21-12-2018, 09:19 AM
(This post was last modified: 21-12-2018, 09:19 AM by johnypowas.)
ஜெர்மனியிலும் ஆப்பிள் நிறுவனத்துக்கு அடி - தொடர்ந்து சிக்கல் தரும் குவால்காம்
[/url]
[url=https://www.vikatan.com/author/179-g.sudhakar]
குவால்காம் நிறுவனத்துக்குச் சொந்தமான காப்புரிமை ஒன்றை மீறியதற்காக, சில ஐபோன் மாடல்களை விற்பதற்கு ஜெர்மனி மாவட்ட நீதிமன்றம் ஒன்று தடைவிதித்திருக்கிறது.
குவால்காம் நிறுவனத்தின் ஹார்டுவேர் காப்புரிமை ஒன்றை மீறி, குறிப்பிட்ட பாகத்தை ஐபோன்களில் பயன்படுத்தியுள்ளதாக குவால்காம் நிறுவனம் ஆப்பிள் மீது வழக்கு தொடர்ந்திருந்தது. அதில்தான் தற்போது குவால்காம் நிறுவனத்துக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்திருக்கிறது. இந்தத் தீர்ப்பின்படி ஐபோன் 7, 7 ப்ளஸ், 8, 8 ப்ளஸ் மற்றும் ஐபோன் X ஆகியவற்றின் விற்பனை பாதிக்கப்படும். ஒருவேளை ஆப்பிள் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும்பட்சத்தில் சில காலத்துக்கு இந்தத் தடை அமலுக்கு வராது. இந்தத் தீர்ப்பு ஆப்பிள் நிறுவனத்துக்கு சமீபகாலத்தில் நடந்த இரண்டாவது சறுக்கல். ஏற்கெனவே மென்பொருள் தொடர்பான, 2 காப்புரிமைகளை ஆப்பிள் மீறிவிட்டதாக, சீனாவில் குவால்காம் வழக்கு தொடர்ந்திருந்தது. அதிலும் ஆப்பிளுக்கு எதிராகவே தீர்ப்பு வந்தது.
இருந்தாலும்கூட, அது மென்பொருள் சார்ந்த காப்புரிமை என்பதால் ஐபோன்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக ஐபோன்களின் மென்பொருளிலேயே சில திருத்தங்களைச் செய்து நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தியது ஆப்பிள். ஆனால், இந்தமுறை ஜெர்மனியில் ஹார்டுவேர் தொடர்பான சிக்கல் என்பதால் இதுபோன்று எதுவும் செய்யமுடியாது. குவால்காம் Vs ஆப்பிள் மோதல் ஜெர்மனி, சீனாவில் மட்டுமல்ல; இதற்குமுன்பு அமெரிக்காவிலும் நடந்திருக்கிறது.