21-12-2018, 09:14 AM
இதைத் தொடர்ந்து இந்தியப் பெண்கள் அணிக்கான பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு அதன் இறுதிப்பட்டியல் கபில்தேவ், அன்ஷுமன் மற்றும் ஷாந்தா ரங்கசாமி ஆகியோர் அடங்கிய குழுவுக்கு அனுப்பட்டது. இதில் ரமேஷ் பவாரின் பெயரும் இருந்தது. இந்த மூவர் குழு அனைவரிடமும் நேர்முகத்தேர்வு நடத்தி மூன்று பேர் கொண்டப் புதியப் பட்டியலை பி.சி.சி.ஐ-யின் நிர்வாகக் குழுவுக்கு அனுப்பியது.
இதில் முதல் இடத்தில் இருந்தவர் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான கேரி கிரிஸ்டன்தான். இவர் ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணிக்காகச் செய்துள்ள ஒப்பந்தம் காரணமாக, பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ராமனுக்கு வாய்ப்பு கிடைத்தது. கேரி கிரிஸ்டன் பெங்களூரு அணிக்குப் பயிற்சியாளராக தொடரவே விருப்பம் தெரிவித்துள்ளார். மூன்றாவது இடத்தில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான வெங்கடேஷ் பிரசாத் பெயர் இருந்தது குறிப்பிடத்தக்கது.