Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீல நிற நிமிடங்கள் [discontinued]
#8
மறுமுனையில் call அட்டென்ட் செய்ய பட்டும் எந்த சத்தமும் கேட்காமல் அமைதியாகவே இருந்தது . கிட்ட தட்ட .. இரண்டு நிமிடங்கள் நான் ஹலோ..ஹலோ.. வென்று கத்தியே என் தொண்டை வறண்டு போனது . கடைசியில் அந்த

பெண்மையின் மனதில் கொஞ்சம் இறக்கம் வந்து வாய் முத்தை உதிரத்தால் .
" ஹலோ..."

" அம்மாடி.... இப்பயாவது இறக்க பட்டியே , இந்நேரம் கத்தி..கத்தியே ஊமையாகி போயிருப்பேன் ... ஆங்.. அப்படியே என்ன என்னென்ன திட்டனுமோ.. எல்லாத்தையும் திட்டி முடிச்சுடு அப்புறம் நான் விளக்கம் தர்றேன் "

" ஹ..ஹ.. நான் யார் நந்தா உன்ன திட்ட , முதல்ல ' நான் யார் உனக்கு? ' உன்கிட்ட எனக்கு என்ன உரிமை இருக்கு ? "

" என்ன.. யாமினி இப்படி பேசற .. என்ன இருந்தாலும் நாலு நாள் பழக்கம் தான .. என்ன போலவே நீயும் பாசத்துக்காக எங்குறவன்னு நினைச்சிட்டேன் . நீ.. என்னடான்னா உனக்கும் எனக்கும் ஒண்ணுமே இல்லாத மாதிரி பேசற .

என்ன போலவே நீயும் இருப்பேன்னு தப்பா நினைச்சுட்டேன் . மன்னிச்சிக்க .."

" இது நான் கேட்டதுக்கு பதில் இல்லையே.. முதல்ல சொல்லு 'நான் யார் உனக்கு '? "

" நீ... நீ... ம்ம்.. நீ என் ..... என்னோட .... ( வார்த்தைகளை தேடி நாக்கு குழறியது ) வெள்விஷர்.. ஒரு நல்ல பிரண்டு .."

" நிச்சியமா சொல்லு அது மட்டும் தானா ..?"

என் இதயத்தில் இருந்த காதல் தொண்டை வரை வந்தது . ஆனால் என் மூளை எதையோ எச்சரித்து என் காதலை சின்னா பின்னமாக சிதறடித்தது . ( நன் உடலிலேயே , மூளையின் கட்டுப்பாட்டில் இயங்காத ஒரே உறுப்பு நம்

இதயம் தான்). ஆனால் காதலை பொறுத்த வரை இந்த சயின்ஸ் எல்லாம் செல்லவே..செல்லாது . என்று.. உங்களுக்குள் இருக்கும் காதல் உச்சகட்டத்தை அடைந்து , நமது இதயத்தை பிழந்து , கண்களிலும்.. உதடுகளிலும் பொங்கி

வழிகிறதோ அன்று தான் மூளையின் அட்வைஸ் எல்லா அர்த்தமற்று மண்ணாகி போகும் . ஆனால் எனக்குள் இப்போது வந்திருக்கும் காதல் என்ற உணர்வு இன்னமும் என் மூளையின் கட்டு பாட்டில் தான் இருக்கிறது . அதனால் தான் என்

வார்த்தைகளில் தெளிவு இல்லை , தடுமாறுகிறேன் .

" ஆ..அத..அது எனக்கு ....தத் தெரியல .. யாமினி, ஆனா இதுக்கு என்ன பதில்ன்னு உனக்கு கண்டிப்பா தெரியும் "
என்று மடக்கினேன்

" சரி.. அதவிடு .. என் கிட்ட எல்லாமே சொல்றேன்னு சொல்றன்னு சொன்ன , இப்ப சொல்லு என்ன சொல்ல போற ..?"
பேச்சை மாற்றினால்

பொண்ணுங்க எப்பயுமே இப்படி தான் எதையுமே மறக்க மாட்டார்கள் . நாம் ஊசி முனையளவு ஒரு வார்த்தை சொல்லி இருந்தாலும் . எத்தனை நாள் ஆனாலும் தக்க சமயத்தில் அதை பிரயோகிப்பார்கள் . ஒரு முறை ஆழ மூச்சை இழுத்து விட்டு

கொண்டு , ஷிவானியின் கம்ப்யூட்டர் பழுதானது, அவள் என்னிடம் அன்பாக பேசியது , என் பேமிலி பத்தி கேட்டது , எனக்கு ஆபீஸ் வைத்து கொடுப்பதாக சொன்னது , என்று ( இந்த முறை உஷாராக ) சில ரொமாண்டிக்கான

நிகழ்வுகளையும் , வார்த்தைகளையும் தவிர்த்து எல்லாவற்றையும் சொல்லி விட்டேன் . எல்லாத்தையும் சொல்ல நான் என்ன லூசா .. ஒரு மாட்டுக்கு ஒரு சூடு . எனக்கு உண்மையை பேசி கடற்கரையில் கிடைத்த ஒரு அனுபவமே போதும்.

" ......................... ................................... ............................... இப்ப சொல்லு யாமினி வேலைக்கு சேர்ந்த சில நாள்லயே யார் இந்த மாதிரி ஹெல்ப்

பண்ணுவாங்க . அதனால தான் அவங்க கூட இருந்தப்ப உன் கிட்ட பேச முடியாம போச்சு . இதுல என் மேல தப்பிருக்கா ..?"

" அப்பன்னா.. மேடம் உன்ன நல்ல பார்துக்கராங்கன்னு சொல்லு ..."
என்றால் இரட்டை அர்த்தத்துடன்

" உண்மைதான் நீ சொன்ன அர்த்தத்தில் இல்ல .."
என்றேன் சற்று குரலை உயர்த்தி

"சரி.. அத விடு .. இப்ப சண்ட போன்ற அளவுக்கு நமக்குள்ள ஒன்னும் பெரிய பிரச்சனை இல்ல . நாம தான் அத பெருட்சா எடுத்திட்டோம் . அத விடு நீ சப்ப்டியா நந்தா ..? வேலையெல்லாம் எப்படி போகுது ..?"

" ம்ம்..ம்ம்.. மெஷ்ள சாப்டேன் . இப்ப தான் வேலை கொஞ்சம்..கொஞ்சமாக புரியுது . எனக்கு ஆர்வம் இருக்கு சீக்ரம் கத்துக்குவேன் . சீனியர் சர்வீஸ் எஞ்சினியர்க்கு (SSE ) கூட என்ன பாராட்டினார் . உன் வேலை எல்லாம்

எப்படி போகுது ஒன்னும் பிரச்சனை இல்லையே ..?"

" ம்ம்,.. நல்ல போகுது என்ன போன்லயே பொழப்பு ஊட்ட வேண்டியதா இருக்கு . இங்க எல்லாரும் ஹெல்ப் பண்றாங்க . எங்க என்ன தவிர 15 பேர் வேலை பார்க்குறாங்க . அதுல பூரணி, சுடர்க்கொடி ன்னு ரெண்டு பொண்ணுங்க நல்ல

பழகுறாங்க . அப்புறம் என் டீம் ஹெட் ஜோன்ஸ் , ரொம்ப ஸ்மார்ட்டா இருப்பார் , ரொம்ப நல்லவர் . அவர்தான் எனக்கு பொறுமையா எல்லாத்தையும் சொல்லி கொடுக்கிறார் ............................... ........

..............."

என்று ஆரம்பித்து கொஞ்ச நேரம் ஜோன்ஸ் புராணமே பாட ஆரம்பித்தால் . எனக்கு அந்த ஆள் மீது கடுப்பாக இருந்தது . ஆனால் பொறுமையாக கேட்டு கொண்டிருந்தேன் .

" எங்க ஆபீஸ் ள்ள கூட இப்படிதான் சந்தியான்னு ஒரு பொன்னும் , என்ன போலவே ரகுன்னு ஒரு அசிச்ட்டேன்ட்டும் , அப்புறம் எங்க SSE சேதுராமன் , மற்றும் MD ஷிவானி மேடம் எல்லாரும் நல்லா பழகுறாங்க . அதுல சந்தியா

ரொம்ப மைதியான பொண்ணு ,அதிர்ந்து கூட பேச மாட்டாள் . கலர் கொஞ்சம் கம்மின்னாலும் ரொம்ப காலியான முகம் . எங்க மேடம் பத்தி சொல்லவே வேண்டாம் .. நீ ஒரு நாள் அவங்கள நேர்ல பார்க்கணும்...

............................... .................... .........................."
என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே
" நந்தா எனக்கு கொஞ்சம் தல வலிக்கற மாதிரி இருக்கு காலில்லா பேசலாமா ப்ளீஸ் ..."
பெண்கள் எந்த ஆணை பற்றி நம்மிடம் மொக்கை போட்டாலும் நாம அமைதியாக கேட்கணும் . அதே மொக்கைய திருப்பி போட்ட அவ்ளோ தான் உடனே இடத்த காலி பண்ணிடுவாங்க .

" என்ன யாமினி...... ரொம்ப நாள் கழிச்சு பெசரோம்ம்... சர்... பரவால்ல ..ஓகே... காலில்லா பேசலாம் .. ஆனா நீ போன் பண்ணா அட்டென் பண்ணுவ இல்ல ..?"

" ஹ..ஹ.. ஹேய்... போடா ... (என்று சொல்லி நாக்கை கடித்து கொண்டால் ) அய்யய்யோ .... சாரி பா.. தெரியாம சொல்லிட்டேன் . "

" ஹ..ஹ.. நீ டா போட்டாலும் நல்ல தான் இருக்கு . நானும்.... உன்ன ............."
என்று இழுத்தேன்

" ஹேய்.. உத படுவ பொருக்கி ... "

" உதைங்க .. அக்கா.. "

" டேய்................ ( நர.. நறவென்று பற்களை கடித்து ) அதுக்கு நீ டீ.. போட்டே கூப்பிடு "
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: நீல நிற நிமிடங்கள் [discontinued] - by M.Gopal - 03-05-2019, 08:36 PM



Users browsing this thread: 1 Guest(s)