Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா?- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக்கும் குஜராத் வழக்கறிஞர்
பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியதால் சர்ச்சையில் சிக்கிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தற்போது மேலும் ஒரு நெருக்கடி எழுந்துள்ளது.
உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா? என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுத்திருக்கிறார் குஜராத் வழக்கறிஞர் சங்கத் தலைவர் யடின் ஓஜா.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது அண்மையில் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியதாக ஆன்லைன் ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாக அது தொடர்பான புகாரை ரஞ்சன் கோகோய் அடங்கிய அமர்வே அவசர வழக்காக விசாரித்தது. வழக்கில் உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த வழக்கு மிகவும் அரிதான வழக்காகப் பார்க்கப்பட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு குஜராத் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் யடின் ஓஜா ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "உங்கள் மகன் மட்டும் மருமகனின் வருவாய் பல கோடிகளைக் கடந்துள்ளது. அதன் விவரத்தை உங்களால் வெளிப்படையாக அறிவிக்க இயலுமா? வெகு குறைவான காலகட்டத்தில் இவ்வளவு பெரிய தொகையை சம்பாதித்த வழக்கறிஞர்களைப் பார்த்திருக்க முடியாது. ஏன் உச்ச நீதிமன்றத்தில் இன்றைய தேதியில் மிகப்பெரிய வழக்கறிஞர்கூட இவ்வளவு சம்பாதிக்க இயலாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ரஞ்சன் கோகோய் எனது வங்கிக் கணக்கில் வெறும் 6 லட்சத்து 80 ஆயிரம் மட்டுமே இருக்கிறது எனக் கூறியிருந்தார். இந்நிலையில்தான் குஜராத் வழக்கறிஞர் சங்கத் தலைவர் இவ்வாறு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.
[Image: 583732183625670143533215408984402724126720njpg]
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 03-05-2019, 10:20 AM



Users browsing this thread: 42 Guest(s)