21-12-2018, 09:07 AM
இந்த வாரம் ரிலீசாகும் ஆறு படங்களில் மூன்று படங்களுக்கு ரூபன் தான் எடிட்டர். இருந்தாலும் ஒவ்வொரு படத்தின் கதைக்கு தகுந்த மாதிரி படத்தொகுப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறார். குறிப்பாக இந்த படத்தின் விறுவிறுப்பான திரைக்கதைக்கு ரூபனின் படத்தொகுப்பு நன்றாக உதவியிருக்கிறது. மிக யதார்த்தமான, அதேநேரத்தில் பவர்வுல்லான ஆக்ஷன் காட்சிகளை அமைத்த ஸ்டன் சிவாவுக்கு தனி பாராட்டுகள். ஜெயம் ரவிக்கு ஏற்ப நம்பகதன்மையுடன் ஸ்டன்ட் காட்சிகளை அமைத்திருக்கிறார். ஏற்கனவே வந்த பல நூறு போலீஸ் படங்களின் பட்டியலில் அடங்கிவடுகிறது இந்த 'அடங்க மறு'.