Thread Rating:
  • 4 Vote(s) - 2.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அண்ணி அமைவதெல்லாம்........ [waiting for update]
#27
நாங்க “ஹோ” னு கத்த அம்மா வெக்கப்பட்டுகிட்டே

“ச்சீ...கழுதைங்களா.....போய் படுங்க” னு சொல்லி அவங்க அறைக்கு போகவும்,

நாங்களும் எங்க அறைக்கு போயிட்டோம்....ஆனா இந்த விஷயத்த பத்தி குமுதா

கிட்டே உடனே எதுவும் பேச வேணாம் னு முடிவு பண்ணினோம்...ஏன்னா அந்த

பொண்ணுக்கு இது மாதிரி எந்த எண்ணமும் இல்லாம இருந்தா, இத பத்தி

தெரிஞ்சதுக்கப்புறம் எந்த சங்கடமும் வரக்கூடாது னு நெனைச்சோம்.....அந்த

பொண்ணு இயல்பா நம்ம எல்லாரோடையும் பழகி பாக்கட்டும்.....எந்த

மனக்கசப்பும் வரலேன்னா, அந்த பொண்ணுக்கு நம்ம எல்லாரையும் பிடிச்சிருக்கு

னு தெளிவா புரிஞ்சுதுனா மேற்கொண்டு என்ன செய்யணும்னு முடிவு

பண்ணுவோம் னு அப்பா சொல்லியிருந்தார்....





குமுதா அடிக்கடி வந்து போறதாலே இப்போ எல்லாரோடயும் கொஞ்சம் சகஜமா

பேச ஆரம்பிச்சா.... நானும் என் அக்காவும் போடற பொய்யான சண்டைகள

பாத்து சின்ன குழந்தையாட்டம் ரசிப்பா.....ஒரு நாள் வீட்டுலே அப்பாவும்

அண்ணனும் பேசிட்டிருந்தப்போ அப்பா “குமுதாவை பத்தி என்னப்பா

நெனைக்கிற?” னு கேக்கவும் அதுக்கு அண்ணன் “ம்ம்ம்....நான் அவங்களோட

ஒன்னும் பேசுனதில்லே...ஆனா உங்க எல்லார் கூடவும் நல்லா பழகுறாங்க னு

தெரியுது....நல்லா சமைக்கிறாங்க....ம்ம்ம்....வேற என்னப்பா சொல்றது?” னு

திருப்பி கேள்வி கேக்கவும் “அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க விருப்பமா?”

னு நேரடியா கேக்க, அண்ணன் ஒரு நொடி திகைச்சு போய் “என்னப்பா திடீர்னு

கேட்டுட்டீங்க?...அவங்களுக்கு இதுலே விருப்பம் இருக்கா னு

தெரியனும்...அவங்கள பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாதே” னு சொல்லவும்,

அப்பாவும் குமுதாவ பத்தி அக்கா சொன்னத சுருக்கமா சொல்லி முடிக்க “எனக்கு

அவங்கள பிடிச்சிருக்கு பா....ஆனா அவங்ககிட்டே முதல்லே கேளுங்க பா” னு

லேசா சிரிச்சுகிட்டே எழுந்து போயிட்டான்....”அடி சக்கைன்னானா.....பையன்

இத்தன நாளா சைட்டடிச்சுட்டே இருந்திருக்கான்....ஆனா சரியான

அழுத்தக்காரன் தான்...நாமளா கேக்கற வரைக்கும் வாயே தொறக்காம இப்போ

என்னமோ ரொம்ப நல்ல புள்ள மாதிரி நமக்காக ஒத்துக்கற மாதிரி

ஒத்துகிட்டான்.....”னு நான் கிண்டலடிக்கவும், அப்பாவும் சிரிச்சுகிட்டே

“டேய்....இப்போ நமக்கு தேவை அவனை இங்கேயே தங்க வெக்கறதுக்கு ஒரு

வழி...அவன் இஷ்டப்படியே எல்லாத்தையும் நடத்துவோம்...அவன்

சொல்றபடியே கேப்போம்...கல்யாணம் ஆனா அவன் பொண்டாட்டி

பாத்துக்கப்போறா....என்னை என் பொண்டாட்டி பாத்துக்கற மாதிரி....நான்

சொல்றது சரி தானே மா?” னு அம்மாவை பாத்து சிரிக்க, நானும் அக்காவும்

“ஓகே...ஓகே” னு கோரசா சொல்லவும் அம்மா பொய்யான கோபத்தோட”என்னை

வம்புக்கு இழுக்கலேன்னா உங்களுக்கெல்லாம் தூக்கமே வராதே” னு எழுந்து

போயிட்டாங்க....





ஒரு தடவ நான் என் அக்காவோட ஆபீஸ்க்கு போயிருந்தேன்.....அங்கே என்னை

கொஞ்ச நேரம் உக்கார சொல்லிட்டு அக்கா உள்ளே போயிருந்த நேரம் தன்னோட

வேலைய முடிச்சுட்டு குமுதா வெளியே வர, என்னை பாத்ததும்,”ஹாய்

மோகன்...எப்படி இருக்கீங்க?...இங்கே எப்படி?...ஓஹோ...அவளுக்காக

வெயிட்டிங்கா?....இன்னும் கொஞ்ச நேரத்துலே வந்துடுவா.....ம்ம்ம்.....இப்போ உங்களுக்கு வேற

எதாச்சும் வேலை இருக்கா?” னு புன்முறுவலோட சாதாரணமா கேக்கவும் நான்

இன்ப அதிர்ச்சியிலே வார்த்தை வராம நின்னேன்....குமுதா எங்களுக்கு

அறிமுகமான நாளிலிருந்து என்கிட்டே பேசின முதல் நீளமான வாக்கியம் இது

தான்.....வீட்லே எல்லார்கிட்டேயும் நல்லா பேசுறாளே, நம்மகிட்டயும் பேசுனா

நல்லா இருக்கும் னு ஏங்குவேன்...ஆனா நான் பாட்டுக்கு ஏதாச்சும் பேசி அவ

என்னை அதிகபிரசங்கி னு முடிவு கட்டிட்டா என்ன பண்றதுன்ற பயத்துலே

குமுதாவோட என்னுடைய உரையாடல்கள் எல்லாமே மணிரத்னம் படத்துலே

வர்ற வசனங்கள் அளவுலே தான் இருக்கும்...இன்னிக்கு என்னடான்னா

என்னமோ தினமும் பாத்து பேசுற தோழி மாதிரி பேசவும் ஒரு பக்கம்

சந்தோஷமா இருந்தாலும் இன்னொரு பக்கம் “மொக்கையா எதாச்சும் பேசி

சொதப்பிடாதே” னு முன்னே என்கிட்டே பேசுமே அந்த அசரீரி, அது திரும்ப

எச்சரிக்கை பண்ணுச்சு....நான் ஒரு மாதிரியா சுதாரிச்சுகிட்டு

“வேலை......ஒன்னும்...... இல்லீங்க” னு நிறுத்தி நிறுத்தி சொல்லவும், சினேகமா

சிரிச்சுகிட்டே “அதை ஏன் யோசிச்சு யோசிச்சு சொல்றீங்க?” னு கேள்வி கேக்க,

நான் “இல்லீங்க...நாம அதிகமா இதுவரை பேசிகிட்டது இல்லே...இன்னிக்கு

திடீர்னு நீங்க சாதாரணமா பேச ஆரம்பிக்கவும், எனக்கு கொஞ்சம் ஆச்சர்யமா

போச்சு...அதான்” னு தயங்கி தயங்கி உண்மைய ஒத்துக்கவும், குமுதா என்னை

விட ஆச்சர்யமா பாத்து “பொதுவா ஒரு ஆண்கிட்டே ஒரு பொண்ணு கொஞ்சம்

இயல்பா பேச ஆரம்பிச்சா, ஒன்னு தன்னோட மேதாவித்தனத்த

வெளிப்படுத்துவாங்க இல்லே தன்ன விட்டா அந்த பொண்ணுக்கு வேற ஆளே

இல்லேன்ற மாதிரி நடந்துக்குவாங்க....ஆனா நீங்க எந்த ஈகோவும் இல்லாம

உங்க உண்மையான சுபாவத்த இயல்பா ஒத்துகிட்டீங்க....உண்மையிலேயே

எனக்கு தான் ஆச்சர்யமா இருக்கு...... ம்ம்ம்....சொல்ல போனா நானும்

கொஞ்சம் கூச்ச சுபாவம் தான்....புது ஆளுங்களோட அவ்வளோ சீக்கிரம் ஒட்ட

மாட்டேன்...ஆனா உங்க இயல்பான, நேர்மையான பேச்சு

பிடிச்சிருக்கு.....பிரெண்ட்ஸ்?” னு சொல்லி கைய நீட்ட, எனக்கு அப்படியே கைய

மடக்கி “யெஸ்” னு கத்தி குதிக்கணும் போல இருந்துச்சு....குறைந்த பட்சம்

வாய்விட்டு சிரிக்கணும் போலவாவது இருந்துச்சு...பின்னே என்னங்க?......இந்த

காலத்துலே தனியா ஒரு பையன் மாட்டுனா ஓட்டி தள்ளுற பொண்ணுங்க

மத்தியிலே இப்படி ஒரு பொண்ணா?.....அதுவும் நான் பேசுற பேச்சு வேற

பிடிச்சிருக்கு னு சொல்லுது.....கண்ண மூடிகிட்டேன்......அப்படியே பறக்கிற

மாதிரி இருந்துச்சு...தரையிலே இறங்கவே மனசு இல்லே.....





மேகங்களுக்கு மத்தியிலே மிதந்துகிட்டிருக்கும்போது “ஹலோ.....மோகன்” னு

ஒரு குரல்......மனசே இல்லாம கண்ண தொறந்து பாத்தா, குமுதா நீட்டுன

கையோட என்னை குழப்பத்தோடவும், நான் ஏன் கை குடுக்கலே ன்ற

ஏமாற்றத்தோடவும் பாத்துட்டே இருந்தா....அப்போ தான் எனக்கு

உறைச்சுது...”அட ச்சே....அவ கை நீட்டிட்டு நிக்கும்போது நான் ஏதோ “குணா

கமல்” ரேஞ்சுக்கு கனவுலே இருந்திருக்கேன்....நானே என் தலையிலே தட்டிகிட்டு

“சாரிங்க....ப்ரெண்ட்ஸ்” னு கைய குடுக்கவும், அவ மறுபடி சிரிச்சுட்டு

“இல்லே...உங்களுக்கு வேற எதுவும் வேலை இல்லேன்னா அவ வந்ததும்

எதாச்சும் ஹோட்டலுக்கு போகலாமா?” னு கேக்க, “ஓ...போகலாமே” னு நான்

சந்தோஷமா ஒத்துக்கவும், என் அக்கா வெளியே வரவும் சரியா

இருந்துச்சு....எங்க ரெண்டு பேரையும் பாத்துட்டு “இந்த லூசு ஓவரா ஏதாச்சும்

அறுத்துச்சா?” னு குமுதா கிட்டே கேக்க, “ச்சே...ச்சே.....என்னப்பா நீ? அவர்

நல்லா தான் பா பேசினார்” னு பதில் குடுத்துகிட்டே முன்னாடி நடக்க, அக்கா

என்னை ரொம்ப ஆச்சர்யமா பாத்து “ நீயெல்லாம் அவராம் டா” னு குலுங்கி

குலுங்கி சிரிக்க, நான் மெதுவா அவ காதுலே “வீட்டுக்கு வாடி....உன்ன

வெச்சுக்கறேன்” னு சொல்லவும், அக்கா தன காதோர முடிய ஒதுக்கி விடுற

மாதிரி என் பக்கம் தலைய திருப்பி உதடுகள குவிச்சு முத்தம் குடுக்கவும், “சரி

சரி பொழச்சு போ” ன்ற மாதிரி சிரிச்சேன்....வாசலுக்கு வந்ததும் “ஹேய் எங்கே பா

போகலாம்?” னு அக்கா குமுதாவை கேக்க, அவளும் யோசிச்சுட்டு

“தெரியலேயே...நீங்க ஏதாச்சும் நல்ல இடம் சொல்லுங்க” னு என்னை பாக்கவும்,

நானும் யோசிச்சுட்டு “coffee day” போகலாம்னு சொன்னேன்.....நான் என்னோட

பைக்கிலேயும் அவங்க ரெண்டு பேரும் அக்காவோட ஸ்கூட்டியிலேயும்

கெளம்பி, அங்கே போய் சேர்ந்தோம்......அக்காவும் குமுதாவும் பக்கத்து

பக்கத்துலேயும் நான் அவங்களுக்கு எதிர் இருக்கையிலேயும் உக்காந்தோம்...





அக்கா உடனே எழுந்திருச்சு “நானே போய் ஆர்டர் பண்ணிட்டு

வர்றேன்...இல்லேன்னா ரொம்ப லேட்டாகும்” னு போயிட்டா....முதல் பத்து

செகண்டு மௌனத்துக்கு அப்புறம் ஒருத்தர ஒருத்தர் பாத்து சும்மாவே

புன்னகைச்சோம்....என்னமோ தெரியலே ரெண்டு பேரும் ஒரே சமயத்துலே

“உங்களோட hobbies? னு கேட்டதும் ரெண்டு பேருக்கும் வெக்கம்

வந்துடுச்சு...அவ ஒரு நமுட்டுசிரிப்போட நாக்க கடிச்சுக்க,, நான் வழிய, ஒரே

கொடும தான் போங்க.....நான் “நீங்களே கேளுங்க” னு சொல்ல, அவ உடனே ”நான்

கேட்டுட்டேன்...நீங்க தான் பதில் சொல்லணும்” னு சிரிக்க “அட...ஆமால்ல?” னு

திரும்ப வெண்ணையாட்ட்ம் வழிஞ்சேன்.....”ம்ம்ம்....நான் ஒன்னும் பெரிய ஆளு

லாம் கெடையாதுங்க.....எல்லா பசங்க மாதிரி நானும் ஊரு சுத்துவேன்,

இன்டர்நெட், சினிமா, பைக்....இவளோட நெறைய சண்ட

போடுவேன்.....ம்ம்ம்....இன்னொரு விஷயம் இருக்கு....ஆனா....வேணாங்க” னு

இழுக்கவும், குமுதா உடனே “எல்லாருக்கும் இருக்கற பொதுவான பழக்கங்கள்

தான் உங்களுக்கும் இருக்கு.....அதென்ன இன்னொரு விஷயம்?...ஏன்

தயக்கம்??...சரி, என்கிட்டே சொல்ல விருப்பம் இல்லேன்னா வேணாம்” னு ஒரு

சின்ன ஏமாற்றத்தோட தலைய திருப்ப, “அய்யய்யோ...அப்படி லாம்

இல்லீங்க....உங்ககிட்டே நல்லா பழகணும்னு ஆசை இருக்குங்க...உங்ககிட்டே

சொல்லனும்னு தான் தோணுது......ஆனா நான் அத பத்தி சொன்னா எங்கே

கிண்டல் பண்ணுவீங்களோ னு பயம்...அதான்” னு இழுக்க, “நாம ரெண்டு பெரும்

ப்ரெண்ட்ஸ் னு இப்போ தானே முடிவு பண்ணுனோம்?...அப்புறம் என்ன

தயக்கம்?”னு உரிமையோட அதட்ட, நான் ஒரு நொடி திகைச்சு போனேன்.....





என் அக்கா தவிர வேற எந்த பொண்ணும் என்கிட்டே இவ்வளோ உரிமையோட

பேசுனதே இல்லே....எனக்கு சந்தோஷமும், சிரிப்பும் ஒரு சேர, வார்த்தையே

தடுமாறி தடுமாறி தான் வந்துச்சு.....”அது...இல்லீங்க....சொல்றேங்க....” னு ஒரு

மாதிரி சமாளிச்சுகிட்டு “நான் கொஞ்சம் கவிதை லாம் எழுதுவேன்...ஆனா இது

வரைக்கும் யார்கிட்டேயும் இத பத்தி பகிர்ந்துகிட்டதும் கெடையாது...அதை

எல்லாம் படிக்க குடுத்ததும் கெடையாது” னு ஒரு வழியா சொல்லி முடிச்சுட்டு

“இப்போ கண்டிப்பா நல்லா ஓட்ட தான் போறா...நல்லா பல்பு வாங்க ரெடியா

இரு” னு என்னை நானே தயார் படுத்திகிட்டு எச்சில் கூட்டி முழுங்கிகிட்டு

அவளையே பாவமா பாக்க, என்னையே ஒரு நொடி ஆச்சர்யமா பாத்துட்டு

“கவிதையா?.......நெஜமாவா?” னு தன்னையே அறியாம கொஞ்சம் உரக்கவே

சொல்லிட்டா...பக்கத்து டேபிள்கள்லே உக்காந்திருக்கறவங்க லாம் ஒரு நொடி திரும்பி இவள

பாத்துட்டு மறுபடி அவங்கவங்க அரட்டையை தொடர ஆரம்பிக்க, நான்

கொஞ்சம் மெரண்டு தான் போனேன்....”இவ மட்டும் தான் ஓட்ட போறா னு

பாத்தா இவ ஊரை கூட்டி மானத்த வாங்குவா போலருக்கே” னு அவளையே பரிதாபமா

பாக்க, அவ தன்னோட தப்ப உணர்ந்து கையாலே வாய பொத்திகிட்டு என்னையே

கெஞ்சுற மாதிரி பாத்து “சாரிங்க....கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்.” னு

சொல்லிட்டு இப்போ மெதுவான குரல்லே” நீங்க கவிதை லாம்

எழுதுவீங்களா?.....எதை பத்தி எழுதுவீங்க?......நெறைய எழுதுவீங்களா?...குட்டி

குட்டி கவிதை லாம் எழுதுவீங்களா?" னு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் வேகத்துக்கு

கேள்விகள அடுக்கிகிட்டே போக, எனக்கு கூச்சமா போச்சு....




அவளோட கேள்விக்கணைகளுக்கு தடை போடற மாதிரி கை ரெண்டையும் அவ

முன்னே நீட்டி “அய்யய்யோ...இருங்க இருங்க....நீங்க நெனைக்கிற அளவுக்கு

நான் ஒன்னும் பெரிய கவிஞன் இல்லீங்க....” னு சொல்லிட்டு அப்படியே கண்ண

மூடி லயிச்சபடி “என்னை பொறுத்த வரை எல்லா மனிதனுக்குள்ளேயும் ஒரு

கவிஞன் இருக்கான்ங்க......நானும் அப்படித்தான்....கூட்டத்துக்கு மத்தியிலே நெறைய விஷயங்கள நாம

கவனிக்கறதில்லே...ரசிக்கறதில்லே....சில நேரங்கள்லே தனிமை

கூட சுகம் தாங்க....... தனிமை நமக்கு பிடிச்ச விஷயங்கள நினைக்கிறதுக்கு, ரசிக்கிறதுக்கான வாய்ப்பை

குடுக்கும்....அப்படி சில நேரங்கள்லே நான் ரசிச்ச விஷயங்கள, என் மனசுலே பதிஞ்ச எண்ணச்சுவடுகள

எழுத்துக்களா பதிவு செய்வேன்...அவ்வளோதான்ங்க” னு மெல்ல கண்ண திறந்து

பாத்தா, குமுதா அப்படியே பிரமிப்பிலே வெச்ச கண்ணு வாங்காம என்னையே

பாத்துகிட்டிருக்கா....”வாவ்.....நீங்க வித்தியாசமான ஆளு தான் போல...நல்லா

பேசறீங்க” னு புன்முறுவல் செய்யவும், நான் உடனே “நீங்க என்னை ரொம்ப

புகழுறீங்க” னு கூச்சப்பட, அதுக்கு குமுதா “அப்படி இல்லீங்க.....குழந்தைகளும்

கவிஞர்களும் ஒன்னு னு சொல்லுவாங்க....ஏன்னா அவங்களாலே மட்டும் தான்

சின்ன சின்ன விஷயங்கள ரசிக்க முடியும்....ரசிக்க தெரிஞ்சவன் தான் கவிதை

எழுத முடியும்....அப்போ நான் சொன்னது சரி தானே?” னு அந்த புன்முறுவல்

மாறாம கேக்க, “நீங்க கூட நல்லா பேசறீங்க” னு சொல்ல, “ஹேய்...இப்போ நீங்க

தான் என்னை ரொம்ப புகழறீங்க” னு சிரிக்க, எனக்கு சிலிர்த்து போச்சு...இப்படி

வெள்ளந்தியா பேசக்கூடிய பொண்ணு கண்டிப்பா நம்ம குடும்பத்துக்கு வந்தா

ரொம்ப நல்லா இருக்கும் னு பட்டுச்சு...ரெண்டு பேருக்கும் பரவசத்துலே அடுத்த

சில நிமிஷங்களுக்கு பேச்சே வரலே...அவ அடுத்து என்ன பேசறது னு தெரியாம

தலைய குனிஞ்சபடி கைவிரல்கள நெட்டி முறிக்க, நான் பேச்ச நிறுத்த விருப்பம்

இல்லாம “உங்க கேள்விக்கு நான் பதில் சொல்லிட்டேன்...நான் கேட்ட

கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலேயே” னு அவள

உரையாடலுக்குள்ளே இழுக்க, ஆனா அவ அத கவனிக்காதவ மாதிரி “ஆமா

நம்ம கூட ஒரு ஜீவன் வந்துச்சே...எங்கே போச்சு?...இவளோ நேரமா நாம

கண்டுக்காம விட்டுட்டோமே” னு சுத்தி முத்தி பாத்தா....
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: அண்ணி அமைவதெல்லாம்........ [waiting for update] - by M.Gopal - 02-05-2019, 08:48 PM



Users browsing this thread: 2 Guest(s)