Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உள்ளத்தின் கதவுகள் [completed]
#13
அந்தப் பெண் உடனே மிருதுளாவைப் பார்த்து.. சிரித்தபடி..
”ஹலோ ஆண்ட்டி. . குட் ஈவினிங்..” என்றாள்.
” குட் ஈவினிங்..! என்ன பண்ணிட்டிருக்கே நீ..?” என மிருதுளா ஜன்னல் ஓரமாகப் போய் நின்றாள்.
” உங்க நந்தா வோட டாக் பண்ணிட்டிருக்கேன். நந்தா உங்க கஸினா..?”
” ஆமா. .” என்றவள் உடனே நந்தாவிடம் திரும்பிச் சொன்னாள் ” நந்தா இந்த பொண்ணு இருக்கே… பூரணி. சரியான வாயாடி..! இது வாயாடி மட்டுமில்ல.. வாலும் கூட..! அவகிட்ட கவனமா இரு இல்லேன்னா உன்ன ஒரு வழி பண்ணிருவா..”
” ஹலோ. .. ஹலோ. .. ஆண்ட்டி.! அனியாயமா என்னை கெட்டவளா மாத்திடாதிங்க..! ” என்றுவிட்டு உடனே அவனிடம் சொன்னாள் ”நந்தா… ஆண்ட்டி சொல்றத நம்பாதிங்க..! நான் ரொம்ப. . ரொம்ப நல்ல பொண்ணு..! யாரோட வம்பு தும்புக்கும் போக மாட்டேன்.. நான் உண்டு என் வேலை உண்டுன்னு.. இருக்கற.. ‘ காம் ‘ டைப் நானு”

நந்தா சிரித்து..
”அதாவது என்னை மாதிரி..” என்றான்.
” அப்கோர்ஸ்..” என்றவள் உடனே ”யூ.. மீன்..?”
”நானும் உங்கள மாதிரிதான் காம் டைப்..”
” என்ன ஒற்றுமை பாத்திங்களா நமக்குள்ள..? இதான் நந்தா கடவுள் செயல்ன்றது..! ஒரே மாதிரியான நம்ம ரெண்டு பேரை மீட் பண்ண வெச்சு. ..”
” அம்மா பூரணி. ..” ஆண்ட்டி இடை புகுந்தாள். ”போதும்மா.. நீ ரொம்ப தங்கமான பொண்ணுன்னு.. இந்த ஊருக்கே… இல்லல்ல.. நாட்டுக்கே தெரியுமே..! அத நீ வேற தனியா சொல்லனுமா என்ன. .?”
” ஹ்ஹா. .! தேங்க்ஸ் ஆண்ட்டி. .பட் ஒன் திங்க்.. என் பேரு அம்மா பூரணி இல்ல. . அன்ன பூரணி..!! உங்க நந்தா என்னடான்னா.. தாரிணின்றாரு..! நீங்க அம்மா பூரணின்றீங்க…! என் பேரு எனக்கே மறந்துரும் போலிருக்கு..” என்றாள்.
” அதெப்படி.. உன்னால மட்டும் முடியுது. ..?” எனக் கேட்டாள் மிருதுளா.
” என்ன ஆண்ட்டி. .?”
” மூச்சு விடாம படபடனு பேசறியே…! வாய் வலிக்காது?”

சிரித்தாள். ஆனாலும் விட்டுத்தராமல்
”அதெல்லாம் ஒரு கலை ஆண்ட்டி. .” என்றாள்.
நந்தா. ” ஆனா. . உங்க பேச்சும் உங்கள மாதிரியே.. அழகா இருக்கு..” என்றான்.

மிருதுளா ”இந்தப் பொண்ணுகிட்ட இப்படி பேசாத நந்தா. . மாட்டிப்ப..” என்றாள்.

பூரணியைப் பார்த்தான். அவள் கன்னங்கள் குழையச் சிரித்தாள்.
நந்தா ”என்ன தப்பு. .? உண்மையத்தானே சொன்னேன்.”

அவனை நம்பிக்கையற்ற விதமாகப் பார்த்தாள் மிருதுளா. உதட்டில் மெல்லிய புன்னகையுடன் சொன்னாள்.
” நீ பேசல.. உன் வயசு பேசுது..”
” ஹா..! என்ன ஆண்ட்டி நீங்க.? பூரணியோட குரல் இனிமையா இருக்கா இல்லையா..?”
நகைத்தாள் மிருதுளா.

நந்தா ” நெஜமாவே ஸ்வீட் வாய்ஸ் ஆண்ட்டி அது.! அவங்க மட்டும் பாடினாங்கன்னா..” என்றவன் பூரணியைப் பார்த்து ”பாட்டு கத்துக்கறீங்களா.. பூரணி. .?” எனக் கேட்டான்.
” நானா.. இல்லையே..! நீங்க கத்து தர்றீங்களா..? அப்ப நா ரெடி..” என்றாள் குரலை சரி பண்ணிக்கொண்டு. . ஹம் பண்ண. . மிருதுளா அவசரமாக
” சரி.. சரி. போதும் விடு..” என்றாள்.
”அதெப்படி..? பட்… ஆண்ட்டி ஒரு விசயம் கவனிச்சீங்களா?”
” இல்லம்மா.. நீயே சொல்லிறேன். ”
”நந்தா எனக்கு பாடக்கத்துத் தரப்போறாரு..! அப்படித்தான நந்தா. .?”
” நான் கத்துத்தரப்போறதில்ல. ஆனா நீங்க விரும்பினா…”
” நோ… நோ… நீங்க கத்து தரீங்க எனக்கு. .! நா உங்கள்ட்டதான் பாடக்கத்துக்கப் போறேன். பீ சுசீலா.. ஜானகி.. சித்ரா.. இவங்க வரிசைல..”
”நிச்சயமா நீங்க வருவீங்க..ட்ரை பண்ணா..! அவ்ளோ இனிமையானது உங்க குரல். ”
”தேங்க்ஸ்..! பட் நந்தா. . உங்கள எனக்கு புடிச்சிருக்கு..” என்றாள்.

அவன் கொஞ்சம் வழிவதுபோலச் சிரித்தான்.
தொடர்ந்து.. " கொஞ்ச நஞ்சமில்ல.. எவ்ளோ புடிச்சிருக்குனு சொன்னா நம்ப மாட்டிங்க..” என்றுவிட்டு. . குழந்தைபோல.. அவள் கைகளை ஆகலமாக விரித்துக்காட்ட.. குபீரெனச் சிரித்தான் நந்தா.
”ச்சோ.. ஸ்வீட். .!!” மனம்விட்டுச் சிரித்தான்.

அந்தப் பெண்ணின் பால் கனிந்த நட்பு.. காதலாகக்கூடத் தோன்றியது. இதுபோன்ற ஒரு கலகலப்பான பெண்ணை எந்தப்பையன்தான் விரும்ப மாட்டான்.? இவளது காதலன் அதிர்ஷ்டக்காரனாகத்தான் இருக்க வேண்டும். !

” பூரணி.. யூ ஆர் வெரி க்யூட்..! ரொம்ப ஜாலியா.. கலகலப்பா பேசறீங்க..! ” எனப் பாராட்டினான்.
அவளது முகம் பிரகாசமானது.
”அப்ப என்னைப் புடிச்சிருக்கு இல்லையா..?”
”புடிச்சிருக்காவா..? ரொம்ப.. ரொம்ப புடிச்சிருக்கு. .!”

அருகில் மிருதுளா இல்லாவிட்டால் இன்னும் என்னெல்லாமோ சொல்லியிருப்பான். அப்போது அவள் கை பேசி சிணுங்கியது.
”எக்ஸ்க்யூஸ் மீ..” சொல்லி.. செல்லில் பேசினாள்.

மிருதுளாவைப் பார்த்தான் நந்தா.
மிருதுளா.. ” சரியான வாயாடி பொண்ணு..! எல்லார் கூடவும் இப்படித்தான்.. கலகலன்னு பேசுவா.. சுலபமா எல்லார் கூடயும் பிரெண்டாகிருவா..” என்றாள்.

கைபேசியில் உரையாடின பூரணி. . இவர்களைப் பார்த்து..
” ஓகே பிரெண்ட் நந்தா. ! மறுபடி இன்னொரு நாள் பேசலாம்.! எனக்கு அழைப்பு வந்தாச்சு.. பை.. பை..! ஆண்ட்டி. பை..” எனக் கையசைத்து.. டாடா காட்டிவிட்டு. . அவசரமாக அங்கிருந்து காணாமல் போனாள்..!!!
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: உள்ளத்தின் கதவுகள் [completed] - by M.Gopal - 01-05-2019, 01:37 PM



Users browsing this thread: