Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
இமய மலையின் அடிவாரத்தில் பனி மனிதனின் கால் தடம்? -ராணுவ வீரர்கள் தகவல்

[Image: 201904301043592750_Indian-Army-finds-the...SECVPF.gif]

ஸ்ரீநகர்,

இமயமலையின் பனிமலைப் பகுதியில், ‘யெதி’ என்ற பனி மனிதன் வாழ்ந்ததாக, இமயமலை பகுதிகளில் வசித்த மக்கள் தங்களின் புராணக் கதைகளில் கூறிவந்தனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த சிலர் எவரெஸ்ட் பனிமைலைப் பகுதியில் பயணம் மேற்கொண்டனர். இவர்களிடம் ஹென்றி என்ற நிருபர் கடந்த 1921-ம் ஆண்டு பேட்டி எடுத்தார். அவர்கள் பனிமலைப் பகுதியில் பெரிய கால் தடத்தை பார்த்ததாக தெரிவித்தன

1942-ம் ஆண்டு இமயமலையில் பயணம் செய்த இருவர், பனிமலைப் பகுதியில் இரு ராட்ச உருவம் நடந்து சென்றதை பார்த்ததாக கூறினர். அந்த உருவங்கள் 8 அடிக்கு குறைவாகவும், தலை முழுவதும் நீண்ட முடிகளுடனும், மடிந்த காதுகளுடனும், உடலில் செம்பழுப்பு நிறத்திலான முடியும் இருந்ததாக கூறினர். 

கடந்த 1986-ம் ஆண்டு அந்தோணி உல்டிரிட்ஜ் என்ற மலை ஏறும் வீரர், 500 அடி தூரத்தில் யெதியை பார்த்ததாக, போட்டோ ஆதாரத்துடன் கூறினார். அடுத்து அவர் கூறிய இடத்துக்கு ஆராய்ச்சியாளர்கள் சென்று ஆய்வு செய்தபோது, போட்டோவில் உள்ள உருவம் அப்படியே இருந்தது. அது யெதி அல்ல, கரும் பாறை என அவர்கள் கண்டுபிடித்தனர்.

இதேபோல் இமயமலை பகுதியில் பயணம் மேற்கொண்ட பலரும் பனி மனிதன் பற்றி பலவிதமான  கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேபாளத்தில் இமயமலையின் அடிவாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ராணுவ வீரர்கள் யெதி எனப்படும் பனி மனிதனின் கால் தடத்தை கண்டதாக  தகவல் தெரிவித்துள்ளனர். பனி மனிதன் கால் தடம் மிகப்பெரியதாக இருந்ததாக ராணுவ வீரர்கள் கூறியுள்ளனர். பனி மனிதனின் கால் தடம் ராணுவ வீரர்கள் மத்தியில் ஒருவித வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 01-05-2019, 09:21 AM



Users browsing this thread: 58 Guest(s)