நினைத்தாலே இனிக்கும்(முடிவுற்றது )
#70
அத்தியாயம்:17


இரண்டு வாரம் அவள் என்னிடம் எதுவும் பேசாமல் இருப்பது முள் மீது படுத்திருப்பது போல் இருந்தது.சரியாக சாப்பிட முடியவில்லை .தொண்டையில் மாட்டிய முள் மாதிரி இருந்தது.நரகமாக இருந்தது.
[size]

அவளுடன் பேசாத தருணங்கள் மிக அவஸ்தை பட்டேன்.அவள் என்னை பார்த்தும் பார்க்காமல் செல்லுவது,என் மீது எனக்கே வெறுப்பை ஏற்படுத்தியது.இதை விட என் வாழ்க்கையில் கொடுமையான நிமிடங்கள் இனி வராது என நினைத்தேன்.ஒருநாள் பேருந்தில் அவள் தனியாக அமர்ந்து ஜன்னலையே வெறித்து பார்த்தபடி ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தாள்.
நான் அவள் சீட்டின் பின்புறம் அமர்ந்து அவளையே பார்த்து கொண்டு இருந்தேன். அவள் கண்கள் வானத்தில் எதையோ தவறவிட்டது போல் தேடி கொண்டிருந்தன,சூரியனின் மெல்லிய வெளிச்சம் அவள் முகத்தில் பட்டு தனது வெளிச்சத்தை பிரதிபலித்து கொண்டிருந்து.காற்று அவள் கூந்தலை வருடீ தனது இச்சைகளை தீர்த்து கொண்டிருந்தன.வெள்ளை கலரில் சிகப்பு பார்டர் போட்ட அவள் சேலை அவள் அழகை மேலும் மெருகூட்டி கொண்டுருந்தது.நான் மெல்ல பின் சீட்டிலிருந்து இறங்கிஅவள் அருகில் சென்று அமர்ந்தேன்.அவள் அழகிய முகத்தை தாங்கி கொண்டிருக்கும் அவள் வெண் சங்கு கழுத்து,அவள் இளமை கொஞ்சும் தோள் அதை மறைக்கும் சிகப்பு கலர் ஜாக்கெட் அவளை சுற்றி மட்டும் எல்லாமே அழகாக இருந்தது நானும் கூட.

அவள் என்ன நினைத்தாலோ திடீரென திரும்பி பார்த்து பின் பார்க்காதது போல் முகத்தை திருப்பி கொண்டாள்.
நான் மெல்ல அவளை கூப்பிட்டேன்"ஏய் ...பூம்பொழில் திரும்பி பாரூடீ"என்றேன்.

அமைதி....

நான் மேலும் அவளை நெருங்கி அவளை முகத்தை திருப்பினேன்.

"ஏய்..!பொழில்,என் கூட பேசமாட்டீயா"என்று நான் கூறியதும் அவள் என் கழுத்தை கட்டிகொண்டாள்,
அழுதாள்
.
சிறிது நேரம் அமைதியாக இருந்தோம்"இல்லடா...இல்ல...உன்கிட்ட பேசாம என்னால மட்டும் எப்படி சந்தோசமாக இருக்க முடியும்"என்றாள்.

அப்படியே அவள் முகத்தை தூக்கி நிறுத்தினேன்"ஏய்..!இனிமேல் நீ என்ன நடந்தாலும் என்கூட பேசாமல் இருக்க கூடாது."என்றேன்.

அவள் தலையாட்டினாள் குழந்தை போல,இப்படி ஒரு பெண்ணுக்காக எதையும் இழக்கலாம்.நான் என் கோபம்,வெறுப்பு எல்லாவற்றையும் விட்டுவிட துணிந்தேன்.

"அப்புறம்...நான் இந்த முறை state champion ship match ல் கலந்துக்கறேன்."என்றேன்.

[/size] அவள் சட்டென நிமிர்ந்து கேட்டாள் "நிஜமா".நான் அவள் தலையில் கைவைத்து கூறினேன் "சத்தியமா".
Like Reply


Messages In This Thread
RE: நினைத்தாலே இனிக்கும் - by johnypowas - 01-05-2019, 09:49 AM



Users browsing this thread: 3 Guest(s)