Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
#52
தனி ஆளாக போராடுகிறேன்: பொன்.மாணிக்கவேல்
சென்னை: சிலை கடத்தல் வழக்கில் போலீசார் எனக்கு எதிராக திரும்பியதாக கருதவில்லை. தனி ஆளாக போராடுகிறேன் என சிலை கடத்தல் தடுப்பு வழக்கின் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் கூறினார்.

'மாநில, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, சிறப்பு அதிகாரி, பொன் மாணிக்க வேல், பொய் வழக்கு பதிவு செய்யச் சொல்லி மிரட்டுகிறார்' என, டி.ஜி.பி., அலுவலகத்தில், போலீஸ்காரர்கள் புகார் அளித்துள்ளனர். இன்றும் சில போலீசார் புகார் அளித்தனர்.




பரிதாபம்

இது தொடர்பாக நிருபர்களை சந்தித்த பொன்.மாணிக்கவேல் கூறியதாவது: என் மீதான குற்றச்சாட்டுகள் எதிர்பா்த்தது தான். சிலை கடத்தல் சிறப்பு அதிகாரியாக ஐகோர்ட் தான் என்னை நியமித்தது. என் மீது புகார் கூறிய 21 பேரும் 400 நாளில் ஒரு வழக்குப்பதிவு கூட செய்யவில்லை. அவர்கள், ஒரு குற்றவாளியை கூட கைது செய்யவில்லை. அவர்களின் முகத்தைக் கூட டிவியில் பார்க்கவில்லை. அவர்கள் மீது பரிதாபம் தான் வருகிறது. அவர்களின் பின்னால் இருந்து சிலர் இயக்குகிறார்கள்.








கைது செய்யவில்லை
250 நாட்களாக பணிக்கு வராத ஒருவரை, மீண்டும் பணியில் சேர்க்க முடியாது. ஆனால், ஊழல் தடுப்பு பணிக்கு நியமிக்கின்றனர். மீண்டும் எப்படி பணிக்கு எடுக்க முடியும். வழக்கை முறையாக விசாரிக்காத அதிகாரிகளால் எங்களுக்கு தான் மன உளைச்சல் ஏற்படுகிறது. 
பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவில் வழக்கை எங்களிடம் நீதிமன்றம் ஒப்படைத்துதது. பசுபதீஸ்வர் கோவில் வழக்கை ஒப்படைத்த பிறகு, விசாரணை அதிகாரி ஓடிவிட்டார். 5 டிஎஸ்பி 5 ஏடிஎஸ்பி தான் எனக்கு கொடுத்துள்ளனர். இவர்கள் மூலம் நான் இதுவரை ஒருத்தரை கூட கைது செய்யவில்லை. மிகக்குறைந்த போலீசாரை பயன்படுத்தி 47 பேரை கைது செய்துள்ளேன். 
இதற்கு, அந்தந்த மாவட்ட ரிசர்வ் போலீசார், உயரதிகாரிகளுக்கு தான் பெருமை கிடைக்கும். வெற்றி தோல்வி பற்றி பேசுவதற்கு இல்லை. கடமையை செய்கிறோம். சிலை கடத்தல் தடுப்பு வழக்கிற்கு ஐஜியான நானே விசாரணை அதிகாரியாக இருந்தேன். திருட்டு வழக்கில் ஐஜி ரேங்கில் உள்ள விசாரணை அதிகாரி நான் மட்டுமே
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 20-12-2018, 09:31 AM



Users browsing this thread: 87 Guest(s)