Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி சஸ்பெண்ட் செய்யப்படுகிறதா?- நெஸ்வாடியா கைதால் சிக்கல்: ஐபிஎல் விதிமுறைகள் சொல்வது என்ன?


படம் உதவி: ஐபிஎல்

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா போதை மருந்து வைத்திருந்ததாகக் கூறி, ஜப்பான் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதால், பஞ்சாப் அணி சஸ்பெண்டை எதிர்நோக்கி உள்ளது
பாம்பே டையிங், பிரிட்டானியா பிஸ்கட் உள்ளிட்ட பல்துறை சார்ந்த தொழில்களை வாடியா குடும்பத்தினர் செய்து வருகின்றனர். இதன் தலைவரான நுஸ்லி வாடியாவின் மகன் நெஸ் வாடியா (வயது 47). ஐபிஎல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவராகவும் நெஸ் வாடியா இருந்து வருகிறார்.
இந்தநிலையில், கடந்த மாதம் விடுமுறையைக் கொண்டாட ஜப்பான் சென்ற நெஸ் வாடியா போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக ஜப்பான் நீதிமன்றம் அறிவித்தது.
விதிமுறைகள்
ஐபிஎல் விதிமுறைகளின்படி, அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள், அதிகாரிகள் யாரும் அணிக்கும், தொடருக்கும், பிசிசிஐ அமைப்புக்கும், அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் வெளி உலகில் செயல்படக்கூடாது. அவ்வாறு செயல்பட்டால், அந்த நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட அணி, சஸ்பெண்டை எதிர்நோக்க வேண்டியது இருக்கும்.
இதற்கு உதாரணமாக, சிஎஸ்கே அணி,ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகிகளான குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்து, அது நிரூபிக்கப்பட்டது. இதனால், சிஎஸ்கே அணிக்கு 2 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டதைக் குறிப்பிடலாம். அதுபோல் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கும் தடை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
[Image: kingsjpeg]
 
ஐபிஎல் விதிமுறைகளின்படி, இந்த விவகாரம் முதலில் விசாரணை ஆணையத்துக்கு அனுப்பப்படும். அதன்பின் பிசிசிஐ குறைதீர்ப்பு அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு முடிவு செய்யப்படும்.
இது குறித்து பிசிசிஐ முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "சிஎஸ்கே அணியின் நிர்வாகிகள் தவறு செய்ததால், அந்த அணிக்கு என்ன கதி நேர்ந்ததோ அதே போன்றுதான் கிங்ஸ்லெவன் அணிக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. நெஸ் வாடியாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையால், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி தடையையோ அல்லது சஸ்பெண்டையோ எதிர்நோக்கி இருக்கிறது.
சிஎஸ்கே அணியின் நிர்வாகிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதால், அந்த அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதித்து நீதிபதி லோதா குழு தண்டனை விதித்தது. அதுபோல, அணியின் உரிமையாளர் அல்லது நிர்வாகி போதை மருந்து வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது, அவர் கிரிக்கெட் வாரிய அதிகாரியாக பதவியில் இருந்தால், இந்த தண்டனை அறிவிக்கப்பட்டவுடனே அவர் பதவியை இழந்துவிடுவார் " எனத் தெரிவித்தார்.
விதிமுறை சொல்வது என்ன?
ஐபிஎல் செயல்பாட்டு விதிகளின்படி, பிரிவு 14, உட்பிரிவு 2-ன்படி, அணியோடு தொடர்புடைய அதிகாரிகள், நிர்வாகிகள், வீரர்கள், பிசிசிஐ அதிகாரிகள் ஆகியோர் வெளிஉலகிலோ அல்லது மைதானத்திலோ அணிக்கோ அல்லது விளையாட்டுக்கோ அல்லது பிசிசிஐ அமைப்புக்கோ களங்கம் விளைவிக்கும் செயல்படுவது குற்றமாகும். அவ்வாறு செயல்பட்டால், ஆணையம் மற்றும் குறைதீர்ப்பு அதிகாரிகள் அந்த அணியை, அணி நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்ய அதிகாரம் உண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 02-05-2019, 11:52 AM



Users browsing this thread: 70 Guest(s)