அவிழும் முடிச்சுகள் !!
#27
கார்த்தி தன் வெர்னாவை விரட்ட சரியாக அரைமணி நேரத்தில் கமிஷனர் சொன்ன அந்த ஐந்து நட்ச்சத்திர ஹோட்டலில் இருந்தான் !!


சம்பிரதாய சல்யூட்டுகள் ... கிட்ட்திட்ட ஒரு போலீஸ் பட்டாளமே அங்க கூடி இருந்தது !!!


என்ன சார் என்ன பிராப்ளம் ?


கமிஷனர் சார் உள்ள இருக்காங்க சார் உங்களை உடனே வர சொன்னாங்க ...

இருவரும் பேசிக்கொண்டே லிப்டில் ஏறினார்கள் !!


என்ன ஆச்சு முரளி ?


முரளி கார்த்திக்கு கீழ் வேலை செய்யும் சப் இன்ஸ்பெக்டர் !!!


சார் தொழிலதிபர் சக்திவேல் இருக்காரே ...


ஆமாம் நம்ம ரூபி குரூப் ஆஃப் கம்பெனிஸ் தான ?


ஆமாம் சார் அவரோட மருமகளை யாரோ கொலை பண்ணிட்டாங்க சார் !


மை காட் எப்ப ?


காலைல தான் சார் ... அவங்க இங்க ரூம் போடல வேற ஒருத்தர பாக்க வந்துருக்காங்க ... வந்த இடத்துல அந்த ரூம்ல வச்சி கொன்னுருக்காங்க ...


யாரு ரூம்ல இருந்தது ...?


அவரையும் சேர்த்து தான் சார் கொன்னுருக்காங்க ...


ஓ நாளைக்கு பேப்பர்ல ரெட்டை கொலைன்னு ஹெட்லைன்ஸ் போட்ருவான் ...


அதுல தான் சார் பிரச்னை இருக்கு ...


அதற்குள் லிப்ட் திறக்க அங்கே கமிஷனர் நின்று கொண்டிருந்தார் !!


கார்த்திக் விறைப்பான சல்யூட் வைக்க கமிஷனர் அவனை உள்ளே அழைத்துக்கொண்டு சென்று இரண்டு உடலையும் காட்ட கார்த்தியின் போலீஸ் மூளை அதை தடயங்களாக காட்சிகளாக பதிவு செய்தது ...



ஒரு அழகான இளம் பெண் முழு நிர்வாணமாக முதுகில் குத்தப்பட்டு இறந்து கிடக்க ... அருகில் ஒரு வாலிபன் முழு நிர்வாணமாக வயிற்றில் குத்தப்பட்டு இறந்து கிடந்தான் !!


ஆனால் அந்த பெண்ணுக்கு ஆனதை போல இவனுக்கு ஒரு குத்து இல்லை பல குத்துகள் !!




என்ன சார் ஆச்சு ?


அதை கண்டுபிடிக்க தான் உங்களை வர சொல்லிருக்காங்க ... கம்பீரமாக சொன்னார் அந்த தொழிலதிபர் சக்தி வேல் !!


கார்த்திக் அவரை பார்த்து ஒரு நொடி திகைத்துவிட்டு ... கமிஷனரை பார்த்து சார் ...


ஆமாம் கார்த்தி இவர் மிஸ்டர் சக்தி வேல் ...


தெரியும் சார் !


இது இவரோட மருமகள் இவங்க இங்க யாரையோ பாக்க வந்துருக்காங்க ...


யாரையோ என்ன இவனை தான் இந்தா செத்து கிடக்குறானே இவனை பாக்க தான் வந்துருக்கா ...


ஆமாம் கார்த்தி இவன் யாருன்னு தெரியலை இவங்க ரெண்டு பேரையும் யார் கொன்னதுன்னு தெரியல ... இவர் மருமக சாதாரண ஆள் இல்லை கோயம்புத்தூர் மில் ஓனர் முத்து சாமி சார் பொண்ணு .... அதனால யார் கொன்னதுன்னு கண்டுபுடிச்சே ஆகணும் ஏன் கொன்னான் இவங்களுக்குள்ள என்ன தொடர்பு எல்லாம் தெரியணும் !!
[+] 2 users Like dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: அவிழும் முடிச்சுகள் !! - by dannyview - 18-12-2021, 06:11 AM



Users browsing this thread: 39 Guest(s)