21-12-2018, 09:06 AM
ஆண்ட்ராய்ட் போனில் உள்ள டெக்னாலஜியை கரைத்து குடித்து காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் தங்கவேல். வழக்கமான போலீஸ் கதை தான் என்றாலும், டெக்னாலஜி உதவியுடன் புதிதாக காட்டுகிறார். முதல்பாதி படம் விறுவிறுப்பாக நகர்கிறது. இரண்டாம் பாதியிலும் டெக்னாலஜி சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
![[Image: adanga-maru-movie-review-45-1545357973.jpg]](https://tamil.filmibeat.com/img/2018/12/adanga-maru-movie-review-45-1545357973.jpg)
நிறைய ஆய்வு செய்து படத்திற்கு திரைக்கதை அமைத்திருக்கிறார். அந்த மெனக்கெடலுக்காக தனி பாராட்டுகள். ஒரு நல்ல போலீஸ் அதிகாரி, மக்களின் போராட்டங்களை எப்படி கையாண்டிருப்பான் என்பதை டாஸ்மாக் போராட்டக் காட்சிகள் அழகாக காட்டுகிறது. ஆனால் நிறைய இடத்தில் லாஜிக் ஓட்டைகள் பளிச்சென தெரிகிறது. ஜெயம் ரவியை மாஸ் ஹீரோவாக காட்ட வேண்டும் என்பதற்காக, அவருடன் பணியாற்றும் அத்தனை போலீஸ்காரர்களையும் (முனிஸ்காந்த் மற்றும் அழகம்பெருமாளை தவிர) கெட்டவர்களாக காட்டியிருப்பது நியாயமாரே. அதிகார வர்கத்தின் ஆளுமையில், கீழ் நிலையில் உள்ள போலீஸ் அதிகாரிகள் படும்பாட்டை மிகையில்லாமல் யதார்த்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். வசனங்களும் நச்சென இருக்கின்றன. அதேநேரத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் வலு சேர்த்திருந்தால், சிறப்பாக இருந்திருக்கும். எப்போதும் கலக்கலான பாடல்களை தரும் சாம் சி எஸ் இதில் அடக்கி வாசித்து ஏமாற்றம் தந்திருக்கிறார். சாயாலி பாடல் மட்டும் பார்க்கும் போது கேட்க இனிமையாக இருக்கிறது. பின்னணி இசையும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை சாம். சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு படத்தை வேறு லெவலுக்கு எடுத்து சென்றிருக்கிறது. ஒவ்வொரு காட்சியும் மற்றொன்றில் இருந்து வேறுபடுவதை உணர முடிகிறது. குறிப்பாக டெக்னாலஜி சம்பந்தப்பட்ட விஷயங்களை மிக துல்லியமாக காட்டியிருக்கிறார்.