Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
ப்ளேஆஃப் சுற்றில் மும்பை: சூப்பர் ஓவரில் சன்ரைசர்ஸ் தோல்வி: திக், திக் கடைசி 3 ஓவர்கள்
12-வது ஐபிஎல் டி20 போட்டியின் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு மூன்றாவது அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி முன்னேறியது.
மும்பை வான்ஹடே மைதானத்தில் நேற்று நடந்த 51-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.
இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ஆட்டங்களில் 8 வெற்றிகள், 5 தோல்விகள் என மொத்தம் 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் ப்ளே-ஆஃப் சுற்றை உறுதி செய்தது. அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 13 ஆட்டங்களில் 6 வெற்றிகள், 7 தோல்விகள் என மொத்தம் 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.
[Image: mijpg]சூப்பர் ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெற வைத்த ஹர்திக் பாண்டியாவை கட்டி அணைத்து பாராட்டும் குர்னல் பாண்டியா : படம் உதவி ஐபிஎல்
 
ப்ளே-ஆஃப் சுற்றுக்கு ஏறக்குறைய 3 அணிகள் தயாராகிவிட்ட நிலையில் இன்னும் ஒரு இடத்துக்கு 3 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. கேகேஆர், சன்ரைசர்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த வாரத்தின் இறுதியில் முடிவு தெரிந்துவிடும்.
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. 163 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்ததால் ஆட்டம் டை ஆனது.
சூப்பர் ஓவர்

[Image: nabiujpg]
சூப்பர் ஓவரில் சிக்ஸர் அடித்த முகமது நபி: படம் உதவி ஐபிஎல்

 
இதையடுத்து முடிவு அறிய சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. சூப்பர் ஓவரில் சன்ரைசர்ஸ் அணி தரப்பில் மணிஷ் பாண்டே, முகமது நபி களமிறங்கினர்.  முதல் பந்திலேயே பும்ரா பந்துவீ்ச்சில் மணிஷ் பாண்டே ரன் அவுட் ஆகினார்.
அடுத்து வந்த கப்தில் ஒரு ரன் சேர்த்தார். 3-பந்தில் முகமது நபி சிக்ஸர் விளாசினார். 4-வது பந்தில் நபி போல்டாகியதால் சூப்பர் ஓவர் முடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டால் அந்த அணிக்கு வாய்ப்பு முடிந்துவிடும்.  சன்ரைசர்ஸ் அணி 2 விக்கெட்டு இழப்புக்கு 8 ரன்கள் சேர்த்தது.
9 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா, பொலார்ட் களமிறங்கினர். ரஷித் கான் வீசிய முதல் பந்திலேயே ஹர்திக் பாண்டியா சிக்ஸர் விளாசினர். அடுத்த பந்தில் பாண்டியா ஒரு ரன் எடுக்க 3-வது பந்தில் பொலார்ட் 2 ரன்கள் சேர்த்து 3 பந்துகள் மீதம் இருக்கையில் வெற்றி தேடித்தந்தனர்.
பும்ரா, ஹர்திக் முத்திரை

[Image: bujpg]
பந்துவீச்சில் முத்திரை பதித்த பும்ரா : படம் உதவி ஐபிஎல்

 
இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டீ காக் 69 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் பேட்டிங் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்து.
குறிப்பாக பந்துவீச்சில் ஜஸ்பரித் பும்ரா, குர்னல் பாண்டியா, ராகுல் சாஹர் ஆகியோர் பந்துவீச்சு சன்ரைசர்ஸ் அணிக்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது. இவர்களின் பந்துவீச்சை எதிர்கொண்டு ரன்களைச் சேர்க்க சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.
சூப்பர் ஓவரில் பும்ராவின் துல்லியமான பந்துவீச்சும், முகமது நபியின் விக்கெட்டை வீழ்த்தி நிலைகுலையச் செய்ததும் முத்தாய்ப்பாகும். உலகக் கோப்பைப் போட்டியில் பும்ராவின் பந்துவீச்சு சர்வதேச அளவில் பேசப்படும், அச்சுறுத்தலாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை. ஆட்டநாயகன் விருதையும் பும்ரா பெற்றார்.
அதேபோல, ஹர்திக் பாண்டியா சூப்பர் ஓவரில் அனாசயமாக ஒருசிக்ஸர் அடித்து அனைவரின் டென்ஷனைக் குறைத்தார். இந்த சீசன் முழுவதும் ஹர்திக் பாண்டியா பேட்டிங், பந்துவீச்சு ஆகியவற்றில் ஆல்ரவுண்டர் என்பதில் முத்திரை பதித்து வருகிறார். இதேபோல உலகக் கோப்பையிலும் விளங்கினால் சிறப்பாக இருக்கும்.
[Image: kaleejpg]விக்கெட் வீழ்த்திய கலீல் அகமதுவை பாராட்டிய வில்லியம்ஸன் : படம் உதவி ஐபிஎல்
 
வார்னர் வெற்றிடம்
சன்ரைசர்ஸ் அணியில் வார்னர் இல்லாத வெற்றிடம் நேற்று நன்றாகத் தெரிந்தது. வார்னருக்கு பதிலாக வந்த கப்தில் ஏமாற்றினார், வில்லியம்ஸன் இந்த சீசன் முழுவதும் சரியாக விளையாடவில்லை அது நேற்றும் தொடர்ந்தது.
மணிஷ் பாண்டே அபாரம்
ஆனால், தனிமனிதராக மணிஷ்பாண்டே நின்று அணியை கடைசி வரை வழிநடத்திச் சென்றது சிறப்பு. 47 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்து மணிஷ் பாண்டே இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும்.
163 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. சாஹா, கப்தில் களமிறங்கினர். இருவருமே பவர்ப்ளே ஓவருக்குள் ஆட்டமிழந்தனர். கப்தில் 15 ரன்களிலும், சாஹா 25 ரன்களிலும் வெளியேறினர். பவர்ப்ளேயில் சன்ரைசர்ஸ் 2 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் சேர்த்தது. 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் சேர்த்திருந்தது.
மணிஷ்பாண்டே மட்டும் ஒருபுறம் நிதானமாக  பேட் செய்துவர மற்றொரு பக்கம் களமிறங்கிய கேப்டன் வில்லியம்ஸன் 3 ரன்கள், விஜய் சங்கர் 12 ரன்கள், அபிஷேக் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்து நெருக்கடி கொடுத்தனர்.
தேறுவாரா விஜய் சங்கர்?
உலகக் கோப்பைப் போட்டிக்கு ஆல்ரவுண்டர் என்ற அடிப்படையில் இந்திய அணிக்கு விஜய் சங்கர் தேர்வாகியுள்ளார்.  ஆனால், இந்த சீசனில் ஒருபோட்டியில் கூட விஜய் சங்கர் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பேட்டிங் செய்யவில்லை, பந்துவீசவும் இல்லை. உலகக் கோப்பைப் போட்டியில் ராயுடு கூறியதைப் போல் முப்பரிமானக் கண்ணாடியை வாங்க வைத்துவிடக்கூடாது.  
கடைசி 3 ஓவர்கள்

[Image: pandyejpg]
கடைசிவரை போராடிய மணிஷ் பாண்டே: படம் உதவி ஐபிஎல்

 
முகமது நபி, மணிஷ் பாண்டே கூட்டணி 6-வது விக்கெட்டுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேட் செய்து ஸ்கோரை உயர்த்தினர். மணிஷ் பாண்டே 37 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்டது.
மலிங்கா வீசிய 18-வது முகமது நபி சிக்ஸர், பவுண்டரி உள்பட 12 ரன்கள் சேர்த்தார். பும்ரா வீசிய 19-வது ஓவரில் 2 பவுண்டரிகள் உள்பட 12 ரன்களை மணிஷ் பாண்டே சேர்த்தார்.
6 பந்துகளுக்கு 17 ரன்கள்
கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது.கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார்.முதல் இரு பந்துகளில் நபி ஒரு ரன்னும், 2-வந்து பாண்டே ஒரு ரன்னும் எடுத்னர். 3-வது பந்தில் முகமது நபி ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார். 4-வது பந்தில் யாதவிடம் கேட்ச் கொடுத்து 31 ரன்களில் ஆட்டமிழந்தார். 5-வது பந்தில் பாண்டே 2 ரன்கள் சேர்த்து, கடைசிப் பந்தில் லாங்-ஆன் திசையில் சிக்ஸர் அடிக்க ஆட்டம் டையில் முடிந்தது.
மணிஷ் பாண்டே 71 ரன்களிலும், ரஷித் கான் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது சன்ரைசர்ஸ் அணி.
மும்பை தரப்பில் பும்ரா, பாண்டயா பிரதர்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
டீ காக் ஆறுதல்

[Image: decockjpg]
அரைசதம்அடித்த டீகாக் : படம் உதவி ஐபிஎல்

 
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது.. அணியில் குயின்டன் டீகாக் தவிர மற்ற வீரர்கள் யாரும் குறிப்பிடத்தகுந்த அளவு பேட்டிங் செய்யவில்லை
அதிரடியாக தொடங்கிய ரோஹித் சர்மா 5 பவுண்டரிகள் உள்பட 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயில் மும்பை அணி ஒருவிக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் சேர்த்தது.
2-வது விக்கெட்டுக்கு சூரியகுமார், டீகாக் கூட்டணி அணியை ஓரளவுக்கு இழுத்துவந்தனர். கலீல் அகமது பந்துவீச்சில் 23 ரன்கள் சேர்த்த நிலையில் சூரியகுமார் யாதவ் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்து களமிறங்கிய லூயிஸ் ஒரு ரன்னில் வெளியேறினார். ஹர்திக் பாண்டியா, 18 ரன்னிலும், பொலார்ட் 10ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நிதானமாக ஆடிய டீகாக் 48 பந்துகளில் அரைசதம் அடித்தார்.டீகாக் 69 ரன்களிலும், குர்னல் பாண்டியா 9 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 03-05-2019, 10:25 AM



Users browsing this thread: 95 Guest(s)