20-12-2018, 09:33 AM
பழங்கால குற்றச்சாட்டு
போலீஸ் உள்விவகாரங்களை வெளியில் பேசுவது முறையானது தானா? என் மீதான புகார்களுக்கு அவர்களால் ஆதாரங்கள் அளிக்க முடியுமா? புகார் கூறியவர்கள், பணி காலத்தில் இடமாற்றம் கேட்டு விண்ணப்பித்திருக்க வேண்டும். என்னிடம் நேரடியாகவோ, இமெயில் மூலமோ மனு அளித்திருக்க வேண்டும். அவர்களை பணியாற்றிய போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் மனு அளித்திருக்க வேண்டும். ஆனால், புகார் கூறிய ஒருவர் கூட மனு அளிக்கவில்லை. 6 மாத பணி காலம் முடிந்த பிறகு 3 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர்.
வழக்கின் நிலையை கொடுத்துவிட்டு செல்வதாக இருந்தால் யாரையும் நான் கட்டாயப்படுத்த முடியாது. கடமைகளை செய்யாத யாரையும் பணியில் இருந்து விடுவிக்க முடியாது. அவதூறு பேசுவது மன உளைச்சலை ஏற்படுத்துவது என்பது எல்லாம் பழங்கால குற்றச்சாட்டு. போலீசார் எனக்கு எதிராக திரும்புவதாக கருதவில்லை. தனி ஆளாக போராடுகிறேன்.
சட்ட அறிவு இல்லை
சிலை கடத்தல் தடுப்பு வழக்கில், போதிய ஆவணம், ஆதாரம் இல்லாமல் யாரையும் ரிமாண்ட் செய்ய முடியாது. எனக்கு எதிரான வழக்கில் பின்னடைவு ஏற்பட்டதால், சிலர் பிரச்னை செய்கின்றனர். அறநிலையத்துறை அதிகாரி கவிதாவை கைது செய்த மறுநாள், வழக்கை சிபிஐக்கு மாற்றுகிறாரகள். அடிப்படை ஆதாரம் இல்லாமல் எப்ஐஆர் போட சொன்னதாக கூறியவர்களுக்கு சட்ட அறிவு கிடையாது.
புகாரை வாங்கியவர்களுக்கும் சட்ட அறிவு கிடையாது. விருப்பப்பட்டு இருப்பவர்களை வைத்து தொடர்ந்து பணியாற்றுவேன்.விரும்பி வரும் போலீசாரை வைத்து சிலைகளை மீட்டு கொண்டு வருவேன். மனஉளைச்சல் இருப்பதாக கூறியவர்களுக்கு போலீசாக இருக்க தகுதி கிடையாது.
மக்களின் வரிப்பணத்தில் சாப்பிட்டு விட்டு, மன உளைச்சல் என கூறினால், அவர்கள் போலீசே கிடையாது. குறையில்லாமல் வேலை பார்க்கிறேன். என்னை நம்பலாம்.நல்ல எண்ணங்களும், ஆன்மிகமும் தான் என்னை செலுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்க மறுப்பு
இதனிடையே, பொன்.மாணிக்கவேல் மீது போலீசார் புகார் அளித்த விவகாரத்தில் தலையிட ஐகோர்ட் மறுத்து விட்டது. ஆவணங்கள் இல்லாமல் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது எனக்கூறிவிட்டது.