Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
#56
[Image: menu_13390.jpg]

``அம்மா இட்லி சாபிட்டார்கள்'' என மூளையின் ஸ்பார்க் அடிக்க.. ``சார் இட்லி என்ன விலை?'' என்றோம். ``மூன்று இட்லி கொண்ட ஒரு பிளேட் 44 ரூபாய்'' என்றார் கேஷியர். ஜூஸ் அயிட்டங்களும் இங்கே விற்கிறார்கள். இந்த ரெஸ்ட்டாரன்டை ஒட்டியே பெரிய கிச்சனும் இருக்கிறது. இதுதவிர இதே மெயின் பிளாக்கில் இன்னோரு இடத்திலும் ரெஸ்ட்டாரன்ட்டும் உள்ளது. இது தவிர சின்ன காபி ஷாப்பும் உண்டு. அடுத்து சிந்தூரி பிளாக்கில் உள்ள ரெஸ்ட்டாரன்ட்டுக்குப் போனோம். அந்த ரெஸ்ட்டாரன்ட்டுக்கு பெயர் Le Bistra. கொஞ்சம் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு இருக்கிறது அந்த ரெஸ்ட்டாரன்ட். முற்றிலும் ஏஸி வசதி செய்யப்பட்டிருக்கிறது. டேபிளில் உட்கார்ந்தால் ஆர்டர் எடுக்கிறார்கள். இங்கேயும் இட்லியை ருசி பார்த்தோம். அதே மூன்று இட்லி கொண்ட ஒரு பிளேட் 58 ரூபாய். இங்கே விலைப்பட்டியல் உண்டு. அசைவமும் கிடைக்கிறது. இங்கே உள்ள உணவுகளில் மிகக் குறைவாக உள்ள விலையுள்ள உணவு பட்டர் மில்க்தான். விலை 30 ரூபாய். அதிக விலையுள்ள உணவுப் பொருள் கிரில்டு ஃபிஸ் 330 ரூபாய்.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 20-12-2018, 09:40 AM



Users browsing this thread: 44 Guest(s)