21-12-2018, 09:15 AM
இந்தத் தேர்வு தொடர்பாகப் பேசிய அன்ஷுமன், ``பட்டியலில் இருந்த அனைவரிடமும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் முக்கியமான கேள்விகளாக, ஏன் பெண்கள் அணிக்குப் பயிற்சியாளராக வர விரும்புகிறீர்கள், இந்திய அணியை முன்னெடுத்துச் செல்ல என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. இந்தக் கேள்விகளுக்கான பதிலின் அடிப்படையில் மூன்று பேரை தேர்வு செய்தோம்” என்றார்.