01-05-2019, 09:18 AM
மழையால் கைவிடப்பட்ட ஆட்டம் ! ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஷ்ரேயாஸ் கோபால்
விராட்கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான 49-வது லீக் போட்டி நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பெங்களூரு அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்யவிருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் துவங்குவது காலதாமதம் ஆனது.
இதனிடையே பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் 5 ஓவர் கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டது.
பெங்களூரு அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே பெங்களூரு அணி 6 பந்துகளை சந்தித்து 23 ரன்களை எடுத்து தனது ஆட்டத்தை துவக்கியது.
ஆனால் சற்றும் எதிர்பார்காத நிலையில் ஷ்ரேயாஸ் கோபால் பந்து வீச்சில் விராட் கோலி (25), டி வில்லியர்ஸ் (10), மாகர்ஸ் ஸ்டாய்னிஸ் (0) என்ற எண்ணிக்கையில் அடுத்தடுத்து அவுட்டானார்கள். ஷ்ரேயாஸ் கோபால் தனது பந்து வீச்சில் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தினார்.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவரில் பெங்களூரு அணி 7 விக்கெட்களை இழந்து 62 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 63 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன், லிவிங்ஸ்டோன் களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் விக்கெட் இழப்பு ஏதுமின்றி 10 ரன்கள் எடுத்தது.
இதனிடையயே 3.3 ஓவரின் போது மழை மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டதாக நடுவரால் அறிவிக்கப்பட்டது.