03-12-2021, 10:32 PM
முந்தைய பகுதிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும்
நன்றிகள் பல...
முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..
விக்கி சுவாதியை பற்றி நினைத்து கொண்டு இருந்தான் .பின் அவள் முகத்தை பார்க்கலாம் என்று நினைத்த போது யாரோ அவன் கன்னத்தில் பளார் என்று அரை விட்டது போல் இருந்தது .
அது வேறு யாரும் அல்ல விக்கியின் மனசாட்சி தான் அது அவனை போல ஒரு உருவமாகவும் வெளியே வந்தது . வந்து அவனை இன்னொரு அரை விட்டு ஆமா என்ன தீடிருன்னு ரொம்ப நல்லவனா மாறிட்ட அவ கூப்பிட்ட உடனே வாக்கிங் போற
அவ கூட உன் பழைய லைப் பத்தி பேசுற அப்புறம் அந்த கடைகரான் உன்னையே அவ புருஷன் சொன்னதுக்கு கோப பட மாட்டிங்குற . அப்புறம் அவ வாந்தி எடுத்த உடனே அவள தாங்கி பிடிக்கிற அப்புறம் அவ மயக்கம் போட்ட தூக்குர அப்புறம் ஆஸ்பத்திரில உன்னையே புருஷன் சொன்னதுக்கு கோப பட மாட்டிங்குர டாக்டர் அவளுக்காக உன்னையே திட்டுனா கோப பட மாட்டிங்குற என்ன எதுக்குமே கோப பட மாட்டிங்குற சாப்பாட்டுல உப்பு சேக்கலையா என்று கத்தியது அவன் மனசாட்சி .
விக்கி எதுவம் சொல்லவில்லை சொல்றா ஏன் பேச மாட்டிங்குற என்றது மனம் .அது டாக்டர் அவ ரொம்ப வீக்கா இருக்காங்கன்னு சொன்னங்க அதான் கோபபப்படால என்றான் .அது மட்டுமா காரணம் என கேட்டது அவன் மனம் .ஆமா வேற என்ன என்றான் .வேற என்னவா கேப்படா ஒன்னும் தெரியாத மாதிரி நீதான் கார்ல இருக்கும் போது அவள ரசிச்சு பாத்தத எனக்கு தெரியுமே . என்ன அவ என்ன உன் கண்ணுக்கு அவளவு அழகாவா தெரிஞ்சா அப்படி சைட் அடிக்கிற என்றது மனம் .
அவ என்ன அவளவு அழகா என்று அவன் மனம் கேட்டவுடன் விக்கி மீண்டும் சுவாதியை நினைக்க ஆரம்பித்தான் .O God அவ என்ன என்னைக்கும் இல்லாத மாதிரி இன்னைக்கு அழகா இருக்கா பார்க்ல அவ சிரிச்சு பேசுனது அவ மழைய ரசிச்சது அப்புறம் பஜ்ஜி சாப்பிட்டது எல்லாத்தையும் விட அவ வாந்தி எடுத்துட்டு கொஞ்சம் டயர்டா வந்தா பாரு உண்மைலே அதான் அழகு இல்ல இல்ல கார்ல சின்ன குழந்தை மாதிரி தூங்கிட்டு வந்தா பாரு ஐயோ என்ன cute சான்சே இல்ல என்று தனக்கு தானே சொல்லி கொண்டு இருந்தான் .
மீண்டும் அவனை அவன் மனசாட்சி தட்டி எழுப்பியது .ஹலோ என்ன நான் இங்க ஒருத்தன் உன் கிட்ட பேசிகிட்டு இருக்கும் போதே அவள நினைச்சு உறுகுற என்ன ஆச்சு உனக்கு . என்னன்னு தெரியல எனக்கு திரும்ப அவ முகத்த பாக்கணும் போல இருக்கு அவளவுதான் என்றான் .டேய் என்ன மறுபடியும் லவ்வா ரெண்டு தடவ லவ்ல அடி வாங்கியும் உனக்கு புத்தி வரல பாரு உன்னையே எல்லாம் என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே அவன் ஒரு தலையணையை எடுத்து அந்த மனசாட்சி உருவத்தின் மீது எறிந்து விட்டு அங்குட்டு போடா நான் போயி அவள பாக்க போறேன் .
என்று சொல்லிவிட்டு கதவை திறந்து விறுவிறுவென்று நடந்தான் .போயி அவள் ரூம் கதவை தட்ட போனான் . ஆனால் அவனால் என்னவோ முடியவில்லை அப்படியே மெல்ல திரும்பி போயி உக்காந்தான் . அப்படியே தலையில் கை வைத்து கொண்டு உக்காந்தான் .பின் தன் மனதிடிம் சொன்னான் நீ சொன்னது தான் சரி எனக்கு இனி லவ் வேணாம் . ஒரு வேல இன்னைக்கு அவ மேல வந்தது ஒரு attraction ஆ இருக்காலம் அதுனால எனக்கு அவ வேணாம் என்றான் .
அப்படி வா வழிக்கு என்றது மனம் . பின் கண்ணை மூடி தூங்க போனான் . ஆனால் அவன் கண்ணை மூடினால் சுவாதி தான் வந்தாள் .அவள் கண்களும் அவள் பாவமான முகமும் அவனுக்கு வந்து வந்து போனது . அவன் எல்லா பக்கமும் திரும்பி திரும்பி படுத்தான் .தலையணியை போட்டு அடித்தான் .பின் அவனை அவனே சுவரில் முட்டி கொண்டான் . அவள நினைக்காத அவள நினைக்காத என்று தன் கன்னத்தில் தானே அடித்து கொண்டான் .
ஆனால் அவனால் முடியவில்லை . கிட்டத்தட்ட மணி ஒன்னு ஆகி விட்டது அவனுக்கு இன்னும் தூக்கம் வரவில்லை . சரி போயி டிவி பாப்போம் என்று போனான் .வழக்கம் போல மூடு பாடல்கள் ஓடி கொண்டு இருந்தது .ம்ம் இவெங்கே ஒருத்தேங்கே இப்படி பலான பாட்டா போட்டு மூட கிளப்பி விட்டுரனுக அப்புறம் நம்ம கஷ்டப்பட வேண்டியாதா இருக்கு என்று சொல்லி கொண்டு வேற சேனலை மாற்றினான் . பின் ஒரு discoveri சேனல் வைத்து பார்த்து கொண்டு இருக்கும் போது அவன் மனசாட்சி மீண்டும் வந்தது .
என்னடா அவள மறக்க முடியலையா என்றது .ஆமா அவள நினச்சு தூக்கம் கூட வரல என்றான் .அவள மறக்க வழி சொல்லவா என்றது மனம் .சீக்கிரம் அத சொல்லி தொழ என்றான் .சிம்பிள் நீ எப்பவும் போல இரு என்றது மனம் .அப்படின்னா என கேட்டான் விக்கி .நீ எப்பவும் போல பல பேர கரெக்ட் பண்ணி போடு ,சுவாதிய அவளவா பாக்காத avoid பண்ணு அதையும் மீறி பாத்தா அவ கிட்ட கோபப்பட்டு நல்லா திட்டு முடிஞ்சா நீ திட்டுரதுல அவ ரோசப்பட்டு உன் வீட்ட விட்டே போகணும் அப்படி திட்டு என்றது மனம் .
சரி நீ சொல்றபடியே செய்யுறேன் அவள இனிமேல் அவலவா பாக்கவும் கூடாது பேசவும் கூடாது என்றான் .பின் ஒரு வழியாக ஒரு 3 மணியை போல தூங்கினான் .அதன் பின் காலையில் யாரோ அவனை தட்ட அவன் எந்திரக்க முடியமால் எந்திரித்தான் ,கண் முழித்து பார்த்த போது சுவாதி கையில் காபியை வைத்து கொண்டு அழகாக சிரித்து கொண்டு இருந்தாள் .ஒ என்ன இவள பாக்க கூடாதுன்னு நினச்ச கண் முன்னாடி வந்து நிக்குறா என்று நினைத்து கொண்டு இருக்கும் ஹலோ good morning சார் என்ன டிவி பாத்துட்டு அப்படியே தூங்கிட்ட என்றாள் .
விக்கி சும்மாதான் தூக்கம் வரல அதான் டிவி பாத்தேன் அப்படியே தூங்கிட்டென் என்றான் .பின் அவன் மனம் சொன்னது டேய் அவள பாக்காத இப்ப எதாச்சும் அவள கண்டபடி திட்டு என்றது .சுவாதி அவனுக்கு காப்பியை கொடுத்து விட்டு போயி கொண்டு இருந்தாள் .எதாச்சும் திட்டுடா என்று அவன் மனம் நச்சரிக்க சரி திட்டுறேன் என்று மனதிடம் கத்தி விட்டு ஏண்டி உனக்கு அறிவு இல்ல ஏன் இப்ப என்னையே எழுப்பி விட்ட அப்படின்னு திட்டவா என்றான் .ஓகே அப்படியே ஸ்டார்ட் பண்ணி பெரிய சண்டை ஆக்கு என்றது மனம் ,
போயி கொண்டு இருந்தவளை ஏ என்று சொன்னவுடன் அவள் திரும்பி பார்த்தாள் எதுக்கு என்று வாய் வரை வந்தது .ஆனால் அவள் முகத்தை பார்த்த உடனே அவனுக்கு திட்ட தோன வில்லை .எது என்று மட்டும் வாய் வரை வந்தது .வேற எதுவும் வரவில்லை என்ன விக்கி என்றாள் . ஒன்னும் இல்ல காப்பிக்கு தேங்க்ஸ் என்றான் .அது இருக்கட்டும் மணி 8 ஆச்சு ஆபிஸ்க்கு கிளம்பு என்றாள் .
ஒ ஷிட் என்று சொல்லி விட்டு எழுந்து கிளம்பினான் .ஓகே விக்கி நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு போனாள் ,இவனும் அவளுக்கு ஓகே பாய் என்றான் .பின் வேக வேகமாக குளித்து முடித்து ஆபிஸ்க்கு கிளம்பினான் . பின் வேகமாக காரை எடுத்து கொண்டு போனான் .காரில் போயி கொண்டு இருக்கும் போது மெயின் ரோட்டில் சுவாதி நின்று கொண்டு கை காண்பித்து ஆட்டோவை நிறுத்த முயற்சி செய்து கொண்டு இருந்தாள் . ஆனால் அது ரஷ் அவர் என்பதால் யாரும் அவளவாக நிப்பாட்ட வில்லை . சுவாதியும் பதற்றத்தில் நின்று கொண்டு இருந்தாள் .
சரி அவள இன்னைக்கு ஒரு நாள் அவள கார்ல ஏத்திட்டு போவோம் என்று நினைத்தான் .என்னது அவள கூப்பிட்டு போ போறயா டேய் அவள avoid பண்ணுனு சொன்னா அவகிட்டயே போற என்றது மனம் . அதுக்கு இல்ல பாவம் அவ உடம்பு வேற வீக்கா இருக்குன்னு டாக்டர் சொல்லிருக்காங்க அதான் அவள ஏத்தலாம்னு முடிவு பண்ணேன் என்றான் .என்னது பாவமா அதலாம் நீ எப்பயுமே பாக்க மாட்டியே இப்ப என்ன ஆச்சு என்று அவன் மனம் சொல்ல சொல்ல கேட்கமால் அவள் கிட்ட போயி காரை நிப்பாட்டி கார் சன்னலை திறந்தான் .
ஹ ஏறிக்கோ இன்னைக்கு ஒரு நாள் நான் உன்னையே உன் ஆபிஸ்ல விடுறேன் என்றான் .பரவல விக்கி நான் ஆட்டோ பிடிச்சு போயிக்கிறேன் என்றாள் .இந்நேரம் ஆட்டோ அவளவா கிடைக்காது அதுனால வண்டில ஏறு என்றான் .இருக்கட்டும் நான் பாத்துகிறேன் நீ போ என்றாள் ,ஹ வா ரெண்டு பேருக்குமே டைம் ஆகிடுச்சு அதுனால சீக்கிரம் வண்டில ஏறு என்றான் .என்னையே கொண்டு போயி விட்ரதால உனக்கு லேட் ஆகாதா என கேட்டாள் .
போற வழில தான இருக்கு அதுனால ஏறு என்றான் .அவளும் யோசித்து விட்டு சரி என்று சொல்லிவிட்டு வண்டியில் ஏறினாள் ,பின் அவள் ஏறுவதற்குள் காரில் இருந்த கண்ணாடியை அவளை பார்ப்பது போல திருப்பி வைத்தான் .பின் காரில் போகும் போது அவளை அவ்வோபோது அந்த கண்ணாடி வழியே பார்த்து கொண்டே வந்தான் . பின் சுவாதியை அவள் ஆபிஸ் அருகே இறக்கி விட்டான் .ஓகே விக்கி ரொம்ப தேங்க்ஸ் நான் வரேன் என்று சொல்லி விட்டு கிளம்பினாள் .அவனும் சரி என்று சொல்லிவிட்டு போகமால் அவள் போகும் வரை நின்று அவளையே பார்த்து கொண்டு இருந்தான் .
போதும் அவள சைட் அடிச்சது ஆபிஸ் போ லேட் ஆகிடுச்சு என்றது மனம் . அவனும் வேகமாக வண்டியை ஒட்டி ஆபிஸ் வந்து சேர்ந்தான் .பின் ஆபிஸ் போயி மிகவும் களைப்புடன் வேலை பார்த்தான் .
ஏன் என்றால் முதல் நாள் சரியாக தூங்கததால் வந்த களைப்பு .அதன் பின் வேலை எல்லாம் அசதியோடு முடித்து விட்டு மதியம் லஞ்ச்க்கு போக பிடிக்கமால் அவன் ரூமில் அப்படியே டேபிளில் சாய்ந்து உறங்கினான் . அதன் பின் அவனை மணி வந்து எழுப்பினான் .என்னடா சாப்பிட வரலையா என்றான் .இல்லடா நைட் சரியா தூங்கல அதுனால ரொம்ப டயர்டா இருக்கு .இந்த கொஞ்ச நேரம் தூங்குனாதான் நல்ல இருக்கும் அதுனால நான் சாப்பிட வரல என்றான் .
சரிடா தூங்கு நான் லஞ்ச் டைம் முடிஞ்சதுக்கு அப்புறம் வந்து எழுப்புறேன் என்று சொல்லிவிட்டு போனான் .சரி நைட் தான் ஸ்வாதிய நினச்சு தூங்கல இந்த அரை மணி நேரம் ஆச்சும் அவள நினைக்காம நிம்மதியா தூங்கனும் என்று நினைத்து கொண்டு கண் மூடினான் .ஒரு பத்து நிமிடம் அசதியில் தூங்கி இருப்பான் .உடனே மீண்டும் அவன் கனவில் சுவாதி சிரித்த முகத்தோடு வர இவன் கொஞ்ச நேரம் கனவிலே அவளை ரசித்து கொண்டு இருந்தான் .பின் அவசரமாக எழுந்து விட்டான் .இவளால பத்து நிமிஷம் கூட நிம்மதியா தூங்க முடியலையே ஏன் நாம அவள தூங்கும் போது கூட நினைக்கிறோம் என்று நினைத்தான்..
தொடரும்...
கருத்துக்களை போஸ்ட்களில் பதிவு செய்யவும்...
என்றும் வாசகர்கள் ஆதரவுடன்
உங்கள் ராஜேஷ்...