21-12-2018, 09:16 AM
![[Image: raman_07113.jpg]](https://image.vikatan.com/news/2018/12/21/images/raman_07113.jpg)
தமிழகத்தைச் சேர்ந்த டபிள்யூ.வி ராமன், இந்திய அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். முதல் தரப் போட்டியில் தமிழ்நாடு அணிக்காக 7939 ரன்கள் குவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் இவர் பந்துவீச்சிலும் விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
கிரிக்கெட் வீரராக மட்டும் இல்லாமல், பயிற்சியாளராகவும் அனுபவம் கொண்டவர் டபிள்யூ.வி ராமன். 2005-07 வரை தமிழ்நாடு அணியின் பயிற்சியாளராகச் செயல்பட்டு வந்தார். 2001-02 மற்றும் 2010-13 காலகட்டங்களில் பெங்கால் அணிக்குப் பயிற்சியாளராக செயல்பட்டார். 2013-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணிக்கு அசிஸ்டெண்ட் கோச்சாகவும், 2014 -ம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு பேட்டிங் ஆலோசகராகவும் இருந்த அனுபவம் கொண்டவர். மேலும், 2015-ம் ஆண்டு முதல் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பேட்டிங் ஆலோசகராக இருந்து வருகிறார். இந்தக் காலகட்டத்தில் இந்திய ஏ, துலீப் டிராபி மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்குப் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார்.
ராமன் தலைமையில் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி பல்வேறு சாதனைகள் படைக்கும் என அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. நாமும் வாழ்த்தலாம். வாழ்த்துகள் டபிள்யூ.வி ராமன்!


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)