என் வாழ்வே உன்னோடுதான் -சசிரேகா
#18
தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகா
[Image: evut.jpg]
கொடைக்கானல்
விடிந்தது
படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தவளுக்கு திடீரென விழிப்பு வர கண்களை மெல்ல விழித்து சுற்றிலும் பார்த்து கொட்டாவி விட்டபடியே எழுந்து அமர்ந்தாள் யாமினி.

சோம்பல் முறித்துவிட்டு தன் மீதிருந்த போர்வையை விலக்கியவள் கலைந்திருந்த தனது உடைகளை கண்டு திடுக்கிட்டு சுற்று முற்றும் பார்த்தாள் யாரும் இல்லாமல் போகவே அவசரமாக உடைகளை சரிசெய்தவளுக்கு தனது கழுத்தை ஏதோ ஒன்று உறுத்துவதாக தோன்ற என்ன ஏது என தடவி பார்க்க அங்கு தாலி இருக்கவே அவளது மூளையில் ஒரு மின்சார தாக்குதல் உருவானது. சட்டென நேற்று இரவு நடந்த விசயங்களை கண் இமைக்கும் நேரத்தில் நினைத்துப்பார்த்து திகைத்தாள்
”நேத்ரனுக்கு பயந்து இங்க வந்து ஆதிகூட ஒரு நாள் நைட் தங்கியிருக்கோம் எப்படி நமக்கு இவ்ளோ தைரியம் வந்துச்சி. நேத்ரன் கிட்ட மறுபடியும் மாட்டிக்க கூடாதுங்கற ஜாக்கிரதையா இல்லை ஆதி மேல இருந்த நம்பிக்கையா ஆனாலும், ஆதி நம்மகிட்ட எதுவும் தப்பா நடந்துக்கலையே பார்க்க கரடு முரடா இருந்தாலும் அவனுக்கு இளகின மனசுதான் அர்த்த ராத்திரியில ஒரு பொண்ணு வந்தா வாய்ப்பு கிடைச்சதேன்னு அவள்கிட்ட முறையில்லாம நடந்துக்காம பாதுகாப்பு கொடுத்தானே பரவாயில்லை நல்லவனாதான் இருக்கான்” என நினைத்தவளின் கண்கள் மறுபடியும் தாலியைப் பார்த்துவிட்டு ஆதியின் நினைவு வரவே சட்டென அறையை பதற்றமாக சுற்றி சுற்றிப் பார்த்தாள்
அய்யோ என் திடீர் புருஷனை காணலையே இப்பதானே நல்லவன்னு சர்டிபிகேட் கொடுத்தேன் அதுக்குள்ள சொல்லாம கொள்ளாம போகலாமா அட்ரஸ் போன் நெம்பர் எதுவும் அவருகிட்டயிருந்து வாங்கலையே நான் எங்கேன்னு போய் அவரைத் தேடுவேன்” என அலறி அடித்துக் கொண்டு எழுந்தவள் அறைக்கதவை திறக்க முயல அது வெளிப்பக்கமாக பூட்டியிருக்கவும் அமைதியாக யோசித்தாள்

”என்னது கதவு வெளிய தாப்பா போட்டிருக்கு அப்படின்னா என்ன அர்த்தம் ஆதி திரும்பி வருவான்னு அர்த்தமா அதான் கதவை தாப்பா போட்டானா சரி சரி அவன் வர்றதுக்குள்ள குளிச்சிட்டு வந்துரலாம் அவன் வந்தப்பின்னாடி என்னென்ன பிரச்சனை வருமோ எதுக்கும் நாம தயாரா இருக்கனும் ஒருவேளை பசிக்குதுன்னு சாப்பிட போயிருப்பாரா நல்லவனா இருந்தா வர்றப்பவே எனக்கும் சேர்த்து ஒரு டிபன் பார்சல் வாங்கி வந்திரனும் ரொம்ப பசிக்குது அவர் வர்றப்ப நாம என்ன பேசனும்னு இப்பவே யோசிச்சி வைச்சிக்கனும் அப்பதான் டக்டக்னு பேசிட முடியும் அவர் முகத்தில எக்ஸ்பிரஷனே காட்டமாட்டேங்கறாரே அவர் எதை நினைக்கறார்ன்னு எப்படி நான் புரிஞ்சிக்கறது என்ன செய்யறது இப்ப” என பயங்கரமாக யோசித்தவள் சட்டென தன் செல்போனை தேடி எடுத்துப் பார்த்தாள். மணி காலை 9 என காட்ட

”சரி அவர் வர்றதுக்குள்ள ஒரு குளியல் போட்டு அப்புறமா யோசிப்போம்” என நினைத்தவள் தன் பெட்டியில் இருந்து டவலையும் நைட்டியையும் எடுத்துக்கொண்டு குளிக்க பாத்ரூமிற்குள் சென்றாள்.

அரை மணி நேரம் கழித்து கதவை திறந்து நைட்டியுடன் வெளியே வந்தாள் யாமினி. அங்கு கட்டிலில் ஒரு நடுத்தர வயது பெண்மணியுடன் ஆதி உட்கார்ந்து இருக்கவே அதை கவனிக்காமல் வெளியே வந்த யாமினைியைப் பார்த்தவன் அவளை நைட்டியில் ஏற இறங்கப் பார்த்துவிட்டு ஷாக் அடித்தது போல் எழுந்து வெளியே ஓடி கதவை சாத்தினான் ஆதி.

அதைப் பார்த்தவள் தன்னையும் ஒரு முறை பார்த்துவிட்டு

”நான்தானே பொண்ணு நான் தானே ஓடனும் இவன் ஏன் ஓடறான் அவ்ளோ கேவலமாவா நாம இருக்கோம் இல்லை நம்மால பிரச்சனை வரும்னு பயந்து ஓடறானா” என கதவை பார்த்து முணுமுணுத்தவள் திரும்பி அந்த பெண்மணியை பார்த்தாள். அவரிடம் வந்து

”நீங்க யாருங்க” என கேட்க அவர் சிரித்தபடியே
”ஓ சாரி வணக்கம் சாரி நான் இன்னும் ட்ரெஸ் பண்ணலை 2 மினிட்ஸ் இருங்க இதோ வரேன்” என வேகமாக தன் பையில் இருந்து சுடிதார் எடுத்தவள் ஓடிச்சென்று பாத்ரூமில் நுழைந்து அவசர கதியில் அதை மாட்டிக்கொண்டு அவர் முன் வந்து நின்றாள்.

அவரோ அவளை ஏற இறங்க பார்த்துவிட்டு தான் ஏற்கனவே கையில் கொண்டு வந்திருந்த குங்கும சிமிழ் திறந்து தன் ஒரு விரலால் குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் வைத்துவிட்டு
”நீ ரொம்ப அழகாயிருக்கம்மா” என பாசமுடன் சொல்ல அதற்கு யாமினியோ சிரித்தபடியே
”தாங்கஸ் அத்தை ஆங் உங்களை அத்தைன்னு நான் கூப்பிடலாமா” என தயக்கமாக கேட்க
“தாராளமா கூப்பிடும்மா ஆதி நேத்து ராத்திரி நடந்ததை சொன்னான்” என சொல்ல அவளோ சந்தேகமாக
”என்னது அவர் பேசுவாரா நான் அவரை ஊமைன்னு நினைச்சேன்”

”இல்லைம்மா நல்லா பேசுவான் இங்கிருந்து கத்தினான்னா தூரத்தில இருக்கறவனுக்கு கூட பிசிறுதட்டாம கேட்கும் நல்ல குரல்வளம் அவனுக்கு”
”அப்புறம் ஏன் எதுவும் பேசமாட்டேங்கறாரு”
”நான் ஆதியோட அம்மா என் பேரு சுமித்ரா”

அது ஒரு கதைம்மா” என சலிப்பாக சொன்னவரிடம் ஆர்வமாக கேட்டாள் யாமினி

”என்ன கதை”
”எங்க வீட்ல ஒரு திருட்டு நடந்திடுச்சி பரம்பரை நகைகள் திருடு போயிடுச்சி அதுக்கு காரணம் ஆதின்னு சொல்லி அவனுக்கு என் மாமனார் ஈஸ்வர மூர்த்தி தண்டனை கொடுத்திட்டாரு”
என்ன தண்டனை”

”நகைங்க கிடைக்கறவரைக்கும் அந்த வீட்ல வேலைக்காரனா மத்தவங்க சொல்றத செய்ற அடிமையா இருக்கனும்னும் யாருகிட்டேயும் ஒரு வார்த்தை கூட அவன் பேசாம இருக்கனும்னு சொல்லிட்டாரு”

“ஏன் இப்படி சொல்லனும் அவரா அந்த நகைகளை திருடினாரு”

”அவன் திருடலைம்மா ஆனா அந்த இடத்தில அந்நேரம் அவன் இருந்தான்.”

”சரி அதுக்காக இப்படியா தண்டனை தரனும் போலீஸ்க்கு போயிருக்கலாமே”

”மழைக்கு கூட எங்க குடும்பத்தை சேர்ந்தவங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒதுங்கமாட்டாங்க வீராப்பு அதிகம்”

”ஓ பாவம் சரி இது எப்ப நடந்திச்சி”

”இது நடந்து 5 வருஷமாச்சி”

”மைகாட் 5 வருஷமா இன்னுமா அந்த நகைகள் கிடைக்கலை”

”இல்லையே”

“தேடலையா”
”ஆதியும் தேடினான் ஆனா கிடைக்கலை”
”ஒரு வேளை திருடன் எடுத்துட்டு போய் வித்திருக்கலாம்”

”இல்லைம்மா அன்னிக்கு வீட்டை விட்டு யாரும் வெளிய போகலைன்னு ஆதி உறுதியா சொல்றான்”

”அப்ப திருடியவன் வீட்டுக்கு உள்ளதான் இருக்கான். திருடின பொருளும் உங்க வீட்லதான் இருக்கனும்”

”ஆமாம்மா ஆனா அது எங்கன்னுதான் தெரியலை ஆதியும் இந்த 4 வருஷத்தில எங்க வீட்டையே சலிச்சி தேடி பார்த்துட்டான். கிடைக்கலை அப்புறம்தான் தன் விதியை நினைச்சிட்டு 1 வருஷமா இப்படி மரக்கட்டை மாதிரி அலையறான்”

”ஓ அதானா குளிரான ஏரித் தண்ணியில நின்னப்ப கூட அவருக்கு சுரனையே வரலை”

“இந்த வீட்ல இருக்கறவங்க திட்டி அவனை அவமானப்படுத்தி பேசக்கூடாத பேச்செல்லாம் பேசி செய்யக்கூடாத வேலையெல்லாம் அவனை வைச்சி செஞ்சி சே அவனை உயிரோடவே பொணமாக்கிட்டாங்க” என வருத்தப்பட்டார் சுமித்ரா

”சரிங்க அத்தை என்னைப்பத்தி அவர் உங்ககிட்ட எப்படி சொன்னாரு உங்க கிட்ட மட்டும் பேசுவாரா”

”இல்லைம்மா யார்கிட்டயும் பேசமாட்டான். காலையில என்கிட்ட வந்து ஒரு பேப்பர்ல எழுதி காட்டினான். அதான் நான் உன்னை பார்க்க வந்தேன்”

”ஓ அப்படியா சாரி அத்தை என்னாலதான் உங்க பையன் மாட்டிக்கிட்டாரு. நேத்து போலீஸ் வராம இருந்திருந்தா இப்ப நான் என் வீட்டுக்கு போயிருப்பேன். இப்பவும் நான் என் வீட்டுக்கு போகலாம் ஏன்னா இப்படி ஆனது யாருக்கும் நான் சொல்லலை நீங்களும் வெளியே சொல்லிடாதீங்க”

”சரிம்மா நான் சொல்லலை அப்படி சொன்னா பாவம் உன்னையும் எங்க வீட்டுக்கு இழுத்துட்டு வந்து அவனை மாதிரியே உன்னையும் அடிமையாக்கிடுவாங்க ஏற்கனவே நானும் என் பையனும் வேலைக்காரங்களா ஆயிட்டோம் நீயும் வேலைக்காரியா ஆக வேணாம்மா நீ கிளம்பு உன் வீட்டுக்கு போ”

”இது வேறயா ஆமா நீங்க எப்படி இப்படி உங்களையுமா அடிமையாக்கிட்டாங்க”

”அவனோட அம்மாங்கறதாலயும் சரியான வளர்ப்பு இல்லைங்கறதாலயும் என்னை வீட்டு சமையல்காரியா மாத்திட்டாங்க. என்னோட மதிப்பு மரியாதையும் பறிச்சிட்டாங்க”

“ஓ அப்ப நான் வந்தாலும் அதே நிலைமையா சே இது அநியாயம்”

”சரி விடும்மா அந்த வீட்ல நியாயம் அநியாயம் எல்லாம் எடுபடாது”

”அதான் நகைங்க கிடைக்கலையே இன்னும் எத்தனை வருஷம்தான் ஆதி இப்படியே பேசாம இருப்பாராம் அந்த வீட்ல இருந்தாதானே இப்படியிருக்கனும் பேசாம அங்கிருந்து அவர் வீட்டை விட்டு வெளியே வந்துடலாமே வேற ஊர்ல பொழைச்சிக்கலாமே நீங்களும் அவர்கூட வந்துடுங்க அப்ப அவர் பேசுவார்ல” என ஆர்வமாக கேட்க

”நியாயம்தான் ஆனா ஆதிக்கு அவன் தாத்தான்னா உசுரு அவர் பேச்சை என்னிக்குமே அவன் மீறினதில்லை அவர் சொல்றதுதான் அவனுக்கு வேதவாக்கே அவரை விட்டு அவன் எங்கயும் போகமாட்டான். திருட்டுப்பழியோட அங்கிருந்து வெளியே வர அவனுக்கு பிடிக்கலை”

”ஓ அப்படியா” என வருந்தினாள் யாமினி அதற்கு சுமித்ராவும் பெருமூச்சுவிட்டு

”சரிம்மா நான் கிளம்பறேன் நேரமாச்சு” என சொல்ல

”ஆமா நீங்க எந்த ஊரு அத்தை”



”கடலூர்”
”இங்க ஏன் வந்தீங்க அத்தை”
Like Reply


Messages In This Thread
RE: என் வாழ்வே உன்னோடுதான் -சசிரேகா - by johnypowas - 01-05-2019, 09:39 AM



Users browsing this thread: 1 Guest(s)