Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உள்ளத்தின் கதவுகள் [completed]
#9
"என்ன ஆண்ட்டி இது..? ரெண்டு பொண்ணுகளப் பெத்துருக்கீங்க.. அவங்க ரெண்டு பேரும் சேந்து.. நாலு பேரப் புள்ளைங்களப் பெத்துக் குடுத்திருக்காங்க.. ! நீங்க போயி.. அனாதை.. அது இதுன்னுட்டு..?”
” இல்லப்பா.. அவங்கள்ளாம் கல்யாணமாகி.. வாழ்க்கைல.. செட்டிலாகிட்டாங்க..! ஏதோ அம்மாங்கற முறைல என்னைப் பாக்க வருவாங்களே தவிற… என் பிரச்சினையை அவங்களால தீர்க்க முடியாது. ! அவங்கப்பா விசயத்துல… அவங்களால எதும் பண்ண முடியல.! தவிற.. அவங்கவங்க பிரச்சினையே அவங்களுக்குப் பெருசில்லையா..? இதுல.. அவங்கள குத்தம் சொல்ல என்ன இருக்கு..?”

பெருமூச்சு விட்டான் நந்தா.
”சரி விடுங்க ஆண்ட்டி. .! நான் இருக்கேன் உங்களுக்கு. .! எத நெனச்சும் பீல் பண்ணாதிங்க.. ! அங்கிள மாத்த வேண்டியது என் பொருப்பு..!”என்றான்.
”வேஸ்ட் நந்தா. .! அவரால.. அவ இல்லாம வாழ முடியாதுங்கற நெலமைலதான் இருக்கார் இப்ப. ! இதுபத்தி.. நீ ஏதாவது பேசி.. வீனா மனச கஷ்டப் படுத்திக்காத..”

அவளுடைய கணவனைப் பற்றி. . முன்பே அவனுக்கு ஓரளவு தெரியும் என்றாலும்.. இப்போது அவள் சொன்னதைக் கேட்க சங்கடமாகவே இருந்தது. ஒரு பெருமூச்செறிந்து விட்டு அவனைப் பார்த்துச் சொன்னாள்.

” ஸாரி நந்தா நீ வந்த மொத நாளே.. என்னோட கஷ்டங்கள உன்கிட்ட சொல்லி.. உன்ன சங்கடத்துக்கு ஆளாக்கிட்டேன்.”
” சே.. சே.. அதெல்லாம் இல்ல ஆண்ட்டி. .! நெஜமா.. நீங்க மனசுவிட்டு பேசறது.. எனக்கு சந்தோசமா இருக்கு..!” என்றான்.
” யாரை நம்பி நான் வாழ்க்கையை ஆரம்பிச்சேனோ.. அந்தாளே என்னைத் தூக்கி குப்பைல வீசிட்டான் நந்தா. அதான் என்னால ஜீரனிக்க முடியல..” எனக் குரலடைக்கச் சொன்னாள்.

அதன் பிறகும். . அவனோடு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுத்தான் கீழே போனாள் மிருதுளா.

காலை.! நந்தா கண்விழித்த போது.. மணி ஆறரை ஆகியிருந்தது. அவன் கீழே இறங்கிப் போனபோது.. மிருதுளா.. சமைத்துக் கொண்டிருந்தாள்.
”குட் மார்னிங் ஆண்ட்டி. .” என்றான்.
” குட்மார்னிங் ” சொல்லிச் சிரித்தாள்.
காபியை அடுப்பில் வைத்துச் சூடாக்கினாள்.
” இதான் நீ… வழக்கமா எந்திரிக்கற நேரமா..?” எனக் கேட்டாள்.
புன்னகைத்தான்.
” சில நேரங்கள்ள… எட்டு மணிகூட ஆகும் ”
” இன்னிக்கு மொத நாள் அதான் விட்டுட்டேன். ஆனா நாளலருந்து நீ சரியா ஆறுமணிக்கெல்லாம் எந்திரிச்சாகனும்..”
” ஓகே ஆண்ட்டி. .” என்றான். ”பட் ஆறுமணிக்கு எந்திரிச்சு என்ன பண்றது ..?”
”எவ்வளவோ பண்ணலாம்.! ஜாகிங் போகலாம். வீட்லயேகூட எக்சர்சைஸ் பண்ணலாம்.. அப்றம் யோகா கூடப் பண்ணலாம்..”
” கரெக்ட் ஆண்ட்டி. .! ஆனா இதெல்லாம் எனக்கு எதுமே பழக்கமேயில்லயே..”
” பழகிக்கோ.. ! ஆரோக்ய வாழ்க்கை வாழக்கத்துக்கோ..! ஒண்ணும் தப்பில்ல..!”
” ம்…சரி.” என்றுவிட்டு அவளைக் கேட்டான். ”உங்க ஆரோக்யத்துக்குக்கூட அதான் காரணமோ..?”

அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
” ஆமாப்பா..”
” இப்பயும் கன்டினியூ பண்றீங்களா..?”
” ரெகுலரா பண்றதில்ல..! நேரம் கெடைக்கறப்ப கண்டிப்பா பண்ணிருவேன்..! அதிகமா… யோகா பண்ணுவேன்..” எனப் புன்னகையுடன் சொல்லிவிட்டு. சூடாகிவிட்ட காபியை. .. டம்ளரில் ஊற்றி…அவனுக்கு ஆற்றிக் கொடுத்தாள்..!
” நாளைலருந்து உன்கிட்ட ஒரு டிசிப்ளினை எதிர்பாக்கறேன்..”

பரிதாபமாகச் சிரித்தான் நந்தா. காபிக்குப் பின் தன் அறைக்கு போய்.. காலைக்கடன்களை முடித்துவிட்டு. . குளித்துப் புத்துணர்ச்சியோடு கிளம்பிக் கீழே போனான் நந்தா.
காலைச் சிற்றுண்டி தயாராக இருந்தது.! தினசரியை எடுத்துக்கொண்டு. . அவன்.. உணவு மேஜைமுன்உட்கார்ந்தான்.

”சாப்பிடலாமா..?” எனக் கேட்டபடி அறைக்குள்ளிருந்து வெளியே வந்த மிருதுளா.. மிக நேர்த்தியாக ஆடை உடுத்தி.. அற்புதமாகத் தோன்றினாள்.
” ம்.. ம்..” தலையாட்டினான்.

அவள் அருகில் வந்தபோது… அவளிடமிருந்து பரவின நறுமணம் அவனை… உற்சாகமடையச் செய்தது. ஆண்ட்டி உணவைப் பறிமாற.. அவளையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘ இந்த வயதிலும் எத்தனை அழகு..? ‘ என வியக்காமல் இருக்க முடியவில்லை அவனால். ‘இப்போதே இத்தனை அழகென்றால்… இளமையில் எப்படி ஜொலித்திருப்பாள்.?’

” ம்.. சாப்பிடு..” அவள் சொல்ல..
” அங்கிள் இல்லையா.. ஆண்ட்டி. .?” எனக் கேட்டான்.
” போயாச்சு..”
” எப்ப போனார்…?”
” நீ… குளிக்கப் போனப்பறம்..”
” டிபன் சாப்பிடலை..?”
” இல்லை. .”

அதற்கு மேல் அவரைப் பற்றிக் கேள்வி கேட்க அவன் விரும்பவில்லை. அது அவளது மனநிலையைக் கெடுத்துவிடக் கூடும்..! எக்காரணத்தாலும் அதைச் செய்து விடக்கூடாது என நினைத்தான் நந்தா. பறிமாறியபின்… மிருதுளாவும் அவன் அருகில் உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினாள்.!!!
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: உள்ளத்தின் கதவுகள் [completed] - by M.Gopal - 01-05-2019, 01:36 PM



Users browsing this thread: 1 Guest(s)