Thread Rating:
  • 1 Vote(s) - 2 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மதுமிதா [completed]
#2
அம்மாவிடம் விஷயத்தை சொல்லும் போது அம்மாவுக்கு விருப்பம் இருக்காது என்று நினைத்துதான் சொன்னேன்
ஆனால் நேர் மாறாக அம்மா என் வாயில் சர்க்கரை கொண்டு வந்து போட்டார். கடவுள்தான் நமக்கு வழி காட்டி இருக்கார் மதிக்குட்டி.

பையன் வீட்டுல சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்னு சொல்லுராங்க. மாப்பிளைக்கு துபாய்ல வேலை கிடைச்சு இருக்காம் .
உன் தங்கை வந்த நேரம்னு அவங்க அம்மாக்கு அவ்ளோ சந்தோஷம். உன்கிட்ட எப்படி பணம் பெரட்ட சொல்லுறதுணு கைய பெசஞ்சுட்டு இருந்தேன்.
பெருமாள்க்கு என் வேண்டுதல் கேட்டுருச்சு.
அம்மா கண் கலங்க என் கையை பிடித்தபடி பேசியவர், என் முக மாறுதலை கண்டதும் பின் வாங்கினார்.

என்ன மதி ஏன் இப்படி பாக்குற? நீதான் கல்யாணம் பண்ண மாட்டேனு அடம் பிடிக்குற!
உன் தங்கை தம்பியாவது சந்தோஷமா இருக்கட்டுமே டா!

என் கண்களில் நீர் கோர்த்தது. மாற்றாந்தாய் என்பதை நிரூபித்து விட்டாள்.

ஒரு வயதாக இருந்த போது தாயை இழந்து தன்னை பார்த்துக்கொள்ள வந்த ஸித்தியைஅம்மாவாக ஏற்றாள்.
இப்போதல்லவா புரிகிறது. இனி புரிந்து என்ன பிரயோஜனம்!

இரவில் உணவருந்தாமல் உறங்கினேன். காலையில் என் தங்கையின் தலையனைக்குள் மாப்பிளையில் ஃபோட்டோ கண்ட போது மனம் வலித்தது.

ஆபீஸ் சென்றதும் எம் டி அறையை தட்டினேன்.

எஸ் கம் இன்

அவன் முகம் பாராது சொன்னேன், உங்களுடன் அமெரிக்கா வர எனக்கு சம்மதம்

தட்ஸ் குட், விசா எல்லாம் ரெண்டு நாளுல ரெடி ஆயிரும். அது வரைக்கும் கொஞ்சம் நீ கத்துக்க வேண்டியதிருக்கு!

ஓகே ஸார்

இந்த ஃபைல்ல இருக்க டீடேல்ஸ் ப்ரிபர் பண்ணிக்கோ. ரெண்டு நாள் லீவ் எடுத்துக்கோ. உனக்கு திங்ஸ் ரெடி பண்ணிக்கோ ஓகே.

ஓகே ஸார்.

குட் நீ போகலாம்.
<t></t>
அன்றைய பணிகள் செய்யும் போது மனம் கனத்தது. மாலையில் வீடு செல்லும் உற்சாகம் குறைந்து இருந்தது.
வேலை முடிந்து பஸ் ஸ்டேன்ட் செல்லும் வழியில் உதயனின் கார் என்னை வழி மறித்தது.

ஏறிக்கோ என்று முன் காரின் முன் கதவை திறந்து விட்டார். ஒன்றும் பேசாமல் ஏறிக்கொண்டேன். நான் இருக்கும் மனநிலையில் வீடு செல்ல இயலாது.

கார் ஒரு பெரிய ஷாப்பிங் மால் முன்பு நின்றது.

ஏன் என்ற கேள்வியோடு பார்த்தேன்.

உன்னிடம் நல்ல உடைகள் இருப்பது போல தெரியவில்லை. என்னுடன் வரும் பி ஏ எனக்கு தகுந்த மாதிரி உடையில் வர வேண்டும்.

சார் என்னிடம் இப்போது காசு இல்லை. உன்னிடம் காசு இல்லை என்று தெரிந்துதானே அழைத்து வந்து இருக்கிறேன் .
நான் மவுனமாக இருந்தேன்.

நான் பார்த்த வரையில் நீ நல்ல உடை உடுத்தியதில்லை. அவமானத்தில் முகம் கன்றி அடி பட்ட மானாக அவர் முகம் பார்த்தேன்.
சாரி சார் நான் என் ஏழ்மையை நினைத்து கலங்குவதில்லை, அது எனக்கு பழகிய ஒன்று!!

இட்ஸ் ஓகே பட் நான் என்ன சொல்லுகிறேன் என்றால் நீ முதலில் எல்லாம் சுடிதார் அணிவாயே ?
அது போல ஒரு முப்பது செட் வாங்க வேண்டும்.

இல்லை சார் அவ்வளவு வேண்டாம்.

சரி உன் அளவு கொடு நானே வாங்கி வருகிறேன். ஐயையோ வேண்டாம் சார் நானே வருகிறேன்.

சுடிதார் பிரிவுக்கு சென்று அவரின் விருப்ப படியே உடைகள் வாங்கினோம், அவர் உள்ளாடை பிரிவை பார்த்த போது வெட்கமும்
அருவருப்பும் ஒரு சேர வந்தது. ஆனால் அவர் விடுவதாக இல்லை. வா என்று அங்கேயும் அழைத்து சென்றார்.
அங்கே விற்பனை பிரிவில் உள்ள பெண்ணிடம் ரகசியமாக என் அளவை சொன்னேன்.

அவர் புரிந்து விலகுவார் என்று நினைத்தால் அவரோ என் உள்ளாடையை எடுத்து அளவை பார்த்தார்.
என் முகம் சிவந்து காலின் கட்டை விரலை நிலத்தில் அழுத்தி பிடித்து நின்று இருந்தேன்.
அவர் கண்கள் என் அளவை பார்த்து வியந்ததை என் கடைக்கண்ணால் கண்டேன். பிறகு முப்பது செட் கொடுங்கள் என்று ஆணை இட்டார்.
நான் எதுவும் பேசவில்லை. விற்பனை பெண் என்னை பொறாமையோடு பார்த்தாள்.

காரில் வரும் பொது உதயன் என்னிடம் அன் பிலீவபில் என்று சொன்ன பொது
அவர் எதை சொல்கிறார் என்று தெளிவாக புரிந்தது என் முகம் சிவந்ததை என்னால் மறைக்க முடியவில்லை .

ஸார் ...

சொல்லு மதுமிதா நான் இந்த உடைகள் இப்போது என் வீட்டுக்கு கொண்டு செல்ல முடியாது

ஒய்

அம்மா திட்டுவாங்க..

ரியலி உன்னை ஒரு மாசம் அனுப்பும் பொது அவங்க திட்ட மாட்டாங்களா?

என் கண்ணில் கண்ணில் கண்ணீர் தழும்பி கன்னத்தில் வழிந்தது...

இட்ஸ் ஓகே கூல் கூல் இப்போது உதயனின் கைகள் என் தோள் தொட்டு என்னை ஆதரவாய் தடவியது.
<t></t>
நிமிடத்தில் சுதாரிது அவர் கையை மெல்ல தட்டி விட்டேன்

அவரும் அதற்க்கு மேல் என்னை கம்பல் செய்யவில்லை.

வீட்டுக்கு செல்லும் வழியில் உள்ள கோவிலின் அருகில் இறங்கி கொண்டேன்.
ஏன் மதுமிதா உன் வீட்டுக்கு கூப்பிட மாட்டாயா. இல்ல சார் அம்மாக்கு நம்ம ரெண்டு பேர் மட்டும் போறது தெரியாது,
ஆபிஸ்ல இன்னும் சில பேர் வராங்கன்னு சொல்லி இருக்கேன்.

இட்ஸ் ஓகே என்று தொலை குலுக்கி வண்டியை கிளப்பி கொண்டு சென்றார்.

பிள்ளையாரிடம் சிறிது நேரம் அமர்ந்து பிரார்த்தனை செய்தேன். என் அருகில் யாரோ நிற்பதை உணர்ந்து கண்மிழித்தேன்.
தங்கையின் வருங்கால மாமியார் நின்று என்னை பார்த்து சிநேகமாக புன்னகைத்தார்.

வாங்க அம்மா எப்படி இருக்கீங்க?

நல்லா இருக்கேன் கண்ணு நீ அடிக்கடி இந்த கோவிலுக்கு வந்துருக்க நான் உன்னை பார்த்து இருக்கேன்.

அப்படியா நான் உங்களை பார்த்ததில்லை.

எங்க நீ தலையை நிமிர்தினால்தானே தெரியும்!

சொல்லுங்க அம்மா ஏதாவது விசேஷமா.

பெரிய விசேஷம் என் ஒரே பையனோட கல்யாணம்தான்..ஹ ஹ ஹா.

அந்த அம்மாவின் தெத்துபல் சிரிப்பு எனக்கு காவியாவை ஞாபக படுத்தியது.

நீங்க சிரிக்கும் பொது ரொம்ப அழகா இருக்கீங்க அம்மா.

எல்லோரையும் அம்மான்னு கூப்பிடலாமா? நான் உனக்கு அத்தையாக்கும்!!

சாரி ஆன்ட்டி. ஹ்ம்ம் ஆன்ட்டி நு சொல்லாம நீ அத்தைன்னு சொல்லி இருக்க வேண்டியது எல்லாம் மாறி போச்சு..

என்ன ஆன்ட்டி ரொம்ப சலிப்பா பேசுறீங்க.

மனசுல வெச்சுக்க முடியலம்மா நான் உன் அம்மா கிட்ட உன்னைத்தான் பெண் கேட்டேன்.
அவங்கதான் உனக்கு திருமணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டாங்க.

ஆமா ஆன்ட்டி நான்தான் வேண்டாம்னு சொன்னேன்.

அப்புறம் ஏண்டா பிள்ளையார் கிட்ட வேண்டிகிட்டு இருக்க.. உன் முகம் கலக்கமா இருந்துச்சு அதான் பேசிட்டு போலாம்னு நினச்சேன்.

அம்மா எனக்கு என் குடும்பம் நிமிரனும், என் தம்பி சம்பாதிச்சு எனக்கு கல்யாணம் கட்டி வெப்பான் போதுமா என்றேன் முகம் மலர்ந்த சிரிப்புடன்.

நல்லா இரு கண்ணு என்று என்னிடம் பேசி விட்டு நகர்ந்தார்.

நானும் வீடு நோக்கி நடந்தேன். மனதில் சஞ்சலம் குறைந்தது.


வீட்டுக்குள் நுழைந்ததும் அம்மா காப்பியோடு வந்தாள்


என்னாச்சு மதிக்குட்டி அமெரிக்கா ட்ரிப்க்கு ஓகே சொல்லிட்டைல்ல

அம்மாவை தீர்க்கமாக பார்த்தேன்

ப்ளீஸ் டா அப்படி பாக்காத

அம்மா ப்ளிஸ் இனி அந்த ட்ரிப் பத்தி நீ எதுவும் தெரிஞ்சுக்க வேண்டாம்.
நான் நாளைக்கு கிராமத்துக்கு போயி பாட்டியை பார்த்துட்டு அமெரிக்கா கிளம்பலாம்னு இருக்கேன் என்றேன் உணர்ச்சியற்ற குரலில்.

சரிடியம்மா உன் இஷ்ட்டம் போல செய் , எல்லாம் நம்ம குடும்பத்துகாகதான்னு மட்டும் ஞாபகம் வெச்சுக்கோ

வேண்டா வெறுப்பாக காப்பி அருந்தி விட்டு சிறிது நேரம் கட்டிலில் கண் அயர்ந்தேன்.

சிறிது நேர உறக்கத்து பின் உதயன் என் சேலை கொசுவத்தை அவிழ்ப்பது போல கனவு வந்தது

ஹேய் சீய் என்று தட்டி விட்டு எழுந்து பேந்த பேந்த விழித்தேன்.


ச்சே என்ன கனவு இது. முதல்ல இங்க இருந்து கிளம்பனும்.

கிளம்பும் பொது அம்மா என்னிடம்"ஏன் மதிக்குட்டி ஒரு வாரம் டைம் இருக்கே " இப்பவே ஏன் கிளம்புற

இங்க பாருமா ஒரு மாசம் நான் வெளியூர் போயிருக்கேன்னு வெளில சொல்லாத.
வீட்டு பொண்ணு வெளிநாடு போறது உங்களுக்கு வேணுமின்னா சரியாக தெரியலாம் ஆனா
நாளைக்கு தங்கச்சி வீட்டுல தப்பா நினச்சு கல்யாணம் நடக்க விடாம பண்ணினா என்ன பண்ணுறது?.

உனக்கு பாசம் இருக்குன்னு எனக்கு தெரியாதா மதிக்குட்டி.

முன்பெல்லாம் இனித்த மதிக்குட்டி இப்போது அனாயசமாக காதில் விழுவது போல இருந்தது.

ஆமா உன் துணி எல்லாம் பேக் பண்ணலையா?

இல்லம்மா அதெல்லாம் ஆபிஸ்ல ஸ்போன்சர் பண்ணுவாங்க.

நான் பாட்டியை பார்த்துட்டு மறுபடியும் ஆபிஸ் போயிருவேன். நீ உடம்பை பார்த்துக்கோ.
தங்கச்சியை நல்லா தூங்கி எழுந்து, சாப்பிட்டு உடம்பை தேத்த சொல்லுங்க.
நீங்க ஏர்போர்ட் வரவேண்டாம். அடுத்த மாசம் நான் வந்துருவேன்

சரிடா செல்லம் என் மேல கோபம் வெச்சுக்காத டா.

உங்க மேல எனக்கு கோபம் இல்லமா சின்ன வருத்தம் தான். அதுவும் இந்த ஒரு மாச பிரிவில் சரி ஆயிரும் .

ஓகே மா பை. தங்கசிகிட்ட சொல்லிரு.

நைட்டே நான் பாட்டி ஊருக்கு கிளம்பியதில் அம்மாவுக்கு வருத்தம் என்று தெரியும் ஆனாலும் இப்போது அதை பற்றி கவலை பட நேரமில்லை.
இரவு எட்டு மணி பேருந்தில் ஏறி பாட்டி வீட்டுக்கு பயணம் ஆனேன்.
<t></t>
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




[+] 1 user Likes manigopal's post
Like Reply


Messages In This Thread
மதுமிதா [completed] - by bigman - 01-05-2019, 02:15 PM
RE: மதுமிதா [completed] - by bigman - 01-05-2019, 02:16 PM
RE: மதுமிதா [completed] - by bigman - 01-05-2019, 02:16 PM
RE: மதுமிதா [completed] - by bigman - 01-05-2019, 02:17 PM
RE: மதுமிதா [completed] - by bigman - 01-05-2019, 02:17 PM



Users browsing this thread: 1 Guest(s)