21-12-2018, 09:03 AM
அடங்க மறு' - விமர்சனம்
ஜெயம் ரவி, ராசி கண்ணா, ராமதாஸ், சம்பத் ராஜ் Director: கார்த்திக் தங்கவேல் சென்னை : ஒரு போலீஸ் அதிகாரி நேர்மையாக செயல்பட்டதற்காக பழிவாங்கப்படுகிறான். தனது இழப்புக்கு காரணமான வில்லன்களை அந்த போலீகாரன் எப்படி திருப்பி அடிக்கிறான் என்பதே ஜெயம் ரவியின் 'அடங்கமறு'.
நேர்மையான காவல் உதவி ஆய்வாளரான ஜெயம் ரவிக்கு ஐ.பி.எஸ். அதிகாரியாக வேண்டும் என்பது கனவு. அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, அண்ணன் பிள்ளைகள், காதலி (ராஷி கண்ணா), நண்பர்கள் என சந்தோஷமான குடும்பம் ஜெயம் ரவியினுடையது. நேர்மையாக செயல்படும் அவருக்கு தனது டிப்பார்ட்மெண்ட் ஆட்களாலேயே பிரச்சினை வருகிறது. பண பலமும், அதிகாரமும் கொண்ட பெரிய ஆட்களிடம் எப்போதும் அடக்கி வாசிக்க சொல்கிறார்கள்.
![[Image: adanga-maru-movie-review-3-1545357980.jpg]](https://tamil.filmibeat.com/img/2018/12/adanga-maru-movie-review-3-1545357980.jpg)
இந்நிலையில் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த பெரிய இடத்து பசங்களை ஜெயம் ரவி கைது செய்கிறார். அந்த பசங்களுடைய அப்பாக்கள் பெரும் புள்ளிகள் என்பதால், சில நிமிடங்களில் வெளியே வந்துவிடுகிறார்கள். தங்களை கைது செய்ததற்காக ஜெயம் ரவியின் குடும்பத்தை அழிக்கிறார்கள். இதனால் ஆத்திரமடையும் ஜெயம் ரவி, போலீஸ் வேலையை துரந்து அந்த பசங்களை அவர்களின் அப்பாக்களின் கைகளினால் கொலை செய்ய வைப்பேன் என சவால்விடுகிறார். இந்த சவாலில் அவர் எப்படி ஜெயிக்கிறார் என்பதே சுவாரஸ்யமான பழிவாங்கும் படலம்.