Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
குஜராத் உருளைக் கிழங்கு விவசாயிகளுக்கு எதிரான  வழக்கை பெப்ஸி திடீர் வாபஸ்

அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து குஜராத் உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு எதிராகத் தொடர்ந்த நீதிமன்ற வழக்கை வாபஸ் பெற ஒப்புக் கொண்டதாக பெப்ஸி நிறுவன இந்தியச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
லேஸ் சிப்ஸ் உருளைக்கிழங்கு வகையைப் பயிர் செய்து விற்றதற்காக குஜராத்தைச் சேர்ந்த 4 விவசாயிகள் மீது ரூ.4.2 கோடி நஷ்ட ஈடு கேட்டு பன்னாட்டு நிறுவனமான பெப்ஸி நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது.
முன்னதாக லேஸ் சிப்ஸ் வெரைட்டி உருளைக்கிழங்கு  விதைகளுக்கு அறிவுசார் சொத்துரிமை தங்கள் நிறுவனத்துக்கு இருப்பதால் அதைப் பயிர்செய்து விளைவிப்பதன் மூலம் நிறுவன உரிமைகளை விவசாயிகள் மீறிவிட்டதாகவும் இதற்கு நஷ்ட ஈடாக ரூ.4.2 கோடி அளிக்க வேண்டுமென்றும் பன்னாட்டு அமெரிக்க நிறுவனமான பெப்ஸி நிறுவனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
இதற்கு நாடு முழுதும் பலதரப்புகளிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக விவசாயிகள் மற்றும் பெப்ஸி நிறுவனம் ஆகியவற்றுக்கிடையேயான சட்டப் போராட்டத்தில் விவசாயிகள் பக்கம் நிற்கப்போவதாக குஜராத் மாநில அரசு அறிவித்தது.
குஜராத் விவசாயிகள் 1.21 லட்ச ஹெக்டேர்களில் 33 லட்சம் டன்கள் உருளைக்கிழங்குகளை உற்பத்தி செய்கின்றனர். சமீபத்தில் உ.பி.மாநில ஆக்ராவின் உருளை உற்பத்தியை விஞ்சி பனஸ்கந்தா உருளை உற்பத்தியில் இந்தியாவிலேயே சாதனை படைத்துள்ளது.
நாடு முழுதும் பெப்ஸி பொருட்களைப் புறக்கணிப்போம் என்று உலக அளவில் சமூகவலைத்தளங்களில் கோஷங்கள் முற்றுகையிட நீதிமன்றத்துக்கு வெளியே செட்டில் செய்து கொள்வதாக பெப்ஸி முன்வந்துள்ளது.  இந்த வழக்கு ஜூன் 12ம் தேதி அகமாதாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதாக இருந்தது.
இந்த விவகாரத்தில் விவசாயிகளின் சட்டச் செலவுகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் முன் வைக்கப்பட்டது.
இந்நிலையில் வழக்கை வாபஸ் பெறுவதாக பெப்ஸி நிறுவனம் அறிவித்துள்ளது
[Image: potato-marketjpg]
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 03-05-2019, 10:17 AM



Users browsing this thread: 60 Guest(s)