Thread Rating:
  • 3 Vote(s) - 4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முத்தமிட்ட உதடுகள் [xossip down need to check for updates found somewhere]
#3
பரவச மன நிலையில் இருந்தான் நவநீதன். கிருத்திகாவிடம் தன் காதலை சொல்ல.. இதை விட வேறு ஒரு தருணம் அமையாது என எண்ணினான். !!!
'ஐ லவ் யூ ' என்கிற அந்த வார்த்தை அவன் தொண்டைக்குழிவரை வந்து வந்து திரும்பிப் போனது. அந்த வார்த்தையை சொல்ல ஆசை இருந்தாலும்... அதை தைரியமாக சொல்ல முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தான்.

'' இந்த ட்ரஸ்ல நீ செமையா இருக்க கிருத்தி !'' ஏதாவது பேச வேண்டுமே என்கிற எண்ணத்தில் பேச்சைத் தொடங்கினான் நவநீதன்.

மெல்லப் புன்னகைத்து காதோர முடியை பின்னால் தள்ளி விட்டுக் கொண்டாள்.
'' ஏன் நீ எடுத்து குடுத்ததுனாலயா ?''

'' ச்ச.. இல்ல''

அவள் மூக்கின் ஒரு பக்க மடலை ஒற்றை விரலால் அழுத்திப் பிடித்துக் கொண்டு.. மறு பக்கத்தில் 'சர்ர் ' என உறிஞ்சினாள்.
'' மூக்கு அடைச்சிகிச்சு ''

'' மழைல நல்லா நனைஞ்சிருக்க இல்ல.. நல்லா சளி புடிக்க போகுது ''

அவனது மெல்லிய அணைப்புக்குள் அவள் உடம்பு மெல்ல மெல்ல குளிரிலிருந்து விடுபட்டு சூடடை உணரத் தொடங்கியிருந்தது. அந்த இதமான கிறக்கத்தில் அவள் முதுகை அவன் நெஞ்சில் நன்றாகச் சாய்த்துக் கொண்டாள் கிருத்திகா !!

நவநீதனுக்கு ஒரு விதமான கிறக்கம் உண்டாகி.. அவன் கை மெல்ல அவளை இறுக்கத் தொடங்கியது. அதை அவளும் ஏற்று.. அவனை தடுக்காமல் இருந்தாள். அப்படி சில நொடிகள்.. பேச வார்த்தகளற்ற நிலையில் அணைத்துக் கொண்டிருக்க.. கிருத்திகா மெதுவாக அவளது தலையை அவன் கழுத்து இடைவெளியில்.. பின்னால் சாய்த்தாள். அவளின் புட்டுக் கன்னம் அவன் உதட்டருகில் வந்து.. உரசுவது போலிருக்க.. நவநீதன் துணிந்தான். தன் தயக்கம் உதறி.. அவள் கன்னத்தில் அவன் உதட்டை ஒற்றி எடுத்தான் !!

அவளிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. அவன் முத்தத்தை ஏற்றாள்.! மீண்டும் அதே போல.. அவள் கன்னத்தில் முத்தம் கொடுக்க.. மெல்ல அசைந்தாள்.

'' இது என்ன? ''

''முத்தம் தரேன்..''

'' ஆ.. அதுகூட தெரியாதாக்கும் எங்களுக்கு ''

'' இன்னிக்கு நீ.. ரொம்ப ரொம்ப அழகா இருக்க கிருத்தி..''

'' அலோ.. என்னிக்கும் நான் அழகுதான்.. ஓகேவா.. ?''

'' ம்ம்ம்.''

அவள் வயிற்றருகில் கை வைத்து மெல்ல அவளை இறுக்கினான். அவனுக்கு உணர்ச்சி கிளர்ந்தது. மெதுவாக அவள் கன்னத்தில் மூக்கை உரசி.. அவள் காதோரம் முத்தமிட்டான் !

'' ம்ம்ம். . '' அவள் சிலிர்த்துக் கொண்டு.. சிணுங்கியபடி சட்டென முகத்தை திருப்ப.. அவளின் ஈர உதடுகள் வந்து அவன் உதட்டை உரசிப் போனது.
அந்த ஒரு நொடி அவனுக்கு மின்னல் தாககுவது போலிருந்தது. அவன் கட்டுப் பாட்டை இழந்தான். என்ன துணிச்சலில் அதை செய்தான் என்று தெரியவில்லை.. ஆனால் செய்து விட்டான்.!!

கிருத்திகாவின் முகத்தை பிடித்து திருப்பி.. அவளின் ஈர இதழ்களைக் கவ்வி.. உறிஞ்சி விட்டான் நவநீதன் !!!


<t></t>
கிருத்திகாவின் மெல்லிய உதடுகள் குளிர்ச்சித் தண்மையைக் கடந்து இப்போது லேசான ஒரு இளஞ் சூட்டை அடைந்திருந்தது. வெது வெதுப்பான அவள் உதட்டின் உமிழ் நீர்.. இனிப்பான ஒரு அமிர்தத்தை அவனுக்கு சுரந்து கொடுத்துக் கொண்டிருந்தது !!!

நவநீதன் இதற்கு முன் எந்த ஒரு பெண்ணையும் முத்தமிட்டதில்லை. பருவம் சமைந்த ஒரு இளம்பெண்ணை இப்படி மடியில் அமர்த்தி.. இறுக்கமாக அணைத்துக் கொண்டு.. அவளின் உதடு சுவைத்ததில்லை.!!!
இப்போது தயக்கம் இல்லாமல் காட்டும் கிருத்திகாவின் உதடுகளை உறிஞ்சிச் சுவைத்துக் கொண்டிருந்த நவநீதன் சுவர்க்க உணர்வில் மிதந்து கொண்டிருந்தான்..!!

அதேநேரம் அவன் உடம்பு காய்ச்சல் வந்ததை போன்ற ஒரு ஊஷ்ணத்தை திடீரென வெளிப் படுத்தத் தொடங்கியது. அவன் கபாலங்களின் வழியாக எல்லாம் புகை வரும் போலிருந்தது.!!!

அவன் உடம்பு மெலிதான ஒரு நடுக்கத்தை வெளிப் படுத்த.. அந்த நடுக்கத்தை மறைப்பதற்காக.. அவளின் உதட்டை வாய்க்குள் இழுத்து உறிஞ்சினான் !!!

பாதி முகம் மட்டும் அவனுக்கு காட்டி.. சைடாக உதட்டை அவனிடம் சுவைக்கக் கொடுத்திருந்த கிருத்திகா.. அவன் கொடுக்கும் முத்தத்தில் கிறங்கியவளாக.. கண்கள் சொருக.. பாதி இமை மூடி.. அவளின் அழகிய விழிகளை சுழற்றி... போதையாக அவனை ஒரு பார்வை பார்த்தாள் !!!

அந்த போதைப் பார்வையில் கிறங்கிய நவநீதன்.. சற்று ஆவேசமாக அவள் உதட்டை உறிஞ்ச.. அவளின் நுணி நாக்கு மெதுவாக அவன் வாய்க்குள்வரை வந்து.. பயந்தது போல உடனே பின் வாங்கியது !!!

வெப்ப மூச்சு அவன் முகத்தில் அறைய.. உதடுகளை பிரித்து அவனுக்கு சுவைக்கக் கொடுத்துக் கொண்டிருந்த கிருத்திகா... சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் !!!


<t></t>
இவ்வளவு சுலபமாக கிருத்திகா தன் வசமாவாள் என்று நவநீதன் கொஞ்சம் கூட எதிர் பார்த்திருக்கவில்லை. வெளியே பெய்யும் மிதமான மழை காரணமோ என்னவோ.. அவன் அணைப்புக்குள் வந்தவள்.. உதட்டில் கொடுத்த முத்தத்தையும் மறுக்காமல் விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கிறாள். !!!
இதற்கு மேலும் அவன் தன் காதலை அவளிடம் சொல்லித்தான் அவளுக்கு புரிய வைக்க வேண்டுமா என்ன...???

அதற்கான அவசியம் இருக்கப் போவதில்லை என.. எண்ணிய நவநீதன்.. உற்சாகத்தின் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டிருந்தான். !!! அவனது உதட்டு முத்தத்தை ரசித்து.. ஏற்று.. பின் உதடுகள் பிரித்து.. முகம் திருப்பிக் கொண்டாள் கிருத்திகா !!!

அதன் பின்.. அவன் அவளை மீண்டும் முத்தமிட முயற்சி செய்தபோது..
''ச்சீ.. சும்மா இரு.. '' என சிரித்தபடி அவன் முகத்தில் கை வைத்து தள்ளி விட்டாள்.!

உடனே அவன் மடியில் இருந்து விலகி விடாமல்.. மேலும் கோஞ்ச நேரம் உட்கார்ந்து கொண்டிருந்த பின்பே.. அவன் மடியை விட்டு மெதுவாக எழுந்து போய் ஜன்னல் பக்கத்தில் நின்று வெளியே குறையத் தொடங்ய மழை வேகத்தைப் பார்த்துச் சொன்னாள்.

'' மழை நிக்குது.. !!!''

'' என்ன.. மழை நிக்குதா.?''

'' ம்ம்ம் ''

'' எங்க.. ?''

'' என்ன எங்க.. ? வெளிய பாரு நல்லா..!''

பார்த்தான் நவநீதன். ஜன்னல் வழியாக தெரிந்த மழைத் துளிகள் அடர்த்தி குறைவாகிக் கொண்டிருந்தது.
அவன் சிரித்தபடி..
''மழையால நிக்க முடியாது.. ஒண்ணு விடும்.. இல்ல விழும்.. ''

சைடாக பார்த்து அவனை லேசாக முறைத்தாள் கிருத்திகா.
'' அய்யே...அறிவ்வு...!!!''


<t></t>
மழை விட்டதும்.. லேசான தூரலில் நனைந்த படியே பால் வாங்க கடைக்கு போய் விட்டாள் கிருத்திகா. இன்னும் கரண்ட் வராரதால்.. வீட்டுக்குள் இப்போது கொஞ்சம் அதிகப்படியான இருள் கவிந்திருந்தது. அவன் மொபைல் டார்ச்சை ஆன் பண்ணி வைத்தான்.

பால் கவரை கையில் பிடித்தபடி தபதபவென ஓடிவந்த கிருத்திகா..வீட்டுக்குள் வந்ததும் சொன்னாள்.
'' எல்லாருமே இந்த ட்ரஸ் சூப்பரா இருக்குனு சொன்னாங்க.. ''

'' எல்லாரும்னா.?'' அவன் சமையற் கட்டின் பக்கத்தில் வந்து நின்றிருந்தான்.

'' கடைல.. நிறைய பேரு நின்றுந்தாங்க.. ''

அவனிடம் சொல்லி விட்டுப் போய் அடுப்பை பற்ற வைத்தாள். பால் பாத்திரத்தை எடுத்து.. பால் கவரை பல்லால் கடித்து உடைத்து.. பாத்திரத்தில் ஊற்றி.. பாலை அடுப்பில் வைத்து தண்ணீர் கலந்தாள்.!! அவளுக்கு பக்கமாக போய் நின்று கொண்டு.. அவள் செய்வதை ஒரு வித காதல் நிறைந்த ஆவலுடன் பார்த்தான் நவநீதன் !!
எதுவும் பேசத் தோன்றாமல்.. அவள் பக்கத்தில் அப்படி நிற்பதும்.. அவனுக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது.!!

'' கடைல இப்பதான் போண்டா போட்டுட்டு இருக்காங்க.. டீ க்கு கடிச்சிக்க போண்டா இருந்தா நல்லாருக்கும் !!'' என்றாள் கிருத்திகா.

'' என்ன போண்டா ??''

''கிழங்கு போண்டா.. ''

'' நான் போய் வாங்கிட்டு வரட்டுமா ??''

'' ம்ம். ஆனா இப்பதான் போட்றுக்காங்க.. கடைலயும் நல்ல கூட்டம் இருந்துச்சு.. இந்த மழைக்கும் அதுக்கும் நல்லா வேவாரம்தான் அவங்களுக்கு !!''

'' அப்ப நான் போய் வெய்ட் பண்ணி வாங்கிட்டு வரேன்.. லேட்டா போனா கிடைக்காது. நீ டீ வெய்.. !!''

'' ம்ம் '' அவனைப் பார்த்து அவள் சிரித்த ஒரு சிரிப்பே அவனுக்கு போதுமானதாக இருந்தது.

நான் முத்தமிட்டு சுவைத்த அந்த உதடுகள்தான்.. அவள் சிரிக்கும்போது என்ன ஒரு அழகாக விரிந்து மலர்கிறது.. !!! ஹ்ஹா.. !! அவன் கர்வம் கொண்ட நெஞ்சுடன்.. போண்டா வாங்க போனான். கிழங்கு போண்டா.. !!!


<t></t>
சூடான கிழங்கு போண்டாவை ஆளுக்கு இரண்டு என நவநீதன் வாங்கிக் கொண்டு போனபோது.. வாசற்படி பக்கத்தில் வந்து.. தன் இரண்டு கைகளையும் மார்பில் குறுக்காக கட்டிக் கொண்டு.. இன்னும் லேசாக தூரிக் கொண்டிருக்கும் மழையை.. அமைதியாக நின்று ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் கிருத்திகா. !!!

அவளை தோளில் தட்டி.. கனவில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவளை கலைத்து.. உள்ளே போனான்.
இரண்டு டம்ளர்களில் டீயை ஊற்றி ஆவி பறக்க வைத்திருந்தாள். அதை எடுத்துக் கொண்டு இரண்டு பேரும் உள்ளே போய் கட்டிலில் உட்கார்ந்தார்கள் !!!

போண்டா பற்றி பேசியவாறு டீ குடித்த போது.. நவநீதனின் மனம் அவன் காதலை அவளிடம் சொல்லிவிடத் துடித்தது.. !! இவ்வளவு தூரம் வந்த பிறகு அதை மட்டும் ஏன் சொல்லாமல் மறைக்க வேண்டும்..? எப்படியும் அவள் மறுக்காமல் ஏற்றுக் கொள்ளத்தான் போகிறாள்.. அப்படி ஏற்றுக் கொண்டால்.. இன்னும் சில முத்தங்கள் கிடைக்குமே.? அத்தை வரும்வரை.. மிகவும் உல்லாசமாக நேரத்தை ஓட்டலாமே.. !!!

'' உன்கிட்ட ஒண்ணு சொல்லனும் கிருத்தி..'' டீயை உறிஞ்சி விட்டு அவளைப் பார்த்துச் சிரித்தபடி சொன்னான்.

'' ம்ம்.. ? என்ன.?''

'' கொஞ்சம் தயக்கமா இருக்கு..''

'' பரவால்ல சொல்லு.. ??''

'' ஐ லவ் யூ சோ மச்.. !!!''

'' ஹ்ஹா.. !!!'' டீயை தள்ளிப் பிடித்துக் கொண்டு 'பக் 'கெனச் சிரித்தாள் கிருத்திகா.
அவள் அப்படி சிரித்தது அவனுக்கு திகைப்பாக இருந்தது. போண்டாவுக்குள் மசாலாவுடன் இருந்த கிழங்கை விரலால் எடுத்து வாயில் போட்டுக் கொண்டே சொன்னாள். !
''நினைச்சேன்.. நீ இதைத்தான் சொல்வேனு.. !! நான் நினைச்ச மாதிரியே சொல்லிட்ட..!!!''

'' அப்படியா.. அப்ப நீயும் இதை எதிர் பார்த்தியா..??''

'' ம்ம்.. இப்ப கொஞ்ச நாளாவே உன்கிட்ட இருந்து இந்த மாதிரி எதிர் பாத்துட்டுதான் இருந்தேன்.!! நீ கிஸ் பண்ணப்பவே.. இதை சொல்வேனு நினைச்சேன். !!! சரி.. எப்பருந்து.. ?''

'' என்னது. ?''

'' என்னை நீ லவ் பண்றது ?''

''ம்ம்.. இங்க வந்து ஒரு... ஆறு மாசம் கழிச்சு.. உன் மேல லவ் வந்துருச்சு.. ''

'' ம்ம்.. அப்படின்னா.. ஒரு வருசமா என்னை லவ் பண்ணிட்டு இருக்க.. ??''

'' ம்ம் ''

'' இவ்ளோ நாள்.. நீ ஏன் இதை என்கிட்ட சொல்லல. ?''

'' அ.. அது.. அது.. ஒரு தயக்கம்.. கொஞ்சம் பயம்... ''

'' ஏன்.. என்ன பயம்.. ?''

'' நீ ஏத்துக்குவியோ மாட்டியோனு.. ''

'' சரி.. இப்ப மட்டும் எப்படி சொன்ன..?''

'' இன்னிக்கு உன் பர்த்டே.. பத்தாததுக்கு.. நீ மழைல நனைஞ்சிட்டு வந்து என் மடில உக்காந்து... ஒரு மாதிரி ஆகி... நாம கிஸ் பண்ணி... ''
சொல்ல முடியாத சிரிப்புடன் நவநீதன் அவளைப் பார்த்தான்.

அவனை போல அல்லாமல்.. மிகவும் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள் கிருத்திகா.. !!

கரண்ட் வந்துவிட...
'' பளிச்.. பளிச்.. '' என விளக்குகள் எரியத் தொடங்கின... !!!


<t></t>
மழை விட்டிடிருந்தாலும்.. ஈரக் காறறில் பரவிய குளிர் இன்னும் குறையவில்லை. திறந்திருந்த ஜன்னல் வழியாக இப்போது உள்ளே பரவிய காற்று.. சிலுசிலுவென வீசி உடம்பில் இருந்த மெல்லிய ரோமங்களை எல்லாம் சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தது.

வீட்டுக்குள் இருந்த விளக்குகள் எல்லாம் பளிச்சென எரிந்து கொண்டிருக்க.. ஜீன்ஸ், டீ சர்ட்டில் இருக்கும் கிருத்திகாவை இப்போதுதான்.. வெளிச்சத்தில் நன்றாக ரசித்துப் பார்த்தான் நவநீதன்.!!!
கிருத்திகாவின் அந்த மிளிரும் அழகும்.. ஆடையின் எடுப்பும்.. அவனுக்குச் சொந்தமானது என்று எண்ணி.. அவன் மனம் மிகவும் கர்வம் கொண்டது.. !!!

டீயை குடித்த பின்.. டம்ளரைக் கட்டில் மீது வைத்து விட்டு.. கட்டிலை விட்டு இறங்கிப் போய்.. டிவியை ஆன் பண்ணினாள் கிருத்திகா.!! கேபிள் கனெக்சன் கட்டாகியிருந்தது.!!!

அப்படியே விட்டு விட்டு மெதுவாக வந்து கட்டிலில் உள்ளே தள்ளி.. கால்களை மடக்கி சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டாள். பக்கத்தில் கிடந்த தலையனை ஒன்றை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள்.!!!

'' நீ பதிலே சொல்லல கிருத்தி.. '' நவநீதன் மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்.

'' என்ன பதில். ??'' முகத்தை மட்டும் திருப்பி அவனைப் பார்த்தாள். அவள் முகம் கொஞ்சம் சீரியஸாக இருப்பதை பார்த்து அவனுக்கு கவலை வந்தது.

'' நான் உன்னை லவ் பண்றேனு சொன்னேனே..?''

'' ம்ம்.. யோசிச்சிட்டிருக்கேன் ''

'' இதுல யோசிக்க என்ன இருக்கு.?''

'' ஏன்.. இல்லையா ??''

'' சரின்னா ஓகே சொல்லு.. இல்லேன்னா நோ சொல்லு.. ''

'' அது போதுமா ??''
தன் முட்டை கண்களை விரித்து.. அவன் மேல் பரிதாபப் படுபவளைப் போல பார்த்தாள்.

'' போதும். . ''

'' அப்ப.. நோ தான்.. !!!'' என்றாள்.

அவள் விளையாட்டாகச் சொல்வதாக எண்ணினான் நவநீதன். ஆனால் அவள் முகத்தில் சிரிப்பு இல்லை என்பதை உணர்ந்த போது அவனை கவலை கவ்விக் கொண்டது.

'' ஏன்...????''

'' நீதான் டீடெய்ல்ஸ் எல்லாம் கேக்க மாட்டேன்னியே. ?''

'' அப்ப... நிஜமா.. நீ என்னை லவ் பண்லயா. ?''

'' அய்யோ.. இதான்.. நான் எப்படி சொல்றதுனு யோசிச்சேன். உன்னை எனக்கு ரொம்ப புடிக்கும்... ஆனா.. ஸாரி.. நான் உன்ன லவ் பண்ணல..''

அவன் நெஞ்சின் மேல் ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கி வைத்ததை போலிருந்தது. அவள் பொய்யாகவோ.. விளையாட்டாகவோ அதைச் சொல்லவில்லை என்பது அவனுக்கு தெளிவாகப் புரிந்தது..!!!


<t></t>
from 1st line @ https://xossip.com/showthread.php?t=1463825&page=9

<t></t>
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: முத்தமிட்ட உதடுகள் [xossip down need to check for updates found somewhere] - by bigman - 02-05-2019, 01:22 AM



Users browsing this thread: 1 Guest(s)