Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உள்ளத்தின் கதவுகள் [completed]
#24
மேலும் இரண்டு நாட்கள் கழித்து. .. காலை ஐந்தரை மணிக்கு எழுந்த நந்தா… வாக்கிங் போய்விட்டு வந்து. . தனது அறையில் தண்டால் எடுத்துக் கொண்டிருந்த போது..
”அலோவ் ” எனக் குரல் கேட்டு நிமிர்ந்தான்.

ஜன்னல் வழியாக.. அடுத்த ஜன்னலில் பூரணி தெரிந்தாள். தண்டால் எடுப்பதை நிறுத்தினான்.
”குட் மார்னிங்..” என்றான்.
” மார்னிங்..!”சொன்னவள் ”எக்ஸர்சைசா..?” எனக்கேட்டாள்.
”ம்..ம்..!”
”நல்லா தண்டால் எடுப்பிங்க போல…?” குறும்புடன் பார்த்தாள்.
” இப்பதான் பழகிட்டிருக்கேன்.”
” குட்.. ! பழகிக்கோங்க.. ஆப்டர் மேரேஜ்… ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்..”
” ஹேய்… ”என்றான் ”வாட் டூ யூ மீன்..?”
கலகலவெனச் சிரித்தாள். பிறகு..
”ஜஸ்ட் எ.. ஃபன்..”என்றாள்.
”ஒரு நிமிசம் நான் பயந்தே போயிட்டேன்..”
”ஏன். .?”
” இல்ல. .. நீங்க. .. இப்படி. . திடுதிப்புனு சொன்னதும் நா.. ஷாக் வாங்கிட்டேன்..”
” ஆப்டர் மேரேஜ்.. வேற என்னதான் நடக்கும்..?!” எனக்கேட்டுக் கண்ணடித்துச் சிரித்தாள்.

தாழ்வான குரலில் கேட்டான்.
”என்ன நடக்கும். .?”
” அப்கோர்ஸ்…” என்றாள்.
” என்னது..?”
” பலே…” என்றாள். அவனது விடாப்பிடியான அப்பாவித் தனத்துக்காக.
உடனே ”மே ஐ நோ.. நந்தா. .?”
”வாட்…?”
” உங்களுக்கு கேர்ள் பிரெண்டு இருக்காளா..?”
சிறிது யோசித்து… ”நீங்க கூட என்னோட கேர்ள் பிரெண்டுதான். .” எனச்சிரித்தான்.
”ஹை…! இட்ஸ் ரைட்..! பட்..நா கேட்டது… லவ்வர்…?”
” இருக்கா.. பட்… இல்லே..”
” அப்படின்னா…?”
” ஒருதலை ராகம்…”
” ஆஹா. .. யாரது…?”
” பூரணி. .!”
” பூரணி. ..?”
” அம்மா பூரணி இல்ல. . அன்னபூரணி. ..!”
” ஹேய்… ! சீரியஸா சொல்லுங்கப்பா..?”
” சீரியஸ்தான் பூரணி. ..! உங்கள பாத்த நிமிசத்துலருந்து. .. நா காதல்ல… விழுந்துட்டேன்.. தெரியுமா..?”
”ஹையோ… பட்… நா வேகண்ட் இல்லையே.. ஒன்னுக்கு ரெண்டு பேர லவ் பண்ணிட்டிருக்கேன்..!”
” ரெண்டு பேரா…?”
” டஸிண்ட் மேட்டர் பா..! நீங்க மூணாவது ஆளாகூட ஜாயின்ட் பண்ணிக்கலாம்..! எப்படி வசதி?”
” கஷ்டமாச்சே…?”
” இட்ஸ் ஓகே. .. பிரெண்ட்ஸா இருப்போம்..! ம்..?”
” அப்ப லவ் பண்ண முடியாதா?”
” எனக்கு. .. நோ அப்ஜெக்சன் பா..!”
” கொஞ்சம் யோசிக்கனும் போலிருக்கே..”
” கொஞ்சமென்ன… நெறையவே யோசிங்க..! நா இப்ப கெளம்பறேன்..! அப்பறம் பாக்கலாம்.. ஓகே. .? பை..”

எனக் கையசைத்தவள்.. அவனது பதிலைக் கூட எதிர்பாராமல். .. அங்கிருந்து போய்விட்டாள். அவளைப் பற்றின சிந்தனைகளுடனே.. தனது உடற்பயிற்சிகளை முடித்துக்கொண்டு குளிக்கப் போனான் நந்தா. !!
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: உள்ளத்தின் கதவுகள் [completed] - by M.Gopal - 01-05-2019, 01:43 PM



Users browsing this thread: 1 Guest(s)