02-05-2019, 11:54 AM
நடிகரை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த நடிகைகள் கைது
மராத்தி பட நடிகர் சுபாஷ் யாதவ்(28) என்பவரும் ரோகினி மானே என்கிற நடிகையும் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துள்ளனர். யாதவுக்கு ரோகினியை பிடித்துவிட்டது. ஆனால் ரோகினிக்கு யாதவை பிடிக்கவில்லை.
இந்த காரணத்தால் ரோகினி யாதவிடம் இருந்து தள்ளித் தள்ளி சென்றுள்ளார்.
சுபாஷ் யாதவ் தனக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக ரோகினி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை திரும்பப் பெறுமாறு கூறி சுபாஷ் யாதவ் தன்னை மிரட்டுவதாகவும், அடித்ததாகவும் ரோகினி மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சமூக வலைதளத்தில் சுபாஷ் தன்னை அசிங்கப்படுத்துவதாக ரோகினி போலீசாரிடம் தெரிவித்தார். அதன் பிறகு மராத்தி திரையுலகினர் இந்த விஷயத்தில் தலையிடவே சுபாஷ் ரோகினியடம் மன்னிப்பு கேட்டார்.
ரோகினி தனது தோழியான நடிகை சாராவுடன் சேர்ந்து சுபாஷை ஒரு இடத்தில் சந்தித்து புகாரை வாபஸ் பெற ரூ. 15 லட்சம் தர வேண்டும் என்று கூறி மிரட்டியுள்ளார். மன்னிப்பு கேட்கவில்லை என்றால் குடும்ப மானத்தை கப்பல் ஏற்றிவிடுவோம் என்று அந்த நடிகைகள் சுபாஷை மிரட்டியுள்ளனர்.
சுபாஷின் இமேஜை டேமேஜ் செய்யும் வகையில் சில வீடியோக்களை அந்த நடிகைகள் எடுத்துள்ளனர். நடிகைகள் மிரட்டிய பிறகு சுபாஷ் ரூ. 1 லட்சம் மட்டும் கொடுத்துவிட்டு மீத பணத்தை தர மறுத்துள்ளார்.
நடிகைகள் ரோகினி, சாரா, போலீஸ் அதிகாரி அமோல் விஷ்ணு தகலே மற்றும் ராம் ஜக்டலே ஆகியோர் தன்னை மிரட்டுவதாக சுபாஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நடிகைகளை கைது செய்துள்ளனர்.