20-12-2018, 09:37 AM
சென்னை அப்போலோவில் இட்லி என்ன விலை? ஜெயலலிதா உணவு பில் பின்னணி
ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெற்றதற்கான செலவு விவரங்களை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு வைத்திருக்கிறது அப்போலோ நிர்வாகம்.
[img=500x0]https://image.vikatan.com/news/2018/12/19/images/appo_13439.jpg[/img]
ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த 75 நாள்களுக்கு ஆன மொத்த செலவு 6 கோடியே 85 லட்சத்து 69 ஆயிரத்து 584 ரூபாய். இதில் உணவு செலவு மட்டும் 1 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 925 ரூபாய். ``ஜெயலலிதா போயஸ் கார்டனில் இருந்தால்கூட இவ்வளவு ரூபாய் உணவுக்கு செலவாகியிருக்காது. இது ஜெயலலிதாவுக்கு மட்டும் வழங்கப்பட்ட செலவாக இருக்க வாய்ப்பில்லை. சசிகலா குடும்பத்தினர் அங்கேதான் தங்கியிருந்தார்கள். அமைச்சர்கள், அதிகாரிகள் அடிக்கடி விசிட் அடித்தார்கள். அவர்களுக்கான உணவு, தேநீர் அனைத்தும் இந்தச் செலவில் சேர்க்கப்பட்டிருக்கலாம்” எனவும் சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அப்போலோவில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கும் உணவு வழங்கினார்கள். அந்தச் செலவும் இதில் சேர்க்கப்பட்டதா எனத் தெரியவில்லை. சராசரியாக ஒரு நாளைக்கு மட்டும் 1.56 லட்சம் ரூபாய் உணவுக்காக செலவழித்திருக்கிறார்கள்.
[img=500x0]https://image.vikatan.com/news/2018/12/19/images/barkath_13189.jpg[/img]