Romance சுவாதி எப்போதும் என்❤️காதலி
முந்தைய பகுதிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும்

நன்றிகள் பல...

முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

விக்கி சுவாதியை நினைத்து கொண்டு அங்கிட்டும் இங்கிட்டும் நடந்து கொண்டு இருந்தான் ஐயோ அவள நினைக்காம இருக்க முடியலையே என்று சொல்லி கொண்டு இருந்தான் .

எப்படி தீடிருன்னு எனக்கு அழகா தெரியுறா இத்தனைக்கும் முந்தி ஆச்சும் அவ அழகா இருந்தா இப்ப கர்ப்பமானதால குண்டா ஆயிட்டான்னு நம்மாலே சொன்னோம் அப்புறம் எப்படி அழகா தெரியுறா என்று நினைத்து கொண்டு இருக்கும் போது மணி உள்ளே வந்தான் .

வந்து பார்க்கும் போது விக்கி அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருப்பதை பார்த்து என்னடா தூங்கலையா என கேட்டான் .இல்லடா என்றான் .ஏன் எதுவும் முக்கியமான விசயமா இப்படி யோசிச்சு கிட்டு இருக்க என்றான் .எ அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல தூக்கம் வரல அதான் என்றான் .பின் எதையோ யோசித்து விட்டு மணி உன் கிட்ட ஒன்னு கேப்பேன் தப்பா எடுத்துக்க மாட்டியே என்றான் . கேளுடா எதுவா இருந்தாலும் என்றான் மணி .

டேய் உனக்கு இப்ப உன் பொண்டாட்டி பாக்க அழகா இருக்காளா என்றான் . என்னடா கேக்குற எனக்கு என் பொண்டாட்டி எப்பவுமே அழகுதான்டா ஏன் இப்ப இப்படி ஒரு கேள்வி கேக்குற என்றான் .ஒ இதுக்கு எப்படி பதில் சொல்ல சுவாதியும் வள்ளி மாதிரி கர்ப்பமா இருக்கா எனக்கு பாக்க அவ அழகா இல்ல ரொம்ப அழகா இருக்க மாதிரி இருக்கு அதான் கேட்டேன் அப்படின்னு இந்த ஒட்ட வாய் கிட்ட சொல்ல முடியுமா என்று மனதிற்குள்ளே நினைத்தான் .

பின் வெளியே அது ஒன்னும் இல்லடா நேத்து என் பிரண்டு ஒருத்தனுக்கும் எனக்கும் ஒரு சின்ன argument என்றான் விக்கி .என்ன argument என கேட்டான் மணி .ஒன்னும் இல்ல அவன் பொண்டாட்டியும் உன் பொண்டாட்டி மாதிரி கர்ப்பமா இருக்கா அவன் சொன்னான் அவன் பொண்டாட்டி எப்பயும் இல்லாம இப்ப ரொம்ப அழகா இருக்காளாம் அவள பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்காம் .இன்னும் சொல்ல போனா எல்லா பொண்ணுகளும் கர்ப்பமானதுக்கு அப்புறம் தான் அழகா இருப்பாங்களாம் அப்படின்னு சொன்னான் .

நான் சொன்னேன் அப்படி எல்லாம் கிடையாது பொண்ணுக கர்ப்பமா இருக்கும் போது தான் அசிங்கமா இருப்பாளுக குண்டா ஆகி பாக்கவே சகிக்க மாட்டலுக அப்படின்னு சொன்னேன் .ரெண்டு பேருக்கும் பயங்கரமான வாக்குவாதம் வந்துச்சு .அதான் நீ சொல்லு உன் பொண்டாட்டி கர்ப்பமாதான இருக்கா அவ முந்தி அழகா இருந்தாளா இப்ப அழகா இருக்கலா என கேட்டான் விக்கி .மணி சிறிது நேரம் யோசித்து விட்டு உன் பிரண்டு சொல்றதுதான் சரி உண்மைலே என் பொண்டாட்டி முன்ன விட இப்பதான் அழகா இருக்க மாதிரி இருக்கு

அது கர்ப்பமா இருக்கதால வந்த தாய்மை அழகுன்னு நினைக்கிறேன் , ppஅதுவும் என் குழந்தையா அவ வயித்துல சுமக்கிறதால எனக்கு பெருமையா இருக்கு அவ குண்டா இருக்க மாதிரியே தெரியல அவ வயிறு மட்டும் பெருசா இருக்கதால அத மட்டும் பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு ,எல்லாத்தையும் விட நீ சொன்ன நம்ப மாட்ட அவ எப்ப தெரியுமா ரொம்ப அழகா இருப்பா என கேட்டான் மணி .

எப்ப என்றான் விக்கி .சில நேரம் கர்ப்ப வாந்தி பயங்கரமா எடுத்துட்டு மேல் மூச்சு கீல் மூச்சு வாங்கிட்டு வந்து அவ வாய் எல்லாம் துடைச்சுட்டு டயர்டா வந்து என் பக்கம் சாய்வ பாரு அப்ப அவ முகம் பாக்க குழந்தை மாதிரி இருக்கும் அப்ப அவளுக்கு ஆறுதலா தடவி கொடுத்து அவ நேத்தில ஒரு சின்னதா முத்தம் கொடுத்துட்டு அவ வயுத்துல வளர என் குழந்தைய தடவி கொடுப்பேன் பாரு பாரு அப்ப இருக்க சுகம்,நிம்மதி ,சந்தோசம் நீ பெருசா நினைக்கிற செக்ஸ்ல கூட கிடைக்காதுடா என்றான் மணி .

அங்கிட்டு போடா செக்ஸ்ல மட்டும்தான் சுகம் கிடைக்கும் என்றான் விக்கி .இன்னும் எத்தன காலத்துக்குத்தான் இதேயே சொல்லிக்கிட்டு இருக்க போரையோ என்றான் மணி .டேய் அதாண்டா உண்மை என்றான் விக்கி .சரி சரி லஞ்ச் டைம் முடிஞ்சுடுச்சு வா வேலைய பாப்போம் என்றான் மணி .

சரிடா என்றான் விக்கி .அது யாருடா மும்பைல எங்கள தவிர வேற பிரண்டு என கேட்டான் ,ஆஹா பயபுள்ள கரெக்ட்டா பாயிண்ட் பிடிக்குதே என்று நினைத்தான் விக்கி .அது மும்பை இல்ல சென்னை பிரண்டு போன் மூலம் பேசி சண்ட போட்டுகிட்டோம் .

அது சரி அடுத்த வாரம் பங்க்சென் வந்துரு என்றான் மணி .என்ன பங்க்சென் என்றான் விக்கி .என்ன பண்க்சனா வள்ளி வலைக்கப்புடா என்றான் மணி .ஓகே இத பத்தி டீ டைம்ல பேசுவோம் இப்ப நீ உன் கேபினுக்கு போ என்றான் விக்கி .

விக்கி சுவாதியை நினைத்து கொண்டு இருக்கும் அதே வேலையில் சுவாதி அவள் ஆபிசில் உக்காந்து வேறு ஒரு யோசனையில் இருந்தாள் .அதாவது இன்னும் அவள் கர்ப்பமாக இருப்பது ஆபிசில் யாருக்கும் தெரியாது .இப்போது அவளுக்கு 5வது மாதம் ஆரம்பிக்க போவாதால் ஓரளவு வயிறு நன்கு பெரிதாகி விட்டது அதையும் மீறி அவள் யாருக்கும் தெரியமால் தன் வயிற்ரை தன் சுடிதார் துப்பட்டாவை கொண்டும் தன் Handbag கொண்டும் ஓரளவு மறைத்து கொண்டு யாருக்கும் தெரியாமல் பார்த்து கொண்டாள் .

அதையும் மீறி யாரவது என்ன வர வர ரொம்ப குண்டாகி கிட்டே போற என்று கேட்டாள் ஒன்னும் இல்லையே சாப்பாடு கொஞ்சம் நிறைய சாப்பிடறேன் அவளவுதான் என்று சொல்லி சமாளிப்பாள் .சரி இதற்கு மேலும் சமாளிக்க முடியாது .அது மட்டும் இல்லாம டாக்டர் ரொம்ப ஸ்ட்ரைன் பண்ண கூடாதுன்னு வேற சொல்லிருக்காங்க அதுனால வேலைய விட்டு நின்னுடுவோம் என்று நினைத்து கொண்டு இருந்த போது சித்தார்த் அவளிடிம் வந்தான் .

சித்தார்த் சுவாதியோடு ஏப் எம் ஸ்டேசெனில் வேலை பார்ப்பவன் . அவனும் தமிழன் .சுவாதி வேலைக்கு சேர்ந்ததில் இருந்து அவளை ஒரு தலையாக காதலிப்பவன் .எப்போதும் சுவாதியிடம் வந்து வழிந்து வழிந்து பேசுவான் .அனால் சுவாதி டேவிட்டை காதலிப்பது தெரிந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்தவன் .

எப்போது சுவாதியும் டேவிட்டும் break up ஆனது தெரிந்ததோ அப்போது இருந்து மீண்டும் சுவாதிக்கு ட்ரை பண்ணிக்கொண்டு இருந்தான் . அதுவும் டேவிட்டுக்கு கல்யாணம் ஆனது தெரிந்ததும் அவன் ரொம்பவே நம்பிக்கையோடு சுவாதிக்கு ட்ரை பண்ணான் .

எப்போது பார்த்தாலும் அவளிடிம் வந்து கடலை போட்டு கொண்டே இருந்தான் .ஆனால் சுவாதிக்கு அவனை துளியும் பிடிக்காது .அவனை சமாளிப்பது எப்போதும் அவளுக்கு பெரும்படாகதான் இருந்தது .அன்றும் அப்படி அவன் சிரித்து கொண்டே வருவதை பார்த்து ஐயோ இந்த இம்சைய எப்படிதான் சமாளிக்கிறது என்று நினைத்து கொண்டு இருந்தாள் .

சித்தார்த் அவள் கிட்ட வந்து hey swathi how do you do ? என்றான் ஜொள்ளு விட்டபடியே .ஸ்வாதி மனதிற்குள்ளே நல்லவே இல்லடா என்று நினைத்து கொண்டாள் பின் வெளியே அவனிடிம் சிரித்து கொண்டே fine என்றாள் . அவனும் பதிலுக்கு பலமாக சிரித்து விட்டு அப்புறம் சுவாதி இந்த ஃப்ரைடே என்ன பிளான் என்றான் .

இம்ச எங்கயோ கூப்பிட்டு போக பிளான் பண்ணுதே இப்ப என்ன பண்ண என்று யோசித்து விட்டு சரி அவன் வழிலேயே போயி அவன விட்டு பிடிப்போம் என்று நினைத்து கொண்டு nothing ஒரு பிளானும் இல்ல என்றாள் அவனிடிம் .

அவன் சிறிது அமைதியாக இருந்து விட்டு அப்ப சுவாதி நம்ம ஆபிஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் ஃப்ரைடே நியூ ரிலிஸ் படம் எதுக்கு ஆச்சும் போயிட்டு அப்படியே எங்கயாச்சும் டின்னர் சாப்பிடுவோமா என்றான் .அட பாவி கரெக்ட்டா கொக்கி போட்ரியாடா என்று நினைத்து கொண்டு சுவாதி ஒன்னும் சொல்லமால் அமைதியாக இருந்தாள் .என்ன சுவாதி ஒன்னும் சொல்லாம இருக்க நான் ஏதும் தப்பா கேட்டுடனா இல்ல நீ இன்னும் டேவிட்டையே நினச்சு கிட்டு இருக்கியா என்றான் .

சரி வேற வழி இல்ல இவன் மூலமா ஆபிஸ்க்கு தெரிய வச்சுட்டு அப்படியே வேலையவும் ரிசைன் பண்ணிடுவோம் .நம்ம என்ன இனி இந்தியா வரவா போறோம் இதுக முன்னாடி அசிங்கபடுரோம்னு நினைச்சுகிட்டு என்று நினைத்து கொண்டு இருந்தாள் .சுவாதி என்ன ஆச்சு என்று அவளை எழுப்பினான் சித்தார்த் .சித்தார்த் நான் ஃப்ரைடே ஆபிசுக்கு வர மாட்டேன் என்றாள் .ஏன் என்ன ஆச்சு வேற எதுவும் ப்ரோக்ராம் இருக்கா என்றான் .

ஐ மீன் உண்மைய சொல்ல போனா நான் இனிமேல் எப்பவுமே ஆபிஸ்க்கு வர மாட்டேன் ரிசைன் பண்ண போறேன் என்றாள் .அதை கேட்டு அதிர்ச்சி ஆன சித்தார்த் வாட் எதுவும் ப்ரபலாமா நான் எதுவும் தப்பா கேட்டுடேனா அப்படி ஏதும் இருந்தா நான் வேணா பேசல ஆனா நீ வேலைய விட்டு போகாத ப்ளிஸ் என்று கெஞ்சினான் .

நோ நோ உன் மேல ஏதும் தப்பு இல்ல நாந்தான் ப்ரக்னட்டா இருக்கேன் என்றாள் .வாட் என்று சொல்லி கொண்டு சித்தார்த் மேலும் அதிர்ச்சி ஆகி வாயை பிளந்தான் .யெஸ் சித்தார்த் ஐ அம் ப்ர்கன்ட் என்றாள் .பட் ஹாவ் உனக்குத்தான் இன்னும் கல்யாணமே ஆகலையே என்றான் . சுவாதி அவனை கோபமாக முறைத்து விட்டு இவனிடிம் என்ன சொல்வது லவ்வர் மூலமான்னு சொன்னா அது யாருன்னு கேப்பான் ம்ம் என்ன சொல்லாலம் என்று யோசித்தாள் .

ஏன் கல்யாணம் முடிக்காட்டி ப்ரக்னட் ஆக முடியாதா என்றாள் ,ஆகலாம் இருந்தாலும் என்று கொஞ்சம் இழுத்து கொண்டே சுவாதி கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத நீ ஏதும் டேவிட் கூட இன்னும் affair ல இருக்கியா என கேட்டான் .நோ யு இடியட் அவன எல்லாம் மறந்து பல நாள் ஆகுது என்றாள் .

அப்ப யாரு என்றான் .ஐயோ இவன் என்ன விட மாட்டின்கிறான் இதுக்கு காரணம் விக்கினு உண்மைய சொல்லலாம் ஆனா அவன் யார்கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சொல்லிருக்கனே இப்ப என்ன சொல்றது என்று யோசித்து விட்டு சொன்னாள் .இதுக்கு யாரு காரணம்னு எனக்கே தெரியாது என்றாள் .

என்னது என்று மறுபடியும் அதிர்ச்சி ஆனான் .டேய் சும்மா சும்மா டென்சன் ஆகாத நான் ஒரு ஸ்பர்ம் டோனட்ட்ர் மூலமா ஆஸ்பத்திரி மூலமா கன்சீவ் ஆகிருக்கேன் போதுமா என்றாள் .எனக்கு இன்னும் ஒன்னும் புரியல ஏன் நீ இப்படி எல்லாம் பண்ற நான் உன்னையே விரும்புறேன் என்றான் .

ஐயோ என்ன இந்த இம்ச பிடிச்சவன் என்ன சொன்னாலும் விடவே மாட்டிங்குறான் .என்னதான் சொல்லி இவன கட் பண்ணி விடறது என்று யோசித்தாள் .

பின் எப்போதோ ஒரு முறை விக்கியிடிம் சுவாதி சண்டை போடும் போது விக்கி அவளை கிண்டலடித்து கொண்டே சொன்னது ஞாபகத்துக்கு வர அதை சொல்லுவோம் என்று சொன்னாள் .

சித்தார்த் ஐ அம் லெஸ்பியன் என்றாள் .

தொடரும்...

கருத்துக்களை போஸ்ட்க‌ளி‌ல் பதிவு செ‌ய்யவு‌ம்...

என்றும் வாசகர்கள் ஆதரவுடன்

உங்கள் ராஜேஷ்..
[+] 6 users Like Rajiss's post
Like Reply


Messages In This Thread
RE: சுவாதி எப்போதும் என்❤️காதலி - by Rajiss - 11-12-2021, 07:41 PM



Users browsing this thread: 11 Guest(s)