Romance நீயே என் இதயமடி
#4
இருவரும் நேராக அவர்களது ஆஸ்தான டீ கடைக்கு வந்து இறங்கி அவர்களது ஃபேவரட் கிங்ஸ் சிகரெட்டை வாங்கி புகைக்க ஆரம்பித்தனர்....

பாாலா போனில் யாருடனோ பேசியபடி சிகரெட்டை  புகைக்க கார்த்திக் தனது பைக்கின் மேல் ஸ்டைலாக சாய்ந்து கொண்டு சாலையை நோக்கியபடி எதையோ எதிர்பார்த்து காத்திருந்தான் ..

கார்த்திக்ன் காத்திருப்புக்கு பலனாகவே அவனது தேவதை பிரியா அவனுக்கு காட்சியளித்தாள்

அவளை பார்த்த மாத்திரத்தில்   உள் இழுத்த சிகரெட் புகையை வெளிவிட மறந்து ....
நம்மள மயக்குரதுக்குனு இன்னைக்கு எப்படி கிளம்பி வந்துருக்கா பாரு என நினைத்து  கொண்டே அவளை வெரித்தான்.....

  அலை அலையாக கேசம்..!! சலவை செய்த நிலவினை போன்றதொரு ஒளிமுகம்..!! உருளும் திராட்சைகளாய் இரு கருவிழிகள்..!! உருண்டையான கூர்மையான நாசி..!! தேன் சொட்டும் ஆரஞ்சு சுளைகளாய் பிளந்து கொண்ட இதழ்கள்..!! சந்தனத்தில் பாலை குழைத்து பூசிவிட்ட மாதிரியான மேனி வண்ணம்..!! தேர்ந்த சிற்பி ஒருவன் செதுக்கிய மாதிரியான தேகக்கட்டு..!! உடைய பிரியா மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்த்து கொண்டு சிகப்பு நிற காட்டன் சுடிதாரில் எழிலாய் நடந்து வந்தாள்....

(பிரியா 23 வயதுக்கு ஏற்ற பக்குவம்   கொண்டவள்   பார்ப்போரை   ஈர்க்கும்  பேரழகி.....

பிரியா - தாங்க நம்ம ஹீரோயின். 
இப்ப M com கடைசி வருஷம் படிக்கிறா.. 

பிரியாவோட அம்மா சத்யா அப்பா தயாநிதி இருவரும்.  காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்

இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் ஒரு மகள் ... 
மகன் 28 வயது ஆகும் குணா ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை செய்கிறான் 
திருமணமாகி இரண்டு வருஷம் ஆகுது.. 
குணாவின் மனைவியின் பெயர் புவணேஷ்வரி .நல்ல குணமுடையவள் . புவனாவும் பிரியாவும் நல்ல தோழிகளாக பழகுபவர்கள்... 
பிரியாவுக்கு ஒன்றென்றால் வீட்டில் உள்ள  அனைவரும் துடித்து விடுவார்கள்
இநத வீட்டின்  இளவரசி இவள்தான்.      இதுதான் பிரியாவின் குடும்பம்....)
 

அதுவரை மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்த பிரியா கார்த்திக்.  நிற்கும் டீ -கடைக்கு அருகில் வந்தவுடன் வேகமாக நடையை போட்டு தனது கல்லூரி பேருந்தை பிடிக்க ஒடிச்சென்று   பேருந்தில் 
ஏறி தனது தோழி சந்தியாவின் அருகில் அமர்ந்து கொண்டால்...

ஏண்டி மெதுவா வர வேண்டியதுதான பஸ்-தான் நிக்குதுல என   தன் அருகே  மூச்சு வாங்கியபடி   அமர்ந்து இருந்த  பிரியாவிடம் கேட்டடாள் சந்தியா...

அதற்கு  பதில்  சொல்லாமல் 
எரும மாடு எப்படி பாக்குறான் பாரு திருட்டுபய என்று முனு முனுத்துக் கொண்டிருந்தால் பிரியா... 

ஏய் என்னாடி  நான்  என்ன கேக்குறேன்
நீ  என்னடானா  ஏதோ.  புலம்பபுற என சந்தியா கேட்க

புலம்பலடி ...  எவ்வளவு தைரியமா என்.முன்னாலயே சிகரெட் புடுச்சுகிட்டு
எப்படி பாக்குறான்  பாரு  பொருக்கி பய என திட்ட.....

ஏய் யாரடி திட்ற என சந்தியா  வினவ ...?

நான்  வேற  யார திட்ட போறேன் கார்த்திக்தான் .... என    இவள் சொல்லி விட்டு.  நீயே சொல்லுடி என    ஆரம்பிக்க.....

இருவருமாய் பேசியபடி  தங்கள் பயணத்தை தொடங்கினர்.....

பிரியா பேருந்து ஏறியவுடன் கார்த்திக் அருகில் வந்த பாலா...

என்னா மச்சி பிரியா பாக்காம போறா...என கேட்க 

முடிந்து  போன  சிகரெட்டை மிதித்து  அனைத்தபடி யார்டா சொன்னா அவ என்ன பாக்காம போறானு ... என்று முகத்தில் ஒரு புன்முறுவலுன் கேட்டுவிட்டு... அதுலாம் அவ என்ன பாத்துட்டுதான் போறா ... 
நீ வண்டில ஏறு முதல என்று சொல்லிக்கொண்டே வண்டியில் ஏறியமர்ந்தான்... 

இருவரும் தங்களது கம்பெனிக்கு வந்து அவர் அவர் கேபினுக்கு சென்றனர்.. 
கார்த்திக் அன்றய வேலையை பார்த்துவிட்டு .. தனது மொபைலை எடுத்து தனது காதலியின் புகைப்படங்களை பார்க்க ஆரம்பித்தான்.. 
அதில் பச்சை பட்டு   புடவையை சுற்றி கொண்டு மயக்குகிற மாதிரி ஒரு  பார்வையை  வீசியவாறு எழிலாக நிற்கும்  தனது   மனம் கவர்ந்த தேவதையை முகத்தில் ஒரு பிரகாச சிரிப்புடன்  காதலாய்  பார்த்து கொண்டே பழைய ஞாபகங்களில் மூழ்கினான்...
Like Reply


Messages In This Thread
RE: நீயே என் இதயமடி - by Arunkumar - 01-05-2019, 11:12 AM



Users browsing this thread: 1 Guest(s)