Thread Rating:
  • 1 Vote(s) - 2 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மதுமிதா [completed]
#4
.................................................

ஹ்ம்ம் நல்லா இருக்கேன்...

................................................

இல்லம்மா....

..............................................

ஹ்ம்ம்....

...............................................

ஹ்ம்ம்...

அந்த அம்மாள் ஏதோ சொல்ல சொல்ல அவரும் ஹ்ம்ம் கொட்டி கொண்டு இருந்தார்.

கடைசியில் "அம்மா நாம கடைசியா கேட்ட பொன்னை மறுபடியும் ட்ரை பண்ணி கல்யாணத்துக்கு ஓகே பண்ணிருங்க என்றார்".

என் தலையில் இடி விழுந்த போல ஆனேன். அப்படி என்றால் இவர் மனதில் நான் இல்லை. உடல் சோர்வும் சுயபச்சாதாபமும் சேர்ந்து மனதை அழுத்தியது.

என் பெட் சீட்டை நன்றாக இழுத்து போர்த்தி குட் நைட் மதி என்றார்.

குட் நைட் என்று முனங்கி விட்டு உறங்க ஆரம்பித்தேன்.

பின் வந்த ஆறு நாட்கள் உதய் என்னை பார்த்துக்கொண்டது ஒரு அம்மாவின் அன்பு கலந்து இருந்தது. அன்றைய தினத்துக்கு பிறகு தினமும் என் தலை கொதி கூட் நைட் சொல்வது வாடிக்கை ஆனது.

இருபத்து ஐந்து நாட்கள் முடிந்தது.

அப்புறம் மதி அமெரிக்கா புடிச்சு இருக்கா?

நல்லா இருக்கு உதய் .

பேசாம இங்கயே வேலை வாங்கி தருகிறேன் இருந்து கொள்கிறாயா?

ஐயோ என்னால் முடியாது"" சொர்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா" என்று பாடி காட்டினேன்.

ஹ ஹ ஹா நீ சொல்லுறதும் சரிதான். சேலை தாவணி எல்லாம் இங்க பார்க்க முடியுமா என்று கண் அடித்தார்.

நாளை நான் சேலை அணிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன் மேட்ச் ப்ளவுஸ் என்னிடம் இருக்கும் சரி உதயுடன் ஷாப்பிங் செல்லலாம் என்று சேலை கிடைக்கும் மாலுக்கு போக சொன்னேன்.

உதய் என்னை போதயோடு பார்த்து என்னை நல்லவனாகவே நாட்டுக்கு திரும்ப விடு தாயே என்று சலாம் போட்டார்.

போங்க நீங்க வேற என்று முதுகை பிடித்து தள்ளினேன்.

ஒரு பெரிய கடையில் சென்று தேட துடன்கினோம். ஒரு இளம் ரோஸ் நிறத்தில் முத்து வேலை செய்த புடவை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அதன் விலை இந்தியன் மதிப்பில் பதினைந்தாயிரம் ரூபாய். வேகமாக வைத்து விட்டு ஒரு ஆகாய நீல புடவையை தேர்ந்தெடுத்து பில் போட செய்தேன்.

சிறிது நேரத்தில் உதயும் சில பர்சேஸ் பேகோடு வந்தார். இருவரும் மகிழ்ச்சியாகவே ஹோட்டல் அறைக்கு திரும்பினோம், வழியில் சித்திக்கு, தங்கைக்கு, பாட்டிக்கு என்று பரிசுகள் வாங்கினேன். வீட்டுக்கு செல்லும் பொது எப்படி மகிழ்வார்கள் என்று கற்பனை செய்து கொண்டேன்.

அடுத்த நாள் ஆகாய நிற சேலை அணிந்து உதயுடன் கான்பெரென்ஸ்க்கு சென்றேன். எல்லோர் பார்வையும் என் மேல்தான் இருந்தது.

உதய் என் இடையோடு தன்னை சேர்த்து நடந்தார். வேறு எந்த ஆணும் என்னை நெருங்காமல் பார்த்துக்கொண்டார். கடைசி நாள் என்பதால் சிறிய பார்ட்டியும் நடந்தது. உதய் பிசினெஸ்காக கொஞ்சம் மது அருந்தினார்.

மாலை நேரம் இருவரும் அறைக்கு திரும்பினோம். வழக்கம் போல நான் உடை மாற்ற குளியலறைக்குள் செல்ல முயற்சிக்கும் பொது உதய் என்னை இழுத்து அவர் மேலே போட்டுக்கொண்டார்.

என் முகமெல்லாம் முத்த மழை பொழிந்தார். என் இதழை சப்பி உறிஞ்சு சுவைத்தார். என் கழுத்தில் அவர் மீசை கோலம் போடும் பொது நான் என்னை மறந்தேன், விண்ணில் பறக்க ஆரம்பித்தேன்.
<t></t>
IP Address: Logged
PM Find Rate Edit Delete Reply Quote Report Warn
manigopal Offline
Posting Freak
*****
அவர் கன்னங்களில் இரண்டு நாள் தாடி என் கன்னங்களை உரசியது சுகம் என்றால், அதை விட சுகம் அவர் மீசை என் உதட்டில் குத்தியதுதான்.
தலையெல்லாம் கிறுகிறுத்து இருந்தது. எது சரி எது தவறு என்று யோசிக்கும் மன நிலையில் நான் இல்லை.

அவர் கைகள் என் இடையில் ஸ்பரிசித்து மெல்ல என் இடுப்பை பிணைய ஆரம்பித்தார்.

அஹ் ...என்ற ஒலியுடன் அவரின் மீது அழுந்த படிந்து கொண்டேன்.

உதய் உள்ளே இருக்கும் மது வேலை செய்து கொண்டிருப்பதை அறியாமல் நானும் மதமதத்து ஒத்துழைக்க ஆரம்பித்தேன்.

எங்கே சென்றது என் விழிப்பு?

எங்கே சென்றது என் நாணம்?

எல்லாம் மறந்து இவரோடு உடலின் ஒவ்வொரு அணுவிலும் சுகம் கண்டு கொண்டிருக்கேன்?

இவர் யார்?

என்னை திருமணம் செய்து கொள்வாரா ?

என்ற கேள்விகள் என்னுள் மூழ்கி என் உடலெங்கும் காதலும் காமமும் ஆட்சி செய்ய தொடங்கியது.

உதய் என் சேலை தலைப்பையும் என் கொசுவத்தயும் ஒரே நேரத்தில் பிடித்து இழுத்தார். அந்த நேரத்தில் "மதி" என்று பாட்டியின் அதட்டல் குரல் கேட்டது.

எங்கிருந்து அந்த பலம் வந்தது என்றே தெரியவில்லை, உதயை உதறி விட்டு மாற்றுத் துணியுடன் குழியலறையில் சென்று கதவை அடைத்து தாழ் போட்டேன்.

ஷவர் திறந்து நனைந்தேன்.

உதய் கதவை வேகமாக தட்டினார். மதி கதைவை திற....ஏய் கதவை திறன்னு சொல்லுறேன்ல.
கொஞ்ச நேரம் தட்டியவர் வெளியே சென்று கதவை அடைக்கும் சத்தம் கேட்டது.

நான் நிதானமாக குளித்து உடை மாற்றி அறைக்குள் வந்து அறையின் ஹீட்டரை ஆன் செய்தேன்.
குளிருக்கு கதகதப்பு மனதின் பாரத்தை குறைத்தது.

நான் வீட்டில் இருக்கும் பொது வந்த அந்த கனவு"உதய் என் கொசுவத்தை அவிழ்க்கும் கனவு ஞாபகம் வந்தது.

" ச்சே கொஞ்சம் நேரத்துல இப்படி அறிவில்லாம நடந்துகிட்டேனே!

சிறிது நேரத்தில் அறைக்கு வந்தவர் கையில் ஒரு பார்சல் இருந்தது. இப்போது என் முன்னாடியே அவர் அம்மாவுக்கு கால் செய்தார்.

அம்மா நான் உதி பேசுறேன்

..........................................

என்னம்மா எல்லா ஏற்பாடும் முடிந்ததா?

.....................................

ஹ்ம்ம் ஓகே நாளைக்கு சாயந்திரம் வந்துருவேன்

.................................................

நாளை மறுநாள் தானே நிச்சயம் செய்ய போகிறோம்

.............................................

என்னை கீழ்க்கண்ணால் பார்த்தபடியே "ஒரு வாரத்தில் திருமணம்! பெண் வீட்டார் சம்மதித்தார்கள் தானே?
இப்போது என் கண்ணில் கண்ணீர் உருண்டு கீழே விழுவது போல அமர்ந்திருந்தேன்.
தேவை இல்லாமல் சீன க்ரியேட் செய்ய விரும்பாமல், என் முகத்தில் குளிர்ந்த நீரை அடித்து கழுவினேன்.

பிறகு நானோ அவரு பேசவே இல்லை. விமானத்தில் ஏறி ஊருக்கு பயணமானோம் .
சென்னை ஏர்போர்ட்டில் இறங்கியதும் என்னை ஒரு டேக்சியில் ஏற்றி அனுப்பினார்.

தேன்க் யு சார் என்றேன் நிமிராமலேயே!

ஹ்ம்ம் குட் இப்படித்தான் ஞாபகமா இருக்கணும்.

நம்ம ரெண்டு பெரும் ஒன்னா ஆபிஸ் போக வேண்டாம்! நீ இப்போ பாட்டி வீட்டுக்கு போறியா இல்லை உன் வீட்டுக்கு போகிறாயா?

பாட்டி வீட்டுக்கு சார். ரெண்டு நாள் அங்க இருந்துட்டு என் வீட்டுக்கு வந்துருவேன்.

ரெண்டு நாள் கழிச்சு ஆபிஸ் வந்தால் போதும். நாம பேசியதை விட கூடவே உன் அக்கவுண்ட்டில் க்ரெடிட் ஆகி இருக்கும்.

எனிவே பை & தேங்க்ஸ் பார் யுவர் கம்பெனி என்று நக்கலாக சொல்லி விட்டு சென்றார்.

நான் பாட்டி வீட்டுக்கு கனத்த மனதுடம் பயணம் செய்தேன். என் கண்ணீர் மட்டும் நிக்கவே இல்லை.
<t></t>
IP Address: Logged
PM Find Rate Edit Delete Reply Quote Report Warn
manigopal Offline
Posting Freak
*****
பாட்டி வீட்டுக்கு ஒரு கிலோ மீட்டர் க்கு முன்பு வண்டியை நிறுத்த சொல்லி முகம் அலம்பினேன். என் சோர்வு ஒரு பயண களைப்பாகவே இருக்கட்டும்.

டவுனில் உள்ள பிரவுசிங் செனடர் சென்று என் அக்கவுண்ட்டில் இருந்த பணம் பாதியை அம்மாவின் அக்கவுன்ட்டுக்கு மாற்றினேன்.

என்னுள் எல்லாவற்றையும் புதைத்துக்கொண்டு பாட்டி வீட்டில் இறங்கினேன்.

பொங்கல் அடுத்து வருவதால் பாட்டியின் வீட்டை சுற்றிலும் வெள்ளை அடித்து சுத்தம் செய்து இருந்தார்கள்.
வீட்டின் அருகே செல்லும் பொது நெய் மனம் வந்தது, எல்லோர் வீட்டிலும் காப்பு கட்டிக்கொண்டு இருந்தார்கள்.

ஓ நாளை விடிந்தால் தை பொங்கல்... ஊ ரே விழாக்கோலம் பூண்டிருந்தது. சிறுவர்கள் அங்கும் இங்கும் ஓடி விளையாடினார்கள்.
பாட்டி வெளியே வந்து என்னை கட்டி தழுவிக்கொண்டார்.

பாட்டி...நான் வருவேன்னு உனக்கெப்படி தெரியும்...

என் பேத்தி என்னை பார்த்துட்டுதான் ஊருக்கு போவான்னு என் மனசு அடிச்சு சொல்லுச்சு டா.

என் செல்ல பாட்டி ...ப்ச்.... ப்ச் ...

போதும்டியம்மா கட்டிக்க போறவனுக்கு பாக்கி வெய்யு...

உனக்கு போகத்தான் அவனுக்கு.

ஏய் என்னடி இது அவன் இவன்னு பேசுர? மரியாதையா அவருன்னு சொல்லு.

ஆமா என்ன கட்டிக்க க்யுல ஆள் நிக்குதுன்னு உனக்கு நினைப்பா பாட்டி, எனக்கு கல்யாணமெல்லாம் வேண்டாம் பாட்டி
நான் இப்படியே உன் கூட ஜாலியா இருந்துக்குறேன்

நீ மட்டும் உம் ன்னு சொல்லு இப்பவே பேக் பண்ணி இங்க வந்துறேன்.

பாட்டி நான் அம்மாவையும் தங்கச்சியும் பாக்க போகணும்.

இப்பவே என்னடி அவசரம் ரெண்டு நாள் கழிச்சு போ.

இல்ல பாட்டி தங்கச்சி கல்யாணதுக்காகதான் இந்த பணம் சம்பாதிக்க போனேன், அதை முறையாக கொண்டு சேர்க்கணும்.

நீ சொல்லுறதை பார்த்தா நான் பிடுங்கிக்குவேன்னு எனக்கே சந்தேகமா இருக்கு.

அய்யோ அப்படி இல்ல பாட்டி, சித்திகிட்ட ஒப்படைச்சா என் மனசு ஆறும். (பாட்டியிடம் அம்மா என்று சொல்ல மாட்டேன் ).

பரவாயில்லடா உனக்கு ரொம்பவும் அசதியா இருக்கும், வெந்நீர் போட்டு வெச்சுருக்கேன் குளிச்சுட்டு வா சேந்து சாப்பிடலாம்.

பாட்டியிடம் சிறிது நேரம் கொஞ்சிவிட்டு குளிக்கப்போனேன். குளியலறைக்கு சென்றதும் உதயின் ஞாபகம் வந்தது.

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. அறியாத வயதில் விஜியை இழந்தேன். இப்போது விவரம் தெரிந்தும் உதியை இழக்கிறேன்.

நிமிடத்தில் உதய் உதி ஆகிப் போனான். அவர் அவன் ஆனது. ஆம் இனி யார் வந்தாலும் என் காதல் மாறாது!!!
அவன் யாரை கல்யாணம் செய்தாலும் என் கணவன் அவன் மட்டுமே.

குளித்து வெளி வந்து பாட்டியின் கைவண்ணத்தை ஒரு பிடி பித்தேன்.

காதல் வந்தாலும், காதலனை பிரிந்தாலும் சோறு உன்ன முடியாது, தூங்க முடியாது என்று சொல்வதெல்லாம் பொய்!!!
நான் நன்றாக சாப்பிட்டு நிம்மதியாக தூங்கினேன். ஏன் தெரியுமா?

என் தங்கை திருமணத்துக்கு தேவையான பணம் கிடைத்து விட்டது. இனி இந்த பாட்டியுடன் என் மீதி காலத்தை கழிக்க போகிறேன்.
அம்மாவை தம்பி மூன்று மாதங்களுக்கு பிறகு கூடவே அழைத்து சென்று விடுவான். பிறகென்ன எனக்கான ஒரே ஜீவன் பாட்டிதான்.

மீண்டும் ஆபிஸ் போயி அவனின் திருமணத்தை காணும் சக்தி எனக்கு இல்லை. எங்கோ அவன் இருக்கட்டும் நிம்மதியாக!!!

ஆனால் என் மனதுக்குள் எப்போதும் இருப்பான்.

அப்படி யோசிக்கும் போதுதான் என்னுள் இன்னுமொரு விபரீதமான எண்ணம் முளைத்தது!!!!
<t></t>
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




[+] 1 user Likes manigopal's post
Like Reply


Messages In This Thread
மதுமிதா [completed] - by bigman - 01-05-2019, 02:15 PM
RE: மதுமிதா [completed] - by bigman - 01-05-2019, 02:16 PM
RE: மதுமிதா [completed] - by bigman - 01-05-2019, 02:16 PM
RE: மதுமிதா [completed] - by bigman - 01-05-2019, 02:17 PM
RE: மதுமிதா [completed] - by bigman - 01-05-2019, 02:17 PM



Users browsing this thread: 1 Guest(s)