20-12-2018, 09:48 AM
இன்ஃபினிட்டி N11-னில் 2 GB ரேம் உள்ளது, இதன் விலை 8,999 ரூபாய் மற்றும் இன்ஃபினிட்டி N12-ல் 3 GB ரேம் உள்ளது இதன் விலை 9,999 ரூபாய். இரண்டிலும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. இதை மேலும் மெமரி கார்டு மூலமாக நீட்டித்துக்கொள்ளவும் முடியும். அதற்காக ஒரே நேரத்தில் இரண்டு சிம் கார்டு மற்றும் ஒரு மெமரி கார்டை பயன்படுத்தும் வகையிலான சிம் ஸ்லாட்டும் உள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் வரும் 25-ம் தேதி முதல் ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் விற்பனைக்கு வருகின்றன. இந்திய மொபைல் சந்தையை எடுத்துக்கொண்டால் அதிக போட்டி இருப்பது பட்ஜெட் செக்மென்டில்தான். இதில் முதல் ஐந்து இடங்களில் ஷியோமி, ஒப்போ, விவோ எனச் சீன நிறுவனங்களே அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளன. ஒரு வேளை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் செயல்பட்டால் மைக்ரோமேக்ஸ் தற்பொழுது பிடித்திருக்கும் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள வாய்ப்புண்டு.