட்சியை பார்க்க கோடி கண்கள் வேண்டும் . இப்படியே கடைசி வரைக்கும் இருந்திங்கன்னா . ரொம்ப நல்லா இருக்கும் என்று நினைத்து கொண்டேன்.

ஷோ ஆரம்பிப்பதற்கு இன்னும் நிறைய நேரம் இருந்ததால் நாங்கள் அருகில் இருந்த ஹோட்டலில் காபி சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் பேசி கொண்டு இருக்கலாம் .என்று சென்றோம். அது கொஞ்சம் பந்தாவான ஹோட்டல் தான் . காபியையும், பிஸ்கட்டையும் ஆர்டர் செய்து விட்டு பேச துடங்கினோம்.

" அப்புறம்.. யாமினி என்ன future plane வசிருக்கிரிங்க .....? அங்கேயே வேலை செய்ற மாதிரியா... இல்ல வேற jop போற மாதிரியா...?

" நான் உங்களைவிட சின்னவதான் .. நீங்க என்ன வா, போன்னே பேசலாம் ... என் தகுதிக்கு ஏத்த மாதிரி வேற jop கிடைச்சா மாத்திட்டு போய்டுவேன். நிறைய சம்பாரிக்கனும் , அம்மாவ நல்ல படியா பார்த்துக்கணும் . மற்ற படி பெரிய ஆசைல்லாம் ஒன்னும் இல்லைங்க ..."

" நீங்களும் வா.. போன்னு... கூப்டிங்கன்னா நானும் கூபிட்றேன். ... இப்போ எவ்ளோ சாலரி வாங்கிட்டு இருக்கீங்க ....? "

" ***** வாங்கிட்டு இருக்கேன் . ஆனா செலவு நிறைய ஆகுது.. "

" நான் வேண்ணா , வேற நல்ல jop சொல்லட்டுமா யாமினி.... ? "

" இப்போ வேண்டாம் ஒரு மாசம் போகட்டும் . அப்புறம் ஹெல்ப் பண்ணு ..."
இவர்கள் இப்படியே பேசி கொண்டு இருக்க நான் ஆ.. வென்று வாய் பிழந்து பார்த்து கொண்டு இருந்தேன். இப்படி சொந்த கதை .. சோக கதை எல்லாத்தையும் பேசியே ஒரு மணி நேரத்தை கடத்தி விட்டார்கள் . அதற்குள் அந்த பேரர் வந்து வேற என்ன வேண்டும் .. ன்னு மூணு முறை கேட்டு சலித்து போய்விட்டார். எனக்கே பொறுக்காமல் அவர்களின் பேச்சுக்கு நடுவில் புகுந்தேன்.

" மகாரானிங்களா.. நானும் இங்க தான் இருக்கேன்.... என்னையும் கொஞ்சம் ஞாபகம் வச்சிகோங்க...."

" டேய் நீ செஞ்ச வேலைக்கு .... உன்ன வெத்தல பாக்கு வச்சி கூப்பிடனுமா ..எங்க கூட பேச வாங்கன்னு .... பேசாம உட்காருடா...."
என்று யாமினி என்னை ' டா ' போட்டு அதட்டியதும் . ஷிவானிக்கு புரிந்திருக்கும் எங்களுக்குள் எந்த அளவுக்கு நெருக்கம் வளர்ந்திருக்கிறது என்று..

" என்னாச்சு யாமினி..... என்ன செஞ்சான் ..... ? "
பதிலுக்கு இவளும் என் மீது இவளுக்கிருக்கும் அதிகாரத்தை காட்டினால் .

" நீங்க சினிமாவுக்கு வீட்ல இருந்து கிளம்பும் போது ... நான் பண்ணி இருந்தேன் ..! அபப..! ஷிவானி என்ன டிரஸ் போட்டு இருக்காங்கன்னு கேட்டேன் . அதுக்கு ஜீன்ஸ், டாப்ஸ் ன்னு என்ன ஏமாத்திட்டான். "
இவள் பதிலில் இருந்தே தெரிந்திருக்கும் . இவர்களின் பேச்சு எந்த அளவுக்கு இவர்களுக்குள் நெருக்கத்தை உண்டாகியிருக்கிறது என்று . ஒரு சப்ப மேட்டர பிடித்து கொண்டு என்ன வருக்கராலுக.

" இது தான் உன் கோவமா...யாமினி ...."
என்று கூறி .. யாமினியை கையேடு அழைத்து கொண்டு வெளியேறினால். பிறகு நான் பில்லை கொடுத்து விட்டு அவர்களை துரத்திக்கொண்டு ஓடினேன். இருவரும் ஒரு துணி கடைக்குள் நுழைந்து கொண்டு இருந்தார்கள் .
அரை மணி நேரம் கழித்து. யாமினி புதியதாய் ஒரு பிங்க் நிற சுடிதாரிலும், ஷிவானி அதே புடவையிலும் வெளியே வந்தார்கள் .
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: நீல நிற நிமிடங்கள் [discontinued] - by M.Gopal - 03-05-2019, 08:40 PM



Users browsing this thread: