21-12-2018, 09:13 AM
பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சியாளர் - யார் இந்த டபிள்யூ.வி ராமன்?
இந்திய அணியின் முன்னாள் வீரரான ரமேஷ் பவார், இந்தியப் பெண்கள் அணியின் பயிற்சியாளராக இருந்து வந்தார். கடைசியாக நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. முக்கிய போட்டியில், மூத்த வீராங்கனை மிதாலி ராஜை அணியில் சேர்க்காதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதற்கு இடையில் மிதாலி ராஜ் ரமேஷ் பவார் மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். பதிலுக்கு பவாரும் மிதாலி மீது பல குற்றச்சாட்டுகளை பி.சி.சி.ஐ-க்கு கடிதமாக எழுதினா
கடந்த நவம்பர் மாத இறுதியுடன் பவாரின் பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில், புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் பி.சி.சி.ஐ இறங்கியது. ரமேஷ் பவாரே பயிற்சியாளராக நீடிக்க வேண்டும் என இந்தியப் பெண்கள் அணியின் கேப்டன் கவுர் மற்றும் ஸ்மிரிதி மந்தானா ஆகியோர் கோரிக்கை வைத்தனர். ஆனால், அந்தக் கோரிக்கையை பி.சி.சி.ஐ ஏற்கவில்லை.